அத்தியாயம் - 28
2006ல் சித்ராலயா ஸ்ரீராம் எழுத மகேந்திரன் இயக்கத்தில் வெளியான நாடகம்,"தந்திரமுகி".கிட்டத்தட்ட 85 முறை மேடை கண்டது
எந்த ஒரு பிரச்னையையும் அதைத் தீர்க்க வித்தியாசமாக வழி வகுத்து தீர்வு காணும் "சொல்யூஷன் சுந்தரம்" என்னும் பாத்திரத்தில் நகைச்சுவையில் கலக்கினார் மகேந்திரன்
ஹரி என்பவர் தனக்கு திருமணம் நடக்க வழி கேட்டு மகேந்திரனிடம் வருகிறார்.ஹரி முற்பிறப்பில் கார் ஓட்டும் போது ஒரு பெண்ணை கார் மோதி கொன்றுவிட்டதாகவும், அதற்கு பரிகாரம் கண்டால்,ஹரிக்கு கல்யாணம் நடக்கும் என சித்தர் ஒருவர் கூறுகிறார்.கல்யாணத்திற்கு பெண் பிடிப்பதில் பல சிக்கல்கள் எழ, எல்லாவற்றையும் தகர்த்து எறிந்து ஹரிக்கு திருமணம் ஆகிறது.சூத்ரதாரி "சொல்யூஷன் சுந்தரம்:
ஆரம்பம் முதல் ரசிகர்களின் திறந்த வாய் மூடாமல், அரங்கத்தில் சிரிப்பலைகள்.
தவிர்த்து மேடையில் யானை தோன்றுவது போன்ற, மனோகர் நாடகத்திற்கிணையான தந்திரக் காட்சியும் உண்டு.
No comments:
Post a Comment