Tuesday, April 17, 2018

ஒய்ஜிபியும் யூஏஏவும் - 22

அத்தியாயம் - 22
மகேந்திரனின் கதை, இயக்கத்தில்,வெங்கட் வசனத்தில் 1998ல் மேடையேறிய நாடகம் "லைட்ஸ் ஆன்"
200 முறைகளுக்கு மேல் மேடை கண்டது
Crime subject ஆ...இல்லை
thriller ஆ ...  இல்லை
comedy ஆ...இல்லை
பின் இந்த நாடகம் எந்த வகை..
மூன்றும் கலந்த அவியல்...yes..இந்நாடகம்..ஒரு
Crime,Comedy,Thriller
நாடகத்தின் கதைக்களமே..புதிதானது
ஒரு நாடக அரங்கின் நாடகமேடையே கதை நடக்கும் இடம்
சந்தானம் ஒரு நாடக ஆசிரியர்.அவரது குழுவில் பிரதான நடிகனும் அவனே.அக்குழு இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஒரு நாடகத்தை அரங்கேற்றியது.பின்னர், குழு உடைந்ததால் நா டகம் நடக்கவில்லை.இதனிடையே, நாடகத்தில் நாயகியாய் நடித்தவள்,அடுக்கு மாடியின் உயர்தளத்திலிருந்து விழுந்த தற்கொலை செய்து கொல்கிறாள்.
ஆனால், சந்தானத்திற்கோ, அது தற்கொலையாய் இருக்காது, கொலையாய்தான் இருக்கும் என்று சந்தேகம்.இரண்டு ஆண்டுகளுக்குப் பின் , மீண்டும் நாடகம் போடுவதாய், அனைத்து நடிகர்களையும் கூட்டுகிறான்.ஒத்திகை மூலம், கொலைகாரன் யார் எனத் தீர்மானிக்கின்றான்
மகேந்திரன் இந்நாடகத்தில் அமங்கலமாகவே பேசும் தயாரிப்பாளர் பஞ்சுமோன் ஆக வந்து பட்டையைக் கிளப்புவார்.
கொலைகாரன் யார்? என்ற , நாடகத்தின் முடிவை யாரிடமும் சொல்லாதீர்கள்! என்று நாடகம் முடிவதால், நானும் கொலையாளி யார் என்பதை சொல்லப் போவதில்லை.
யுஏஏவின் மகுடத்தில் மற்றுமொரு சிறகாக இந்நாடகம் அமைந்தது,

No comments: