(யூஏஏ குழுவினர் ஜெயலலிதா, சந்தியா ஆகியோருடன்)
1962ல் அரங்கேறிய நாடகம் பட்டு எழுதிய "Hidden Truth" என்ற நாடகம்.14 காட்சிகள்
பின் சகுந்தலா என்ற பட்டு எழுதிய நாடகம்
1964ஆம் ஆண்டு..யூஏஏ விற்கு மிகவும் மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக அமைந்தது .
தில்லியில் ஒய்ஜிபி வேலை செய்துவந்த போது பூர்ணம் விஸ்வநாதன் நண்பர் ஆனார்.
பின்னர் அவர் எழுதிய "UNDER SECRETARY" என்ற நாடகத்தை, திருமதி ஒய்ஜிபி அவர்கள் யூஏஏ நாடகமாக்க விரும்புவதாக பூர்ணத்திடம் சொல்ல அவரும் இசைந்தார்.
(பூர்ணம் விஸ்வநாதன்)
(பூர்ணம் விஸ்வநாதன்)
இந்நாடகம் பல காலம் பேசப்பட்ட வெற்றி நாடகமாக அமைந்தது.50முறை மேடையேறிய இந்நாடகத்தில் தனது 16ஆவது வயதில் ஜெயலலிதா அறிமுகமானார்.அதுமட்டுமல்ல, இந்நாடகத்தில் ஜெயலலிதாவின் தாயார் சந்தியா, சித்தி வித்யாவதி ஆகியோரும் நடித்தனர்.
1965ல் அவர் வெள்ளித்திரையில் "வெண்ணிற ஆடை" படம் மூலம் அறிமுகமானாலும், திரையுலகில் முழுமூச்சில் ஈடுபடும்வரை இவர்களது நாடகங்களில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது
1965ல் யூஏஏ அரங்கேற்றிய நாடகம் P V Y ராமன் என்பவர் எழுதிய (IM)PERFECT MURDER .திரில்லர் வகையைச் சேர்ந்த இந்நாடகம் ஆசிரியருக்கு மட்டுமின்றி, யூஏஏ வின் தொப்பியில் நீண்ட சிறகாகவும் ஆனது.
"Not in the Book" என்ற ஆங்கிலக் கதையைத் தழுவியது இந்நாடகம்.இக்கதை நாடகத்திற்கு ஏற்றது என நினைத்த ஒய்ஜி பிரிட்டிஷ் கவுன்சில் அலுவலகம் மூலமாக , கதை எழுதியவரிடம் தொடர்பு கொண்டு அதிகாரப் பூர்வ அனுமதியினைப் பெற்றார்.ஒரு கதாசிரியரின் கற்பனையை மறந்தும் திருடிவிடக்கூடாது என்பதில் உறுதியாய் ஒய்ஜிபி இருந்ததை இதன் மூலம் அறியலாம்
இப்போதும் இந்நாடகம் பார்த்தவர்களிடம் கேட்டால் இந்நாடகத்தினைப் பற்றிப் போற்றிக் கூறுவர்.1965லேயே 200 முறைகளுக்கு மேல் இந்நாடகம் நடந்தது என்பது பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்

No comments:
Post a Comment