Tuesday, April 17, 2018

ஒய்ஜிபியும் யுஏஏவும் - 20

அத்தியாயம் - 20

1991ல் அரங்கேறிய நாடகம் "வேல் வேல் வெற்றிவேல்" கோபு-பாபு எழுதிய இந்த நாடகம், கடவுளுக்கும், அவரது பக்தனுக்கும் ஏற்பட்டசிறு பிணக்கை மையமாகக் கொண்டது.90 முறை மேடையேறியது

1992ல் வியட்நாம் வீடு சுந்தரம் எழுதிய "Mr Brain" நாடகம் 75 காட்சிகள் நடந்தது.
1993ல் வெண்ணிற ஆடை மூர்த்தி எழுதிய "லட்சுமி கல்யாண வைபோகமே" என்ற நாடகத்தை மகேந்திரன் அரங்கேற்றினார்.ஒரு பழமை மாறாத கிராமத்தை கண்முன் கொணர்ந்து விட்டார் இந்நாடகத்தில்.அந்தக் கிராமத்தை மையமாகக் கொண்டது இந்நாடகம்

1993ல் மகேந்திரனின் கதை, இயக்கத்தில் வெளியான நாடகம் :வசூல் சக்கரவர்த்தி" 120 முறைகளுக்கு மேல் நடந்தது .வசனம் தினகர்.தேச ஒற்றுமையை மையமாகக் கொண்ட நாடகம்

1994ல் வெங்கட் வசனம் எழுத ஒய் ஜி எம்மின் கதை, இயக்கத்தில் வந்த நாடகம் "செய்திகள் வாசிப்பது யூஏஏ".200 முறைகளுக்கு மேல் மேடையேறியது.பணம் காசினை விட மனித நேயம் முக்கியம் என்பதைச் சொன்னது.இந்நாடகம் பற்றிய ஒரு பத்திரிகை விமரிசனத்தில் குறிப்பிட்டிருந்த கீழ்கண்ட லைன்ஸ் மட்டுமே போதும்
"Purposeful Play coated with unpolluted comedy and a bus load of hilarious sequences"

No comments: