"எனது ஒவ்வொரு நாடகமும் நகைச்சுவையை இலக்காகக் கொண்டிருந்தாலும், முடிவில் மக்களுக்கு ஒரு மெஸ்சேஜும் இருக்கும்" என்பார் மகேந்திரன்.
அபராஜிதன் என்பவர் எழுதிய "அந்த ஏழு ஆட்கள்" என்ற நாடகம் மகேந்திரன் இயக்கத்தில் 1990ல் அரங்கேறி 200 முறைகளுக்கு மேல் நடந்தது.இந்நாடகமும் அதை உணர்த்தியது.
ஒருவரைப் போல 7 நபர்கள் இருப்பார்கள் என சொல்வதுண்டு.அதை மையமாக வைத்து அரங்கேறிய இந்நாடகத்தில் மகேந்திரன் 7 வேடங்களில் நடித்தார்.
நாடகம் பற்றிக் கேள்விப்பட்ட சிவாஜிகூட "இன்னும் இரண்டு வேடம் சேர்த்துவிடுவதுதானே! .நவராத்திக்கு சமமாகிவிடுமே" என்று கிண்டலடித்தாராம்.பின் விவரங்களைக் கேட்டறிந்தாராம்.
"ஒவ்வொரு பாத்திரத்திற்கும் டிரஸ் மற்றும் மேக்கப்பில் வித்தியாசம் காண்பிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.கண்களில்,பேசும் விதத்தில்,நடையில்,உடல் அசைவில், குரலில் மாற்றங்களைக் காண்பித்தாலெ பிரமாதமாக அமையும்"என்றும் சொன்னாராம்
நாடகத்தின் வெற்றிக்கு நடிகர் திலகத்தின் இந்த ஆலோசனைகள் மிகவும் உபயோகமாக அமைந்தது எனலாம் என்கிறார் மகேந்திரன்
சத்யா என்றொரு கிரிமினல்
மனோகர் எனும் வருமானவரித்துறை அதிகாரி
சமஸ்கிருத பேராசிரியர் பதஞ்சலிசர்மா சைக்கியாட் ரிஸ்ட் கண்ணன்
துப்பறிவாளர்
சுவாமி கோகுலாநந்தா (குள்ளச் சாமியார்)
இயக்குநர் ஒய்ஜிஎம்
ஆகிய ஏழு வேடங்களில் நடித்தார் மகேந்திரன்
குள்ள சாமியார் வேடத்திற்கு, கமல் ஹாசனும்,பாண்டியராஜனும் ஸ்பெசலாக டிரஸ் தைக்க, ஷூக்களுக்கு உதவினார்களாம்.
மகேந்திரனின் நடிப்புப் பசிக்கு நல்ல தீனி போட்ட நாடகம் இது என்றால் மிகையில்லை
No comments:
Post a Comment