அத்தியாயம் - 24
"காவலா காவலா" இது கோவை அனுராதா எழுத 2001ல் யுஏஏ அரங்கேற்றிய நாடகம்.60 முறைகள் மேடையேறியது
துணுக்குத் தோரணமாக நாடகம் இல்லாமல், தன் நாடகங்களில் ஒரு மெஸ்சேஜ் இருக்க வேண்டும் என நினைப்பவர் மகேந்திரன் என முன்னமேயே சொன்னோம்.இந்நாடகமும் அபப்டித்தான்.
நாடகம் சொல்லும் மெஸ்சேஜ்- உண்மைக்கும், சத்தியத்திற்கும் என்றும் தோல்வியில்லை என்பதே
காவல்துறையில் எவ்வளவுதான் நேர்மையாய் இருந்தாலும், நடைமுறையில் சாத்தியமில்லை எனபதை வெளிச்சம் போட்டுக் காட்டிய நாடகம்.
ஹெட் கான்ஸ்டபிள் ஒருவருக்கு வீட்டிலும், வேலை செய்யும் இடத்திலும் சந்திக்க நேரிடும் சோதனைகளே நாடகத்தின் மையம்.பணியில் இருக்கையில், மறைந்த அவரது தமிழ் ஆசிரியர் நல்வழி போதிப்பது நாடகத்தின் ஹைலைட் எனலாம்
மேலதிகாரியின் திட்டமிட்ட சதியால் மாட்டிக் கொள்ளும் ஹெட்கான்ஸ்டபிளை அவர் மாமனார் பஞ்சநாதம் (ஒய்ஜிஎம்), திறமையாக வாதாடி விடுவிக்கிறார்.
தனது குரு சிவாஜியை நினைவுப்ப்டுத்தும் "கௌரவம்" பாணியில், மகேந்திரனின் வக்கீல் நடிப்பு நாடக வெற்றிக்குக் காரணமாக அமைந்தது எனலாம்
அத்தியாயம் - 25
ஜட்ஜ்மென்ட் டே நாடகத்தைப் பார்த்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அனுப்பியிருந்த பாராட்டுக் கடிதம்
2003ல் முரளி (உ வே சாமிநாத ஐயர் வம்சத்தைச் சேர்ந்தவர்) என்பவர் எழுத,மகேந்திரன் இயக்கத்தில் வந்த நாடகம் "ஜட்ஜ்மென்ட் டே".112 முறைகள் மேடை கண்டது
நகைச்சுவை,சமூக சிந்தனை,நாட்டு நடப்புகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டியுள்ளது கட்சி பாகுபாடின்றி
அரசியல்வாதிகள் போலீஸ் அதிகாரிகளை கையில் வைத்துக் கொண்டு பயமுறுத்தி காரியங்கள் சாதிப்பதை அழகாகச் சொல்லியுள்ளனர்
நகைச்சுவைக்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு-
நிருபர்- உங்கக் கட்சிப் பெயர்.
தமிழழகன்- அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ ஃ கட்சி.
நிருபர் - இது உயிர் எழுத்துகள் இல்லையா
தமிழழகன்- ஆமாம்.ஆனா எங்கக் கட்சிப் பேரை சொல்லாம தமிழ்நாட்டிலே யாரும் படிக்கமுடியாது.எதிர்க்கட்சிக் காரங்க குழந்தைகள் கூட என் கட்சிப் பெயரைத்தான் முதல்லே கத்துக்கணும்
No comments:
Post a Comment