1989ல் அரங்கேறிய நாடகம் வெங்கட் எழுதிய "இது நியாயமா சார்"
மீரா, ராகுல் இருவரும் காதலர்கள்.
ஒருநாள், திடீரென மீரா கொலை செய்யபப்டுகிறாள்.வழக்கை விசாரித்த நீதிபதி, ராகுலே கொலை செய்ததாகக் கூறி தண்டனை விதிக்கிறார்.
ஒருநாள், ஊருக்கு ஒதுக்குப் புறமாக வாழும் நீதிபதியின் வீட்டிற்குள் சிறையிலிருந்து தப்பிய ராகுல் நுழைந்துவிடுகிறான்
தான் ஒரு நிரபராதி.மீராவை நான் கொலை செய்யவில்லை என்கிறான்.தவிர்த்து, அதற்கு சாட்சிச் சொன்ன ஆசிரியர் ஜோசப்,விடியோ நாதன்,டாக்டர் ஷோபா,வழக்கறிஞர்..ஆகியோரையும் அவ்வீட்ட்ற்குள் கடத்தி வந்து விடுகிறான்.அவர்களுக்கு சமையல் செய்துபோட பிச்சுமணி எனும் அமையல்காரர்.பிச்சுமணியின் உதவியுடன், கொலைகாரன் யார் என்பதை கண்டுபிடித்து, வழக்கை மீண்டும் விசாரிக்க வைத்து நியாயத்தைப் பெறுகிறான் ராகுல்.
சரிவர விசாரிக்காமல், தீர்ப்புகள் வழங்கிவிடக் கூடாது என்பதை அழகாக சொல்லியிருக்கிறார்கள்.
சமையல்காரனாக வரும் பிச்சுமணி பாத்திரத்தில் தூள் கிளப்புவார் மகேந்திரன்.
அருமையான நடிப்பு, அழகான வசனங்கள் எல்லாம் இணைந்து இந்நாடகம் மாபெரும் வெற்றி பெற்றது.250 முறைகளுக்கு மேல் நடந்தது இந்நாடகம்.
நாடகத்தில் வரும் வசனங்களில் ஒரு முத்து வசனம் கீழே..
"குற்றவாளி என உறுதியாகும் வரை குற்றம் சாட்டப்பட்ட நபர் நிரபராதி எனக் கருதப்படுகிறது அயல்நாட்டில்..
நிரபராதி என உறுதியாகி வரும் வரை குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளியாகக் கருதப்படுகிறது நம் நாட்டில்'
வெல்டன் வெங்கட்
No comments:
Post a Comment