கண் தெரியாத பெண் ஒருத்தர் விட்டில், அவளைக் கொலை செய்யும் நோக்கில் கொலைகாரன் நுழைந்திட, அவள் எப்படித் தப்பிக்கிறாள் என்பதே மையக்கரு.(ஆங்கிலப்படமான "wail until dark" படத்தின் சாயல்.தழுவல் என்றும் சொல்லலாம்)
மகேந்திரன் தனது 11ஆவது வயதில் நாடகமேடை ஏறினார்.அவரது மகள் மதுவந்தி தனது 19ஆவது வயதில், யூஏஏ வில் மேடை யேறினார்.ஆம்., மதுவந்தி நாடகங்களில் அறிமுகம் ஆன முதல் நாடகம்.
இறுதிக் காட்சியில் அவரது நடிப்பு..அப்பப்பா
தாத்தா ஒய்ஜிபி எட்டடி பாய்ந்தார்
மகன் மகேந்திரன் 16 அடி பாய்ந்தார்
பேத்தி முதல் நாடகத்திலேயே 32 அடி பாய்ந்துவிட்டார்.
இதில் என்ன ஆச்சரியம்.."மீன் குஞ்சிற்கு நீந்தக் கற்றுக்கொடுக்கணுமா?" என்கிறீர்களா?
இந்நாடகத்தில் revolving stage முறையை மகேந்திரன் அமைத்ததும் வெற்றிக்கு ஒரு காரணமாய் அமைந்தது எனலாம்.
அடுத்து.."லைட்ஸ் ஆன்:"தான்.என்ன புரியவில்லையா?இவர்களின் அடுத்த நாடகம் தான்.அதைப்பார்ப்போம்
No comments:
Post a Comment