Sunday, April 22, 2018

ஒய்ஜிபியும் யூஏஏவும் - 30

அத்தியாயம் - 30

சுதேசி ஐயர்...இது 2008ல் அரங்கேறிய நாடகம் .கதை, வசனம் சித்ராலயா ஸ்ரீராம்.இயக்கம் ஒய்ஜிஎம்.
சரவெடி சிரிப்புகளுடன், கத்தியில் நடப்பது போன்ற மையக் கருத்துடன் கூடிய அருமையான நாடகம்.
பழைய காலத்து மதிப்பீடுகளில் நம்பிக்கைக் கொண்டவர் சுதேசி ஐயர் எனப்படும் சங்கர ஐயர்.ஆனால், அவர் மனை, மகன்கள், மகளோ இவருக்கு நேர் எதிர்மாறு.அதனால் அவர்களின் வெறுப்புக்கு ஆளாகிறார் சுதேசி ஐயர்
இந்நிலையில், ஒரு விஞ்ஞான ஆராய்ச்சியின் விளைவாகக் கிடைக்கும் கால இயந்திரத்தால் இவர்கள் 1945 காலகட்டத்திற்கு செல்கின்றனர்.மைலாப்பூர் நடுத்தர விட்டின் சூழ்நிலை.
இப்போது ஏற்படும் குழப்பங்கள் நகைச்சுவையாக சொல்லப் படுகின்றன.
பழையனவே மேல் என மனைவி, மக்கள் உணர்ந்து திருந்துவதே மீதிக்கதை
1945ல் காந்தி, ஐயர் வீட்டிற்கு வருகிறார்.அந்தக் காட்சி, அப்போது நடைபெறும் உரையாடல்கள் அனைத்தும் மயிர்கூச்செரிய வைப்பவை
இந்நாடகத்தில்..மக்கள் கரவோசைக்கு பல அருமையான வசனங்கள்.அதில் ஒன்று கீழே-
1945ல் வண்டி இழுக்கும் தொழிலாளி ஒருவர் ஐயரின் வீட்டிற்கு வந்து வாசலில் நின்று, "ஐயா நான் உள்ளே வரலாமா?" என் கிறார்.
அதற்கு சுதேசி ஐயர் - நாங்க எப்ப உங்களை எல்லாம் உள்ளே வர வேண்டாம்னு சொன்னோம்.நீங்களே வெளியே இருந்துட்டு வராம தயங்கினா நாங்க என்ன செய்ய முடியும்?"
எந்த இடத்திலும் தொய்வில்லா அருமையான நாடகமாக யூஏஏ விற்கு அமைந்தது இந்நாடகம்.

No comments: