அத்தியாயம் - 26
சத்திய சாயிபாபா சொன்ன ஒரு குட்டிக் கதை,ஓஷோ,பகவத்கீதை,ஜென் பௌத்தம் என இவற்ரை அடிப்படையாகக் கொண்டு ஐந்து குறுநாடகங்களை "உபதேசம் செய்வது யூஏஏ" என்ற பெயரில் வெங்கட் எழுத மகேந்திரன் இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு அரங்கேறிய நாடகம் 50 முறைகளுக்கு மேல் மேடையைக் கண்டது
நவீன நாடகத்தின் எந்தவித தாக்கமும் இன்றி, நகைச்சுவை கலந்த வசனத்துடன் , கதியிலும் எந்த மாற்றமும் இன்றி அப்படியே நிகழ்த்திக் காட்டிய நாடகமாக அமைந்தது
உதாரணத்திற்கு...மூன்று பேர்.மூன்று மதம் சார்ந்தவர்கள், கிணற்றில் விழுந்த ஒரு மனிதனைக் காப்பாற்றாமல், தங்களுக்குள் மத சர்ச்சையில் ஈடுபட்டது.
குரு, தன் சிஷ்யன், தான் சொல்லும் உபதேசங்களை மட்டுமே கேளாமல், அவற்றை நடைமுறையிலும் செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்துவது
போன்ற சிந்தனையைத் தூண்டும் கதைகள்.
குருவாக, இந்துத் தலைவனாக, தந்தையாக, சிவபெருமானாக வந்து அனைத்து வேடங்களிலும் கலக்கினார் மகேந்திரன்.
எருது வண்டி, நகரும் மேகங்கள்,சிவலிங்கம் தோற்றம் ஆகிய மேடைத் த்ந்திரக் காட்சிகளும் இந்நாடகத்தின் சிறப்பாய் அமைந்தது.
மனித சமுதாயம் வளர, திருந்த,சிந்திக்க தேவையான பல கருத்துகளைச் சொன்னது இந்நாடகம் என்றால் மிகையில்லை
அத்தியாயம் - 27
2004ல் அரங்கேறிய நாடகம் "காதலிக்க நேரமுண்டு".சித்ராலயா ஸ்ரீராம் எழுத்தில், மகேந்திரன் இயக்கத்தில் வந்த நகைச்சுவை நாடகம்.கிட்டத்தட்ட 200 முறைகள் மேடையேற்றம்.
நாடகம் பார்த்த திரைப்பட பிரபலங்கள் பலரின் பாராட்டுதல்களைப் பெற்ற நாடகம்.
இந்நாடகத்தைப் பார்க்க வரும் நோயாளிகள் பலர் குணமடைந்து சென்றிருக்கலாம் என்று தோன்றுகிறது
"என்ன உளரல் இது என்கிறீர்களா?"
வாய் விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும் என்பார்கள் இல்லையா?.இந்நாடகம் பார்ப்போர் அனைவரும் இரண்டு மணிநேரமும் தன்னை மறந்து வாய் விட்டு சிரிப்பார்கள்.அப்போது நோய் விட்டுப் போகுமில்லையா?
இது, மிகைப்படுத்தி சொல்லப்பட்டதல்ல.நரசிம்ம ராவ் களும்,மன்மோகன் சிங்களும் இந்நாடகம் பார்த்தால் சிரிப்பார்கள்.அதற்கு உத்தரவாதம் நான்
குடும்பத்துடன் நாடகம் பார்த்த சூப்பர் ஸ்டார்கூட, பாராட்டிக் கடிதம் எழுதியுள்ளார்.தவிர்த்து நாடகம் முடிந்து உள்ளே சென்றவரிடம், நாடகத்தில் நடித்த நடிகர் ஒருவர்"உங்களுக்குப் பிடித்த காட்சி எது? "என வினவ, அதற்கு ரஜினி, "எந்தக் காட்சியில் நீங்கள் என்னை புன்னகைக்க வில்லை சொல்லுங்கள்" என்றாராம்
சாதாரணமாக மகேந்திரனின் நாடகங்களைப் பார்த்து மனம் மகிழ்ந்து பாராட்டும் வில்லுப்பாட்டு வித்தகர் சுப்பு ஆறுமுகம், தன் பாராட்டில், மகேந்திரனை,"தங்களின் ஒவ்வொரு அசைவிலும்,வசன உச்சரிப்பிலும்,உழைப்பிலும்,கலை ஈடுபாட்டிலும்,கம்பீரத்திலும், அடக்கத்திலும்,மற்ற கலைப் பெருமக்களை மதிக்கும் பண்பிலும்,தங்கள் குருவான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களைக் கண்டு வணங்குகிறேன்" என்கிறார்,
திரைப்பட பிரபல பிண்ணனி பாடகி திருமதி எஸ்.ஜானகி, தன் பாராட்டில்.மகேந்திரனின் நடிப்புத் திறன், இயக்கும் திறன் தன்னை வியக்க வைப்பதாகக் கூறுகிறார்.
இப்படி, பாக்கியராஜ், பிரசாந்த், விவேக் என பாராட்டும் மடல்கள் நீள்கின்றன.
இனி கதையைப் பற்றி -
கதாநாயகன் மகேந்திரன் ,ஒரு இளம் பெண்ணின் அழகில் மயங்கி அவளைத் திருமணம் செய்து கொள்ள திட்டமிடும் யுக்திகளும், அரைவழுக்கைத் தலையர் ஒருவர் ஆண்டாள் பக்தை ஒருவரை மணக்க அலைவதுமான காட்சிகள் நகைச்சுவையாக சொல்லப்படுகின்றன.சித்ராலயா கோபுவிற்கு"காதலிக்க நேரமில்லை" ஆனால் அவர் மகன் சித்ராலயா ஸ்ரீராமுக்கோ"காதலிக்க நேரமுண்டு".தந்தைக்குத் தப்பாமல் பிறந்த தனயன் என் கிறார் பிரபல விமரிசகர் சாருகேசி
மொத்தத்தில் யூஏஏ பாராட்டுதல்களின் உச்சியில் சென்ற நாடகம் இது எனலாம்
No comments:
Post a Comment