2010ல் சித்ராலயா ஸ்ரீராம் எழுதம் மகேந்திரன் இயக்க அரங்கேறிய நாடகம் :"வெங்கடா 3".135முறைகளுக்கு மேல் மேடையேறியது.
விறுவிறுப்பாக காட்சிகள் மாறிக்கொண்டிருந்ததால் மக்களின் ஆரவாரம் அரங்கில் அதிகம் இருந்தது
வெங்கடா3 அலுவலகம் ஒன்றில் வேலை செய்து வருபவர்.வாழ்க்கை நடத்த சம்பளம் போதாமையால், டிவி சிரியலுக்குக் கதை எழுதி சம்பாதிக்கிறார்.இரு வேலைகளையும் பார்க்க நேரம் கிடைக்காததால் தவிக்கும் வெங்கடாத்ரி அதற்குத் தீர்வு காண தன் உறவினர் தோத்தாத்ரியின் உதவியை நாடுகிறார்.தோத்தாத்திரி ஒரு விஞ்ஞானி.அவர் வெங்கடாத்திரியின் பிரச்னையைத் தீர்க்க, வெங்கடாத்திரிபோல குளோனிங்கில் வெங்கடா1,வெங்கடா2 என இருவரை உருவாக்குகிறார்.
ஒருவர் சீரியலுக்குக் கதை எழுத, மற்றவர் அலுவலகம் செல்கிறார்.உண்மையானவர் வீட்டில் அமர்ந்து ஜாலியாகப் பொழுதினைப் போக்குகிறார்.இதனால் ஏற்படும் பிரச்னைகள், கையாளும் உத்திகள், சமாளிப்புகள் என நாடகம் விறுவிறுப்பாகச் சென்று வெற்றி நாடகமாக அமைந்தது.
No comments:
Post a Comment