Wednesday, April 18, 2018

ஒய்ஜிபியும் யூஏஏவும் - 23

அத்தியாயம் - 23 ஒன் மேன் ஷோ

காரைக்குடி நாராயணன் எழுதிய "வெத்தலைப்பெட்டி வீரப்பன்" 1999ல் அரங்கேறிய நாடகம்.100முறை மேடையேறி வெற்றிவிழாவினைக் கண்டது
இந்நாடகம், சந்தனக்கடத்தல் வீரப்பனைப் பற்றியது அல்ல.
வீண் வதந்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கும் வீரப்பன் என்பவனுக்கு தான் பரப்பிய ஒரு வதந்தியே வில்லனாக மாறி, அவன் குடும்பத்தில் விபரீத விளைவுகளை ஏற்படுத்துவதுதான் கதை.அதை காமெடி கலந்து, மகேந்திரனுக்கே ஆன பாணியில் சொல்லப்படுகிறது

                 (காரைக்குடி நாராயணன்)
இப்படி வீரப்பன் வதந்திகளைப் பரப்பக் காரணம் என்ன என சொல்லப்படும் பின்னணிக் கதையும் அழுத்தமானதாகும்.
கிட்டத்தட்ட அனைத்துக் காட்சிகளிலும் மகேந்திரன் வருவார்.அதனால், இந்நாடகம் ஒன் மேன் ஷோ என்று சொன்னால் மிகையில்லை


No comments: