காதலுக்குத் தூதாக அன்னத்தை அனுப்புவது அக்கால மங்கையர் வழக்கம்.அதே போன்று தோழியரும் தூதாக செல்வர்.ஆனால் இப்பாடலில் தலைவனிடமிருந்து அவனது தலைமையை ஏற்றுக் கொண்ட பாணன் ஒருவன் வருகிறான்.அவன் சொல்வன்மையை பாராட்டுவதன் மூலம் தலைவி தன் தலைவனின் திறமையைப் பாராட்டுகிறாள்.இனி அத் தலைவியின் கூற்று..
(தலைவனுக்குத் தூதாக வந்த பாணனை ஏற்றுக் கொண்ட தலைவி, “இவன் நன்றாகப் பேசுகின்றான்; இங்கே விருந்து பெறுவான்” என்று உணர்த்தியது).
மருதம் திணை= பாடலாசிரியர் படுமத்து மோசிகீரன்
அன்னா யிவனோ ரிளமா ணாக்கன்
தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ
இரந்தூ ணிரம்பா மேனியொடு
விருந்தி னூரும் பெருஞ்செம் மலனே.
- படுமத்து மோசிகீரன்
(தலைவனுக்குத் தூதாக வருகிறான் பாணன் ஒருவன்.அவனைப் பற்றி தலைவி தோழியிடம் உரைக்கின்றாள்}
உரை -
பெரும் தலைமையை (தன் தலைவன்) உடைய இப்பாணன் (என் தலைவனுக்கு) ஓர் இளைய மாணாக்கன்.என்னிடமே இவ்வளவு (சாதூர்யமாக) பேசுபவன் பொதுச் சபையில் எவ்வளவு பேசுவானோ? இரந்து உண்ணும் உணவினால் முற்ற வளராத மேனியனான இவன் புதிதாக விருந்தும் பெறுவான்.
No comments:
Post a Comment