தலைவி கூற்று
(தலைவன் பிரிந்த காலத்தில் தலைவியின் நிலைகுறித்து கவலையுற்ற தோழியை நோக்கி, “என்னைத் துன்புறுத்தும் மாலைக் காலமும் தனிமையும் தலைவர் சென்ற நாட்டிலும் உள்ள்து.ஆதலால் அவருக்கும் அவற்றால் துன்பம் உண்டாகும்; அதனால் அவர் விரைவில் வருவாரென்று எண்ணி நான் சமாதானமடைகிறேன்” என்று தலைவி கூறியது).
மருதம் திணை - பாடலாசிரியர் மாமலாடன்
இனி பாடல் -
.
ஆம்பற் பூவின் சாம்ப லன்ன
கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ
முன்றி லுணங்கன் மாந்தி மன்றத்
தெருவினுண் டாது குடைவன வாடி
இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும்
புன்கண் மாலையும் புலம்பும்
இன்றுகொ றோழியவர் சென்ற நாட்டே.
- மாமலாடன்
உரை -
வாடிய ஆம்பல் மலரைப் போன்ற குவிந்த சிறகுகளையுடைய வீடுகளில் காணப்படும் குருவிகள், முற்றத்தில் உலரும் தானியங்களைத் தின்று, பொது இடத்தில் கானும் எருவுன் நுண்ணிய பொடியைக் குடந்து விளையாடி, வீட்டிலுள்ளபிறையில் தனது குஞ்சுகளுடன் தங்கியிருக்கும்.பிரிந்தாருக்குத் துன்பத்தைத் தரும் மாலைக் காலமும் , தனிமையும் அத்தலைவர் பிரிந்து சென்ற நாட்டிலும் இல்லையோ? (இருக்கும். அதனால் அவர் விரைவில் வருவார்)
(கருத்து) என்னுடைய பிரிவினால் தலைவரும் துன்புறுவர் ஆதலின் விரைந்து வருவர்.
இப்பாடலின் கருத்துக்கும், குருவிக்கும் என்ன சம்பந்தம்.?
குருவி, தன் குஞ்சுகளுடன் ஒன்றாக இருப்பது போல, தலைவர் சென்ற நாட்டிலும் மாலையும், தனிமையும் உள்ளதால், அந்த குருவியைப் போல குடும்பத்துடன் ஒன்றாக இருக்க வருவார்...என்கிறாள் தோழியிடம் தலைவி.
என்ன ஒரு கற்பனை பாருங்கள்!!!
No comments:
Post a Comment