Monday, July 7, 2014

கேபிள் நீ ஜெயிச்சுட்டேடா....



ஒரு குறிக்கோளுடன்..அயராது உழைத்தால்...வெற்றிக்கனி நமது கைகளில்..வெற்றியை தொட்டுவிட்டால்..அது தொடரும்..

அதற்கான உதாரணம் "கேபிள் சங்கர்"

அவரது லட்சியம் ஒரு திரைப்பட இயக்குநர் ஆக வேண்டும் என்பது.அதற்காக நான் அறிந்த நாள் முதல் அவரிடம் இருந்த உழைப்பைக் கண்டு வியந்துள்ளேன்.

அதற்காக, அவர் எடுத்த முயற்சிகள் எவ்வளவு என்பதை..அவருடன் இருந்த, இருக்கும் நண்பர்கள் அறிவர்.

சாதாரணமாக...திரைப்படம் பற்றிய ஆனந்த விகடன் விமரிசனத்தை..திரையுலகம் இன்றி, சராசரி ரசிகன் கூட எதிர்பார்ப்பதுண்டு.

அதுபோல, ஒரு படத்தின் விமரிசனத்தை, இணையத்தில் கேபிள் சங்கர் எப்படி விமரிசித்துள்ளார் என வலைப்பதிவர் மட்டுமின்றி, திரியுலகத்தினரே எதிர்பார்த்ததும் உண்டு.ஒவ்வொரு படத்தை எடுக்க பாடுபடும் குழுவை, தானும் திரையுலகில் நுழைய விரும்பும் இவர் இப்படி தெள்ளத் தெளிவாய் விமரிசிக்கிறாரே..இதனால் பலர் விரோதம் சம்பாதிக்க நேருமே எப்படி? என நான் வியந்தது உண்டு.

அதற்கான ஒரே பதில்...இவரிடம் இருந்த நம்பிக்கை, தவறு எனில் யார் செய்திருந்தாலும் தைரியமாய் சுட்டிக்காட்டும் திறன்.

சினிமா என்ற மீடியத்தை நன்கு புரிந்து கொண்ட விக்ரமாதித்தனான அவர்..கூறிய சரியான பதில்களைக் கண்டு...கட்டவிழ்த்து தப்பித்த சினிமா வேதாளத்தை, மீண்டும் மீண்டும் தளரா உழைப்பாலும், திறமையாலும் கட்டிப்போட்டு வெற்றிகரமாக சினி ராஜ்ஜியத்தை பிடித்துள்ளார்.

ஆமாம்...இப்படிப்பட்டவர்..குறையே இல்லா படம் எடுப்பாரா? என்ற வினா தோன்றுவோர்க்கு...மாட்டார் என்று நான் அல்ல அவரே பதில் கூறக்கூடும்.

ஏனெனில்...ரசனை என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபட்டது..

ஆனால்..ஒன்று மட்டும் நிச்சயம்...கண்டிப்பாக வெற்றிப் படத்தை அவர் தருவார்.அதற்கான ஆதாரங்கள்..பட டீசரும், பாடல்களும்..

கேபிள்...தளாரா உழைப்பாளியே...நீ ஜெயிச்சுட்டேடா..

(நான் அவரை ஏன் "டா" போட்டு விளிக்கிறேன் தெரியுமா? அதற்கான உரிமை எனக்குள்ளது.அதை அவரே அறிவார்)

4 comments:

ப.கந்தசாமி said...

கேபிளுக்கு வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

நாமும் ஜெயித்தது போல...

கேபிள் சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

shortfilmindia.com said...

உங்களுக்கு இல்லாத உரிமையா.. நன்றி..

வருண் said...

***ஒவ்வொரு படத்தை எடுக்க பாடுபடும் குழுவை, தானும் திரையுலகில் நுழைய விரும்பும் இவர் இப்படி தெள்ளத் தெளிவாய் விமரிசிக்கிறாரே..இதனால் பலர் விரோதம் சம்பாதிக்க நேருமே எப்படி? என நான் வியந்தது உண்டு.

அதற்கான ஒரே பதில்...இவரிடம் இருந்த நம்பிக்கை, தவறு எனில் யார் செய்திருந்தாலும் தைரியமாய் சுட்டிக்காட்டும் திறன்.***

இதெல்லாம் உண்மை கெடையாது சார். இவர் எழுதிய நண்பன் படம் விமர்சனம் பாதியிலே காணாமல்ப் போயிடுச்சு. வைரஸ் வந்து தின்னடுச்சா என்னனு தெரியலை. வைரஸ் ஏன் தின்னுச்சு தெரியுமா?

மேலும் கமலஹாசனுக்கு இஷ்டத்துக்கு ஜால்ரா அடிப்பாரு. இவர் எழுதிய சினிமா வியாபார்ம வாசிச்சாத் தெரியும்.

---------------

ஆமா, படம் எடுத்து, படம் வெற்றியடைந்தால்த் தானே வெற்றி? அதுகுள்ள வெற்றிவிழா கொண்டாடினா எப்படி?

நிச்சயமாக ஏதாவது ஒரு ஆங்கிலப்படம் தழுவலாக்த்தான் இருக்கும் வரப்போகிற இவர் படம். இவரு என்ன இன்னொரு 16 வயதினிலே இல்லைனா பருத்திவீரனா எடுத்துடப்போறாரு?