Saturday, November 15, 2008

தமிழக கட்சிகளும்...கூட்டணியும்..

இப்போதெல்லாம்..தனியாக ஒரு கட்சி அரசியலில் நின்று அறுதிபெரும்பான்மை வெற்றி பெறுவதென்பது இயலாத காரியம்..அதற்கான காரணம் இரண்டு..

1.கட்சிகளின் எண்ணிக்கை அதிகமாகப்போனது
2.எந்த ஒருதொகுதியிலும் 100% ஓட்டுகள் பதிவாகாதது..ராமன் ஆண்டால் என்ன ராவணண் ஆண்டால் என்ன? யார் வந்தாலும் நமக்கு ஒன்றுதான் என்ற எண்ணத்தில்..கிட்டத்தட்ட 30% மேல் ஓட்டு போடுவதில்லை..இவர்கள்தான் முதலில் கடமை தவறியவர்கள்.

சரி தலைப்புக்கு வருவோம்..

தமிழகத்திலும்..கூட்டணி என்பது..தவிர்க்க முடியாததாகி விட்டது..தி.மு.க., அ.தி.மு.க., இக்கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்ளும் கட்சிகளைப் பொறுத்து வெற்றிக் கனியை பறிக்க முடிகிறது.

1996-01ல் கலைஞர் ஆட்சி..திறம்பட இருந்தது..மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர்..ஆகவே 2001 தேர்தலில் வெற்றிபேறுவோம் என கலைஞர் நினைத்
தார்..ஆனால்..சூடுபட்ட பூனையான ஜெ..மற்றக் கட்சிகளுடன் சேர்ந்து..ஒரு பலமான கூட்டணி அமைத்தார்...வெற்றி பெற்றார்..

அடுத்த தேர்தலில்..அதாவது..பார்லிமென்ட் தேர்தலில்..கலைஞர் பல கட்சிகளை அரவணைத்துக் கொண்டார்..40 தொகுதியும்(39+1)வென்றார்.அதே கூட்டணியை க்காப்பாற்றி 2006 சட்டசபை தேர்தல்...கட்சிகள் அதிகம் என்பதால்..தொகுதி ஒதுக்கீடு..தி.மு.க.போட்டியிடும் தொகுதி எண்ணிக்கையை குறைத்தது.இதனால் கூட்டணி வெற்றி பெற்றாலும்..தி.மு.க.அறுதி பெரும்பான்மை பெறவில்லை.இச்சமயம் விஜய்காந்த் வேறு..கட்சி ஆரம்பித்து..அதனால்..வோட்டுகள் சிதறின.

இன்றைய நிலையில்..பா.ம.க.,கம்யூனிஸ்ட்கள்..தி.மு.க.கூட்டணியில் இல்லை.

அடுத்த வருடம் வரும்..பாராளுமன்ற தேர்தலில்..தி,மு,க.,கூட்டணி வெல்ல வேண்டுமானால்..காங்கிரஸ் தவிர்த்து..பா.ம.க போன்ற கட்சிகளும் உடன் இருக்க வேண்டும்..அதனால் தான் அதை மீண்டும் கூட்டணியில் சேர்க்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன..

அ.தி.மு.க., வும்..சில கட்சிகளுக்கு வலை விரித்து வருகிறது.(தற்போது வைகோ மட்டுமே உடன் உள்ளார்)

இடையே..விஜய்காந்த்துடன்..கம்யூனிஸ்ட்..பாமக..சேர்ந்தாலும் ஆச்சர்யப்ப்படத் தேவையில்லை..

காங்கிரஸை இது போன்ற சமயங்களில் நம்ப முடியாது..விஜய்காந்த்தையும் சில காங்கிரஸ் தலைவர்கள் சந்த்தித்துள்ளனர்.

அனுபவசாலி கலைஞருக்கு ..காங்கிரஸ் பற்றித் தெரியும்..மேலும் இன்று தமிழகத்தில்..மக்கள்..மின்வெட்டு..விலைவாசி..என்றெல்லாம் அதிருப்தியில் உள்ள நிலையில் காங்கிரஸ் உடன் இல்லை எனில்..முடிவு என்ன ஆகும் என்றெல்லாம் கணக்குப் போட்டு..பார்த்ததால் தான் கலைஞர்..இலங்கை பிரச்னையில்..மத்ய அரசின் நிலை திருப்தியாய் இல்லை என்றாலும்..கடுமையாக அவர்களை கண்டிக்க முடியாத நிலையில் இருக்கிறார்.

அதே சமயம்..சாமான்யனுக்கும்..இப்படிப்பட்ட இக்கட்டான நிலையில்..கலைஞர் தலைமைதான் வேண்டும்..

பார்ப்போம்...என்ன நடக்கிறது..என்று.

Friday, November 14, 2008

கதையான போதிலும்....கருத்துள்ள பாடமே...

ஒரு ஊரில் ஒரு சிறிய ஆட்டுக்குட்டி இருந்தது...அதைப்பார்த்த ஓநாய் ஒன்று அதை இரையாக்கிக்கொள்ள தீர்மானித்தது.

ஒரு நாள் அந்த ஆட்டுக்குட்டி..ஓடிவரும் ஆறின் சரிவில் நீர் அருந்திக் கொண்டிருந்தது.மேல் பகுதியில் வந்து தண்ணீர் அருந்துவது போல பாவனை செய்த ஓநாய்..திடீரென ஆட்டைப் பார்த்து 'ஏன்..இப்படி தண்ணீரை கலக்குகிறாய்"என்று அதட்டிக் கேட்டது.

ஓநாயைப்பார்த்து பயந்த ஆடு..'நான் எப்படி தண்ணீரை கலக்க முடியும்..நீங்கள் குடித்த பின்னர் தானே நீர் எனக்கு வருகிறது?" என்றது.

ஆட்டின் பதிலைக்கேட்டதும்..ஓநாய்..'நீ கலக்கா விட்டால் என்ன?..முன்னர் உன் அப்பன் கலக்கி இருப்பான்...அதற்கும் முன்னால் உன் பாட்டன் கலக்கி இருப்பான்..உன்னை எல்லாம் சும்மா விடக்கூடாது'என்றபடியே ஆட்டின் மேல் பாய்ந்து, அதை அடித்துக் கொன்றது.

நம் நியாயம்..எடுபடாது..என்ற நிலையில்..ஒதுங்கி செல்வதே..நல்லது.

Thursday, November 13, 2008

சாதி ஒழிப்பு மகாநாடு.

ஆனந்தக் கோனார் முன்னிலையில்
சந்தோச நாடார் தலைமையில்
ஷண்முக முதலியார் வரவேற்பு வழங்க
சிவனேச செட்டியார் வாழ்த்து மடல் வாசிக்க
நாயகம்பிள்ளை விரிவுரை நிகழ்த்த
சாம்பசிவ ஐயர்..ரங்காச்சாரி..கருப்பு தேவர்
ஆகியோர் கலந்துக்கொள்ள
இனிதே நடந்தது
சாதி ஒழிப்பு மகாநாடு.

Wednesday, November 12, 2008

மென்பொருள் தொழில் வல்லு னர்களே இவருக்கு உதவுங்கள்

ABOUT SHANKAR விவரங்கள் இட்லி வடை பதிவில்
http://idlyvadai.blogspot.com/2008/11/blog-post_12.html

Mr. D. Shankar is suffering from Acute Myeloid Leukemia (AML M4 RELAPSE - Blood Cancer). Shankar is an engineering graduate, completed his Graduation in the year 2006 in RMK Engineering college. After Graduation, he started his career as a Software Engineer in Congruvent Info Tech Pvt Ltd Company in Thiruvanmiyur – Chennai. But unfortunately, he was diagnosed with blood cancer in October 2007, and admitted in Apollo Speciality Hospitals for the Induction Chemotherapy. After that he had a relapse on June 15th 2008 and again admitted in Apollo Speciality Hospitals for Salvage Chemotherapy which costs Rs. 1200000/- (Twelve Lakhs) under Dr. JOSE EASOW, Consultant in Medical Oncology, Hematology.

Shankar hails from economically backward family, his family's monthly income is hardly enough to meet their basic amenities. It was with at most difficulty and financial help from various philanthropist and good hearted people, his first treatment was done. Now, we are helpless to proceed with the next set of treatment. We need help in saving life of our FRIEND.


DONATE


Once he attains remission, immediately he needs to undergo BMT (Bone Marrow Transplantation). BMT has very good cure rates. Kindly extend your helping hand to save our friends life. Consider this as a request from patient. The family is unable to cope with this high expenditure despite mobilizing all their resources any financial assistance can be provided in form of Cheque/Demand Drafts to “APOLLO SPECIALITY HOSPITALS – D. SHANKAR – REF NO: 122493”.

Address:APOLLO SPECIALITY HOSPITAL
Padma Complex,
320, Anna Salai,
Chennai - 600035,
Tamilnadu, India
Phone: 91-44-24331740 / 1741 / 6119
Fax No. 91-44-24363646

Or you can donate to his personal account and we will provide the receipt for the same from the Apollo Hospitals – Teynampet – Chennai. If you are donating to his personal account pls provide your mail Id or your address to our Mail Id to send you a receipt copy.
Account Holder Name: D. Shankar
Bank: ICICI Bank
Account Number: 000101565338
Branch: Teynampet branch, Chennai.
IFSC Code: ICIC0000001 (For Online Transfers)

வாய் விட்டு சிரியுங்க...

1.விண்ணில் பறக்கும் விமானத்தில் பயணி-டிக்கட் வாங்காமல் ஏறியது தப்புதான்..அதுக்காக உடனே இறங்குன்னு சொன்னா எப்படி?

2.அதிகாரி-ஏன் இன்னிக்கு இவ்வளவு தாமதமா வர்றீங்க?
சிப்பந்தி-காலைல எழுந்துக்க கொஞ்சம் தாமதமாயிடுச்சு
அதிகாரி-ஆச்சர்யமா இருக்கே! வீட்ல கூட உங்களுக்கு தூக்கம் வருமா?

3.சித்திரகுப்தன்-(தான் அழைத்து வந்திருப்பவரை எமனிடம் காட்டி)இவர் பூலோகத்தில் பல்லாயிரக்கணக்கோரின் பல மணி நேரங்களை..வீணாக ஆக்கியிருக்கிறார்...ஆகவே இவரை நரகத்தி
ல் தள்ள வேண்டுகிறேன்..
எமன்- அப்படி என்ன செய்தார்?
சித்திரகுப்தன்-டி.வி.,யில் மெகா சீரியல்கள் எடுத்தார்

4.உங்க ஃப்ளாட்ல பாராசூட் ல இறங்கற பயிற்சி கொடுக்கறாங்களா..எதுக்கு
ஃப்ளாட்ல திடீர்னு தீப்பிடிச்சா..மாடியிலே இருக்கிறவங்க ..கீழே எப்படி இறங்கறதுன்னு கத்துக்கத்தான்

5.தலைவரே...நீங்க உங்க தொகுதியிலே புறம்போக்கு நிலத்தை எல்லாம் வளைச்சுப் போட்டது தப்பாயிடுச்சு..
ஏன்?
நீங்க வரும்போது..புறம்போக்கு தலைவர் வர்றார்னு சொல்றாங்க

6.பருமனாக இருப்பவைப் பார்த்து நண்பர்-நீ ரேஷன் கடைல வேலை செய்யறேன்னு தெரியும்..அதுக்காக உன் எடையைக் கூட 45 கிலோன்னு கூரைச்சு சொன்னா எப்படி?

Tuesday, November 11, 2008

பார்ப்பனர்களுக்கு அடுத்து இப்போது தாக்கப்படுபவர்களாக..இவர்கள் இருக்கிறார்கள்..

சமீப காலமாக..மென்பொருள் வல்லுனர்களைப் பற்றி பத்திரிகைகள் மனம் போனபடி எழுதி வருகின்றன..

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல..ஒரு நிகழ்ச்சி சமீபத்தய படம் ஒன்றில் வந்துள்ளது.

வேலையில்லாத ஒருவனுக்கு மென்பொருள் தொழில் வல்லுநராக வேலைகிடைக்கிறது.முதல் வருடம்..நண்பர்களுக்கு இனிப்பு வழங்கும்..அவன்..அடுத்த ஆண்டு 5000 ரூபாய் வரை செலவழித்து ஒரு பார்ட்டி கொடுக்கிறான்..

இரண்டு ஆண்டுகள் கழித்து..சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்குகிறானாம்..

இப்போது அவன் மாத சம்பளம் 85000 ரூபாய்.இப்படி வந்த படம் அறை எண் 305ல் கடவுள்..

ரஜினி நடித்த சிவாஜியில் 20ஆண்டுகள் ஆர்கிடெக்சல் இஞ்சினீயர் ..அமெரிக்காவில் 200கோடி ரூபாய் வரை சம்பாதித்ததாக வருகிறது.

பார்ப்பனர்களுக்கு அடுத்து இப்போது தாக்கப்படுபவர்களாக..இவர்கள் இருக்கிறார்கள்..

இப்படி எல்லாம் அவர்கள்மீது பொறாமை படும் நண்பர்களே...அந்த நிலைக்கு வர ..அவனது உழைப்பு ..மென்டல் டென்ஷன் ஆகியவை எவ்வளவு இருந்திருக்கும்...அதை எண்ணிப்பாருங்கள்.ஒரு படத்தில் நடிக்க கோடிகணக்கில்..நீங்கள் வாங்கும்போது...மாத உழைப்புக்கு 85000 வாங்குவது கூடாதா?(இப்பணத்தில்..வருமான வரி..படிக்க வாங்கிய வங்கி கடன் மாதத் தவணை..அவனது மருத்துவசெலவு ஆகியவை போக)..அவன் வீட்டுக்கு எடுத்துப் போகும் சம்பளம்..பாதி கூட தேறாது.

அவனே பாவம்...உலக பொருளாதார வீழ்ச்சியால்...தினம் செத்து..பிழைத்துக் கொண்டிருக்கிறான்.அவனை ..திரை உலகமே..பத்திரிகை துறையே..தயவு செய்து விட்டு விடுங்கள்.

தீபாவளி படங்கள் என் பார்வையில்....

லக்கிலுக் ஒரு பதிவில் தீபாவளிக்கு வந்த படங்கள் பற்றி எழுதி இருந்தார்.அவர் முன்னர் தீபாவளிக்கு 18 படங்கள் கூட வந்தது உண்டு..என்றும் ..ஆனால் இந்த தீபாவளிக்கு 3 படங்கள்தான் வந்துள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்..

அது உண்மைதான்..ஆனால்..அப்போது எல்லாம் தீபாவளி ஒரு பெரிய பண்டிகையாக..விமரிசையாக கொண்டாடப்பட்டது..குடும்பத் தலைவர்களுக்கு தீபாவளி போனஸ் வரும்..குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் புத்தாடை..பட்டாசு..என அமர்க்களப்படும்.விடியற்காலை 3 மணிக்கே..எழுந்திருந்து...எண்ணெய் குளியல் முடித்து..புத்தாடை அணிந்து..பட்டாசு கொளுத்துவது
என கோலாகலமாய் இருக்கும்..பிறகு..உறவினர்கள் வருவதும்..நாம் போவதும்...என அமர்க்களப்படும்..வரும் திரைப்படங்கள் எதாவது பார்த்துவிடும் துடிப்பு இருக்கும்.

ஆனால்...இன்று..தீபாவளி ஒரு சாதாரண நாள்போல ஆகிவிட்டது...

பட்டாசுகள் கூட காலை 6 மணிக்கு மேல் தான் வெடிக்க வேண்டும் என்ற அரசு ஆணை வேறு..எண்ணெய் விற்கும் விலையில் எண்ணெய் குளியல் ஏது..பெரும்பாலோருக்கு போனஸும் கிடையாது..அதற்கேற்றார் போல திரைபடத் துறையினரும்..இப்போது அந்த நாளை..சாதாரணமாக வெள்ளிக்கிழமை படம் வரும் நாளாக நினைத்து விட்டனர்போலும்.

அப்போது..தீபாவளி அன்று சிவாஜி படங்கள்..சில சமயம் இரண்டு கூட வெளிவரும்.நவராத்திரியும்..முரடன் முத்து வும் ஒரு தீபாவளிக்கு வந்தது..
எங்கிருந்தோ வந்தாள்..சொர்க்கம் ஒரு தீபாவளிக்கு வந்தது.ஆனால் அப்போதும் யார் நடித்த படமாய் இருந்தாலும்..மக்களுக்கு எத்ர்பார்த்தது இல்லை எனில் படம் தோல்விதான்..பாசமலர் எடுத்த தயாரிப்பாளர்களின் அடுத்த படம் குங்குமம் ஒரு தீபாவளிக்கு வந்தது..படம் ஃப்ளாப் (பிறகு செகண்ட் ரன்..தேர்ட் ரன் படம் சுமாராக போயிற்று)

இனி அப்படிப்பட்ட தீபாவளி என்று வருகிறதோ ..அன்று..நிறைய படங்களும் வரக்கூடும்.

Monday, November 10, 2008

நான் யார்...நான் யார்...(கவிதை)

நான்
உடல் வலிமையுள்ளவன் என்கிறாயே
உன் அன்னைக்கு நன்றி சொல்
உதிரத்தை பாலாய் கொடுத்தவள்
அவர்

நான்
பண்புள்ளவன் என்கிறாயே
உன் தந்தையை வணங்கு
உன்னை ஆக்கியவர்
அவர்

நான்
அறிவாளி என்பவனே
உன் ஆசிரியரை நினை
உன் அறிவை வளர்த்தவர்
அவர்

நான்
நல்ல கணவன் என்கிறாயே
உன் மனைவியைக் கேள்
உனக்கு அப்பெயர் வரக் காரணம்
அவள்

நான்
நல்ல தந்தை என்பவனே
உன் வாரிசுகளைக் கேள்
உன் கடமையைசெய்ததை உரைப்பவர்
அவர்

நான்
நல்லவன் என பெருமையுறுபவனே
உன் உடல் சுமக்கப்படும் போது
உன் சுற்றமும்..நட்பும் சொல்லட்டும்
அதை

மறக்க முடியாத சிறுகதைகள்...

முன்பெல்லாம்..தமிழ் பத்திரிகைகளில் ஆறு அல்லது ஏழு சிறுகதைகள் வரும்.இன்னும் அதிகம் போடலாமே..என வாசகர் கடிதங்கள் வரும்..

ஆனால்..இன்று..ஒன்று அல்லது இரண்டு சிறுகதைகள் வந்தாலே அதிகம்..பல பத்திரிகைகள் ஒரு பக்க கதைக்கு தாவி விட்டன.. சில பத்திரிகைகள்..அரை பக்கக்கதை,கால் பக்க கதை என்றெல்லாம் வெளியிட ஆரம்பித்து விட்டன..கேட்டால்..வாசகர்கள் இதையே விரும்புகிறார்கள் என பழியை வாசகர்கள் மீது போடுகின்றனர்.

பல சிறுகதைகள்..நம்மால் மறக்க முடிவதில்லை..

ஜெயகாந்தன் சிறுகதைகள் பல இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கிறது..

ஒரு தொடர்கதையில் இருந்து..பல சிறுகதைகளுக்கான கரு கிடைப்பதுண்டு..ஆனால்..ஒரு சிறுகதையிலிருந்து..பல தொடர்கதைகள் பிறந்திருக்கின்றன..என்றால்..அதை நம்புவது சற்று கஷ்டம்.உண்மையில் ஜெயகாந்தன் சிறுகதை ஒன்றிற்கு ..அப்பெருமை உண்டு.அது...

அக்கினிப்பிரவேசம்..

ஆனந்த விகடனில் வந்த சிறுகதை இது...முத்திரைக்கதை..இந்த கதையை யாரும் மறந்திருக்க முடியாது..இந்த சிறுகதையில் இருந்து பிறந்தவை...

சில நேரங்களில் சில மனிதர்கள்
கோகிலா என்ன செய்கிறாள் ஆகிய தொடர்கள்..

அடுத்ததாக நான் சொல்ல விரும்புவது..பிலஹரியின் ..அரிசி..என்ற கதை..நம்மில் பலருக்கு இக்கதை ஞாபகமிருக்காது..இதுவும் ஆ.வி.யில் வந்த முத்திரைக்கதை..

இக்கதை அம்மாவின் பாசம் பற்றியது..கல்யாணம் ஆனதும் அம்மாவிடம் வெறுப்பு வளர்கிறது அவனுக்கு..ஆனால் அம்மாவின் பாசம்..அதற்கு ஈடு உண்டோ?கதையின் கடைசி வரிகள்..இன்னமும் மறக்காமல் என் ஞாபகத்தில் உள்ளது..

அகோரபசி உள்ள ஒருவன்..முன்னால்..பல இனிப்புகள்..உணவுபண்டங்கள்..ஆனால்..எதைத் தின்றாலும் ஒரு கவளம் சாதத்திற்கு இணை உண்டோ?அந்த அரிசி சாதம் தான்..அம்மா அன்பு..என்பார்.

தமிழ் பத்திரிகைகள்..குறிப்பாக..விகன்..மீண்டும் தரமுள்ள கதைகளுக்கு முத்திரை அளீத்து...முத்திரை கதைகளை வெளியிடலாமே?

பதிவர்கள்..இதை ஒரு தொடர் பதிவாய் எண்ணி...தங்களுக்கு மறக்க முடியா கதைகளை சொல்லலாமே...

Sunday, November 9, 2008

இலங்கை பிரச்னை..கலைஞருக்கு வெற்றி...

இலங்கை பிரச்னையில்...அனைத்து கட்சிகள் கூட்டத்தில்..முதலில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறியது..

இதை அடுத்து..பல பிரிவினர்..பல போராட்டங்களை மேற்கொண்டனர்.

நேற்று இதைப்பற்றி கலைஞர் கூறுகையில்..போர் நிறுத்தம் என்பது..இரு சாராருக்கும் பொருந்தும் என்றும்..இலங்கை ராணுவம் மட்டும் ..போரை நிறுத்தினால் என்ன பயன்? என்றும் கேட்டிருந்தார்.

இந்நிலையில்..பல இடங்களில் இலங்கை ராணுவம் முந்தி வருவதாகவும்..போரால் பல அப்பaவி தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுமைகள் பற்றியும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

இன்று..புலிகளின்..அரசியல் பிரிவு தலைவர்பி.நடேசன்..போர் நிறுத்தத்திற்கு புலிகள் தயார்..என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.,

விடிவெள்ளி பிறக்குமா பார்ப்போம்..

ஆனால்..அவரின் அறிவிப்பு கலைஞருக்கு (அவர் அனுபவத்திற்கு)கிடைத்த வெற்றி என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

கணவர் லஞ்சம் வாங்குபவரா? மனைவிக்கும் தண்டனை உண்டு

மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் பாஸ்கர் வாஹா.இவர் மாத வருமானம் 1630ரூபாய்.இவர் 1984முதல் 1989 வரை லட்சக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளார்.இவரிடம் உள்ள கார்களின் மதிப்பு மட்டுமே20லட்ச ரூபாய்.
தவிர மனைவி பெயரிலும் நிறைய அசையா சொத்துக்கள்.இவரை லஞ்ச ஒழிப்புத் துறை கைது செய்து விசாரித்தது.
பின் நீதி மன்றம் இவருக்கு 7 ஆண்டு சிறையும் 3லட்சம் அபராதமும் விதித்தது.அவரது மனைவிக்கு 2ஆண்டு சிறையும்2லட்சம் அபராதமும் விதித்தது.
நீதிபதி தன் தீர்ப்பில்..
அரசு ஊழியர் வாங்கிய லஞ்ச பணத்தை மனைவியும் அனுபவித்துள்ளார்.அதனால் கணவனுக்கு உடந்தையாய் இருந்த குற்றத்துக்காக அவருக்கும் தண்டனை விதிக்கப்படுகிறது..என்று கூறியுள்ளார்.இனி மனைவி பெயரில் சொத்து இருந்தால் தொடமுடியாது என்ற காலம் போய் விட்டது

Saturday, November 8, 2008

ராமரும்...கிருஷ்ணரும்..அரசியல்வாதிகளும்...

சேது சமுத்திர சட்டம் பற்றிய விவகாரத்தில்...அந்த பாலம் ராமர் கட்டியது என்று சொல்லப்போக..ராமர் என்ன இஞ்சினீயரா..என்பது போன்ற நக்கலான கேள்விகளை அரசியல்வாதிகள்(பகுத்தறிவாளர்கள்)கேட்டார்கள்..அதற்கு காரணம்..ராமர் பற்றி பேசியது...VHP.,RSS., போன்ற அமைப்புகள் என்பதால்.

ஆனால்..இப்போது..ரஜினி..'கடமையைச் செய்..பலனை எதிர்ப்பார்' என ரஜினி சொல்லப்போக..பகவத் கீதையில்..'கடமையைச் செய் பலனை எதிப்பார்க்காதே' என கண்ணன் சொன்னதற்கு மாறாக ரஜினி பேசிவிட்டார்..என யாதவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனரே...

இதற்கு அதே அரசியல்வாதிகள்..'கிருஷ்ணன் என்ன..கல்லூரி விரிவுரையாளரா..அல்லது மதப் போதகரா..போதிக்க' என்று ஏன் கேள்வியை எழுப்பவில்லை...

சமீப காலமாக ரஜினி எது பேசினாலும்..பார்ப்பனர்களிடம் குறை கண்டுபிடிப்பதுபோல குறை கண்டுபிடிக்கப் படுகிறதே..அது ஏன்?

Friday, November 7, 2008

வாய் விட்டு சிரியுங்க..

1.ஊர்ல இருந்து உங்க மாமனார் வர்றதா கடிதம் வந்திருக்குன்னு சொல்றியே..உங்கப்பா ன்னு சொல்லக்கூடாதா?
உங்க சொந்தக்காரர்களைத்தானே உங்களுக்கு பிடிக்கும்.

2.என் கணவர் நடுராத்திரி வந்த திருடனை பிடிச்சுட்டார்...
நடு இரவில் அவர் எப்படி முழிச்சுக்கிட்டு இருந்தார்?
பகலில்தான் ஆஃபீஸ்ல தூங்கிடறாரே!

3.நீதிபதி- (குற்றவாளியிடம்)இந்த திருட்டு குற்றத்திற்கு உனக்கு 10000 ரூபாய் அபராதம் விதிக்கிறேன்..,கட்டத் தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை
குற்றவாளி-என்னை ஒரு மணி நேரம் வெளியே விடுங்க..அபராதத்தை கொண்டு வந்து கட்டிடறேன்.

4.நோயாளி-(டாக்டரிடம்)டாக்டர் இந்த ஆபரேஷன்ல நான் பிழைப்பேனா?
டாக்டர்-கவலைப்படாதீங்க..உங்களுக்கு செய்யப்போற ஆபரேஷன் புள்ளி விவரப்படி ..பத்தில் ஒருவர் பிழைச்சுப்பாங்களாம்..இது எனக்கு பத்தாவது ஆபரேஷன்..அதனால நீங்க
பிழைச்சுடுவீங்க

5.தந்தை(மகனிடம்) சில்லறை இல்லாம..பஸ்ல வராம...நடந்து வர்றியா?நான்தான் உன் கிட்ட இரண்டு ரூபாய் காயின் கொடுத்தேனே
மகன்-ஆனா..பஸ்ல கண்டக்டர்...இரண்டு ரூபாய் சில்லரையா இல்லாதவங்க ஏறாதீங்கன்னு சொன்னார்.

6.கிரேசி மோகன் எழுதறாப்போல பல காமடி சப்ஜெக்ட் வைச்சிரிக்கேன்..ஆனா ..எழுதத்தான் சோம்பலா இருக்கு..
அப்போ நீங்க லேசி மோஹன்னு சொல்லுங்க.

ஒகேனக்கல் பிரச்னையும்..தமிழனும்...

தர்மபுரி..கிருஷ்ணகிரி மக்களுக்கு குடி தண்ணீர் பிரச்னையை ஒகேனக்கல் குடிநீர் திட்டம் தீர்த்து வைக்கும் என்றிருந்தால்..காவிரி பிரச்னையைப் போல இதுவும் தீராது போலிருக்கிறது...நம் பங்கு நீரை பயன்படுத்தக்கூட கர்நாடகா மாநிலம் ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறது.

மத்திய அரசு தலையிட வேண்டும்..என்ற கோரிக்கை வைக்கும் கர்நாடகா அரசு...இத் திட்டத்திற்கு நமக்கு நிதி வழங்குவதாகக் கூறியுள்ள ஜப்பான் வங்கிக்கு..கடன் வழங்காதீர்கள் என கடிதம் எழுதப்போகிறதாம்..

மஹாராஷ்டிரா ராஜ்தாக்கரே பரவாயில்லை போலிருக்கிறது..

மத்திய அரசு..உடனே தலையிட்டு..வெளிநாட்டு வங்கிக்கு..கடிதம் எழுதக்கூடாது என கர்நாடகாவை வலியுறுத்த வேண்டும்.நம் நாட்டு பங்காளி சண்டை நம்மிடையே இருக்கட்டும்.

ஆமாம்...இலங்கை தமிழர் பற்றி கூவும் நாம்...சிங்கள அரசை கண்டிக்கிறோம்..

நம் தவித்த வாய்க்கு தண்ணீர் கூட தர மறுக்கும் கர்நாடகா அரசு...சிங்கள அரசைவிட கொடூர எண்ணத்தில் சற்றும் குறைந்தது இல்லை.

நான் படித்த சில அருமையான வரிகள்..

1.உங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்த பயனும் இல்லை.

2.உங்க கோபம்..எல்லோரையும் ..உங்க கிட்டே இருந்து அந்நியப்படுத்தி விடும்.

3.எண்ணங்கள் தான்.. வாழ்க்கை..நம் எண்ணங்கள் தான்..நம் குணத்தை..நம் வாழ்வை தீர்மானிக்கின்றன.

4.தீபத்தின் ஒளியில்..திருக்குறளும் படிக்கலாம்...ஒரு ஊரையும் கொளுத்தலாம்.

5.வளைஞ்ச மூங்கில் பல்லக்கு ஆகும்..வளையா மூங்கில் பாடையாகும்.

6.நமக்கு தேவையில்லாததை வாங்க ஆரம்பிச்சா..நம்ம கிட்டே இருக்கிற தேவையானதை விற்க வேண்டி இருக்கும்

7.வரவுக்கு ஏத்த செலவு இருக்கணுமே தவிர..செலவுக்கு ஏத்த வரவுன்னு அலையக் கூடாது.

8.உங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பாருங்கள்..தேவைகளை தெரிந்துக் கொள்ளுங்கள்..வாய்ப்புகளை கண்டு பிடியுங்கள்..அவற்றை வெற்றியாக்கிடுங்கள்.

9.லட்சியத்தை மறந்துட்டு..மனுஷ உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.

10.எல்லாம் உனக்குத் தெரியும் என்ற இறுமாப்பு வேண்டாம்...ஆனான பட்ட ஔவைக்கே சுட்டப்பழத்தை சொன்னவன் யாதவ சிறுவன்.

இவற்றை எழுதியவர்களுக்கு நன்றி...

Thursday, November 6, 2008

கலைஞர் ராஜிநாமா ?

இலங்கை தமிழர் பிரச்னையில்..எதிர்பார்த்த அளவு எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்கவில்லை என கலைஞர் மன வருத்தத்தில் இருக்கிறார்..

ஆட்சியில் இருப்பதால் மட்டுமே..தன்னால் இப்பிரச்னையை..தீர்த்து வைக்கமுடியாது..என்றும்..எதிக்கட்சியினர்...ராமதாஸ் உட்பட பலர் தன்னை குற்றம் சாட்டி வருவதால்..வேதனை அடந்த அவர் பதவியை ராஜிநாமா செய்து விட்டதாக தகவல் வர..அனைத்து அமைச்சர்களும் கோட்டைக்கு விரந்து..அவர் ராஜிநாமாவை விலக்கிக் கொள்ள சொன்னதாகவும்..கூறப்படுகிறது.
(நன்றி-தினமணி)

டோண்டு சாரும்..மூன்று லட்சமும்..

நான் மரத்தடி,தமிழ்மணம் ஆகியவற்றை படித்து வந்த நேரம்...

தமிழ்மணத்தில்..தமிழச்சியின் எழுத்துகளும்...அவரின் பிரச்னைகளை எதிகொள்ளும் பாங்கும் எனக்குப் பிடிக்கும்...பெரியாரின் கொள்கைகளில்..அவரின் பங்கு டைபிஸ்ட் பங்குதான்..என்றாலும்..மற்ற அவர் சொந்தமாக இடும் பதிவுகளும் சிந்தனையை தூண்டுபவையாகும்..

அடுத்து..கோவிசாரின் பதிவுகள்..மிக அருமையான பல பதிவுகள் ..என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளன.

மூன்றாவதாக..டோண்டுவின் பதிவுகள்..

சாதாரணமாக ஒரு பதிவு சிறிதாய் இருந்தாலே படிக்கத்தோன்றும்..(அதனால்தான்..பத்திரிகைகளும் ஒரு பக்க கதைகளை விடுவதில்லை)..ஆனால்..டோண்டுவின் பதிவுகள்..நீளமானவை..இருப்பினும்...விஷயம் இருப்பதால் படிக்கத் தோன்றும்..அதனால்தான்..அவர் ஹிட் கவுண்டர் 3லட்சம் வருகையாளரை நெருங்கப்போகிறது.

சில சமயங்களில்..இணையப்பக்கங்களில் பதிவிடுவோர்..பார்ப்பன எதிர்ப்பாளர்களாகவே இருக்க வேண்டும்..என விதி உள்ளதோ..என எண்ணத்தோன்றியுள்ளது.ஆனால்...டோண்டுவின் சாதனையைப் பார்க்கும் போது ..அது தவறு என்றே தோன்றுகிறது.டோண்டு பதிவிடாத தலைப்புகளே இல்லை எனலாம்.,

மதர் இந்தியா..என்று..ஒரு ஆங்கில பத்திரிகை வரும்..அதன் ஆசிரியர் 'பாபு ராவ் படேல்'..அவரின் கேள்வி பதில்கள்..அந்த நாட்களில் பிரசித்தம்...கிட்டத்தட்ட அதே பாணி..டோண்டுவுடையது.சுவாரஸ்யமான் பதில்கள்.

அவரைப்பற்றி..சொல்லும்போது..ஒரு குறையையும் சொல்ல ஆசைப்படுகிறேன்..தன்னைப் பற்றி தானே சற்று அதிகமாக சொல்லிக்கொள்வது...

ஆமாம்..இன்று எல்லோரிடமும்தான் அது உள்ளது..என்கிறீர்களா? அது
வும் சரிதான்..

தன்னால் அறிவிக்கப்பட்ட விருதை தானே வாங்கிக்கொள்வது இல்லையா ..அதுபோலத்தானே இதுவும்.

டோண்டு சார்..மேன்மேலும்..பல மைல் கற்களை கடக்க வாழ்த்துகள்.

Wednesday, November 5, 2008

அதி புத்திசாலி அண்ணாசாமியின் சந்தேகமும்...அமெரிக்க அதிபர் தேர்தலும்...

அண்ணாசாமிக்கு...அமெரிக்க அதிபர் தேர்தலில்..எப்படி எப்படி ஊழல் நடந்திருக்கும் என்று அறிய ஆவலாம்...

நம்ம ஊர்ன்னா...லட்டுக்குள்ள மூக்கூத்தி வைச்சு தருவாங்க..ஆனா..அமெரிக்க பெண்கள் மூக்கூத்தி போடுவாங்களா...போடலேன்னா..மூக்கூத்திக்கு பதில் என்ன குடுத்திருப்பாங்க..
தண்ணீ கஷ்டம் இருக்கும்னா...குடம் கொடுத்திருக்கலாம்...அதுவும் இல்லை...அப்போ பெண்கள் ஓட்டை எப்படி வாங்கி இருப்பாங்க?

ஒரு ஓட்டுக்கு.. நம்ம ஊருன்னா..150...200..ரூபாய் கொடுத்திருப்பாங்க..அங்கே எவ்வளவு டாலர் கொடுத்திருப்பாங்க?

ஆண்களுக்கு...சாராயம் வாங்கி..கொடுத்திருப்பாங்களா? அப்படி கொடுத்திருந்தால்..கூட கடிச்சுக்க நம்ம ஊர்ல..ஊறுகாய் இருக்கும்..அங்கே என்ன இருந்திருக்கும்?

பிரியாணி கொடுத்திருப்பாங்களா... மட்டனா ,சிக்கனா ,எவ்வளவு எலும்பு துண்டு இருந்திருக்கும்?

கள்ள ஓட்டு போட்டிருப்பாங்களா?

Booth Capturing இருந்திருக்குமா? அங்கே எல்லாம் மறு தேர்தல் நடக்குமா?

தேர்தல் செல்லாதுன்னு ..யாராவது கேஸ் போடுவாங்களா?

எத்தனைப் பேருக்கு...கைகலப்பு நடந்து ..காயம் ஏற்பட்டிருக்கும்...

ஓட்டு எண்ணிக்கை நியாயமா நடந்திருக்குமா?

(அப்பாடா...நாமும் அமெரிக்க தேர்தல் பற்றி ஒரு பதிவு போட்டுட்டோம் இல்ல)

நான் படித்த சில அருமையான வரிகள்...

1.தப்பு செய்யற யாருக்குமே பலம் கிடையாது..எப்பவும் அப்படிப்பட்டவர்களை முறியடிக்க சாதுர்யம்தான் முக்கியம்.

2.பெண்களுக்கு சம அந்தஸ்து இருக்கா..அவளுக்குன்னு ஒரு மனசு இருக்குன்னு கூட சிலர் நினைக்கறதில்ல

3.பேனாவில்..மையும்..திமிரும் இருந்தா..எதை வேண்டுமானாலும் எழுதிடறதா?

4.பணம்..பெண்..இரண்டுமே போதையானது..அது நல்ல வழியில் வந்தா நிலைக்கும்...கெட்ட வழியில் வந்தால் விட்டு ஓடிடும்..

5.you can erase some one from your mind..getting them out of your heart is another story.

6.winners never quit...quitters never win

7.வண்டிக்கு வருத்தம் ஏது...அதை இழுக்கற மாட்டுக்குத்தான் வலி தெரியும்.

8.படிப்பறிவு என்பது வேறு..கல்வி அறிவு என்பது வேறு..படிப்பறிவு என்றால் ..அடுத்தவரின் அறிவை உள்வாங்குகிறோம்..கல்வி அறிவு என்றால் உள்ளே இருக்கும் ஆற்றல் வெளியே வருவது.

9.தந்தை...ஒரு நண்பனைப்போல உன்னைக்கவனிக்கிறார்..வேலைக்காரனைப்போல உனக்கு பணிந்து போகிறார்..குருவைப்போல வழி காட்டுகிறார்..

10.அழுக்கிலே நெருப்பு பத்தி எரிஞ்சாலும்..நெருப்பில அழுக்கு கொஞ்சம் கூட ஒட்டறதில்ல...

11.உலகில் இன்று எது வேண்டுமானாலும் விலைக்கு கிடைக்கும்...விலைக்கு கிடைக்காத ஒன்றே ஒன்று..தாயின் அன்பு மட்டுமே..

இவற்றை எல்லாம்..எழுதியவர்கள் யார் என தெரியவில்லை...எழுதியவர்களுக்கு நன்றி.

Tuesday, November 4, 2008

இலங்கையில் பாதிக்கப் பட்டோருக்கு உதவி போய் சேருமா?

இலங்கையிலிருந்து பல தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக வந்த வண்ணம் உள்ளன.,

எது உண்மை? எது பொய்? என தெரியவில்லை.

'கிளிநொச்சி'யை நெருங்கி விட்டோம்..கூடிய விரைவில் கைபப்ற்றி விடுவோம்' என்கிறது சிங்கள ராணுவம்.ஆனால் அங்கிருந்த இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள்..இடம் பெயர்ந்துள்ளதாகத் தெரிகிறது.

கடும் யுத்த சமயங்களில் கூட..பாதிக்கபட்டவர்களுக்கு உதவும் ..தன்னார்வ தொண்டு நிறுவனங்களும்..நடுனிலை செய்தி தரும் செய்தி தரும் செய்தி நிறுவன நிருபர்களும் அனுமதிக்கப்படுவர்.ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன்னமேயே..இலங்கை ராணுவம்..சர்வதேச தோண்டு நிறுவனங்களை வெளியேற்றி விட்டது..ராணுவ நிருபர்களும் வேவு பார்க்க முடியா நிலை.

இந்நிலையில் நாம் அனுப்பும் மருந்து,உணவு பொருள்கள் பாதிக்கப்பட்டோருக்கு போய் சேருமா?

இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் அரசு இதை கண்காணிக்க வேண்டும்..இல்லாவிட்டால்..எவ்வளவு டன் பொருள்கள் நாம் அனுப்பி உள்ளோம் என்பது புள்ளிவிவரங்களுக்கு மட்டுமே பயன்படும்.

வாய் விட்டு சிரியுங்க...

1.டெலிஃபோன்ல வேலை செய்யற பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்தியே என்ன ஆச்சு?
all the lines are engaged..please try after some yearsனு சொல்லிட்டா.

2.அந்த மெகாசீரியல் இயக்குநர் தன்னைச்சுற்றி வீடியோ கேசட்களோட ...தலையை பிச்சுக்கிட்டு இருக்காரே..ஏன்?
எந்தெந்த கேரக்டரை எந்தெந்த இடத்திலே விட்டோம்னு தெரியலையாம்...தேடிக்கிட்டு இருக்கார்.

3.தலைவர் ஏன் எப்பவும் கையில் scaleஐ வைச்சுக்கிட்டு பேசறார்
எதையும் அவர் அளந்துதான் பேசுவாராம்..

4.அந்த கட்சித்தலைவரை ஏன் pota சட்டத்தில கைது பண்ணினாங்க?
அவர் முதல்வரை போடா ன்னு சொன்னாராம்...அதனால் தான்...

5.காதலன்-நமக்கு கல்யாணம் ஆன பிறகும் ..இதுபோல ஒருவர் மேல ஒருவர் அன்பா இருப்போமா?
காதலி-அது..எனக்கு வரப்போற கணவனையும்...உங்களுக்கு வரப்போற மனைவியையும் பொறுத்தது.

6.மெகா சீரியல்...கதாசிரியர் ஆகணுமா? அதுக்கு உன் கிட்ட என்ன தகுதி இருக்கு?
முன்னாலே ஓட்டல்ல யாராவது அரைச்சு வைச்சுட்டுப்போன மாவை நான் மறுபடியும் அரைச்சிருக்கேன்

Monday, November 3, 2008

புரிந்துணர்வும்...அன்பு உள்ளமும்..

காந்தக்கல் இருக்கிறதே..அது..தான் எவ்வளவு பெரியவன் என்று பார்ப்பதில்லை..தன்னருகே வரும்..சிறு இரும்பு ஊசியையும்..தன்னுள் இழுத்துக்கொள்கிறது.

கொடிகளை..மரங்கள் அரவணைத்துக்கொள்கின்றன.

நதிகளின் சங்கமமாக கடல் திகழ்கிறது.

நம் மனமும்..அதுபோல நம்மை அறியாது..யாருடனாவது லயித்து விடுகிறது.அது நட்பு..பாசம்..காதல்..என இடத்திற்கு ஏற்றார் போல பெயரைப் பெறுகிறது.

ஒருவரிடம் நாம் வைக்கும் அன்பு..அல்லது ..மதிப்பு..பண்டமாற்று போல ..ஏதோ ஒரு பொருளுக்கு ஏதோஒரு பொருள் ..வழங்குவது போல அல்ல.,

நீ எப்படி இருக்கிறாயோ..அதேபோல..நான் எப்படி இருக்கிறேனோ.அதே போல் இருந்து விட்டுப் போவோம் என்பதில் புரிந்துணர்வு இருப்பதாய் ..நான் நினைக்கவில்லை.இருவருக்கும் இடையே,,ஏற்றுக்கொள்ள இயலா..மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும்..அந்த நட்பு நிலைக்க வேண்டும்.

ஈ.வெ.ரா.விற்கும் ராஜாஜிக்கும் அப்படிப்பட்ட நட்புதான் இருந்தது.

என் மனதில் அழுக்கு இல்லை..கண்ணாடி போல சுத்தமாக இருக்கிறது...அதே போன்று என்னை புரிந்துக்கொள்ளாதவன் மனமும் இல்லை என்றால் கவலை இல்லை.ஆனால்..என்னை புரிந்துக் கொண்டவன் மனமும் அப்படி இல்லை என்றால்..மனம் சங்கடப்படவே செய்கிறது.

அன்பு செலுத்தாமல் இருந்தோமெனில்..அதில் என்ன ஆனந்தம் இருக்க முடியும்?

நாம் அன்பு செலுத்தும் நபரிடமிருந்து என்றாவது பிரிய நேரிடுகிறது மன வேதனையுடன்.இல்லை அவர் நம்மை விட்டுப் பிரிகிறார் அதே வேதனையுடன்.

இப்படியெல்லாம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

அன்பைவிட்டு துவேஷம் நம் மனதில் குடியேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.ஏற்றத்தாழ்வின்றி அன்புடன் இருக்க வேண்டும்.அன்பற்ற வாழ்வு வாழ்ந்து வாழ்க்கையை வீணடிப்பதில் என்ன லாபம்?

ஆகவே..நண்பர்களே..அன்பு..சாதி..மதங்களுக்கு அப்பாற்பட்டதாய் இருக்கட்டும்.

இந்த புரிந்துணர்வு இருந்தால்...எல்லாம் நன்மையாய் முடியும்.

( மீள்பதிவு )

நானும்..ஹிந்தியும்...

ஹிந்தி படித்திருக்க வேண்டிய அவசியத்தை நான் வாழ்க்கையில் பல சமயங்களில் நினைத்து வருந்தியிருக்கிறேன்..,இது எல்லாம் ...இப்படியாகும்னு தெரிந்திருந்தால்..அப்போது நானும் சேர்ந்து 'ஹிந்தி ஒழிக' குரல் கொடுத்திருக்க மாட்டேன்.,

நான் பள்ளியில் படிக்கும் போது..ஹிந்தி தேர்ட் லேங்க்வேஜ்..படிக்க வேண்டும்...பரீட்சையும் எழுத வேண்டும்..ஆனால் அதில் பாஸ் மார்க் வாங்க வேண்டும் என்பதில்லை..மொத்த மதிப்பெண்களில் அது சேராது...அதனால் அவசியமில்லை.

மேலும்..அந்த சமயங்களில்..தி.மு.க. போன்ற திராவிட கட்சிகள் ஹிந்தியை எதிர்த்ததாலும்...தினத்தந்தி போன்ற பத்திரிகைகள்..கார்ட்டூனில்...ஒரு தடியான பெண்ணை..கொம்புகளுடன் வரைந்து..ராட்சசி போல உடை அணிவித்து..கையில் ஆயுதத்துடன் ..காட்சி அளிக்க வைத்து..என்னைப் போன்ற இளைஞர்கள் மத்தியில் 'இதுதான் ஹிந்தி'என்ற எண்ணத்தை உருவாக்கி விட்டன.

இளரத்தம்...பின் கேட்கவா வேண்டும்.."ஹிந்தி ஒழிக" கோஷங்களும்...'உடல் மண்ணுக்கு..உயிர் தமிழுக்கு'போன்ற கோஷங்களும் போட்டு...எங்கள் ஹிந்தி புத்தகங்களை கொளுத்தினோம்.

அப்போது எங்களுக்கு ஹிந்தி வாத்தியார்..ஒரு மேடம்...அதனால் எங்கள் அட்டூழியம் அதிகமாகவே இருக்கும்.

எங்கள் தலைமை ஆசிரியர்.திரு சி.ஆர்.ராமனாதன்..மலையாளி..அவருக்கும் ஹிந்தி தெரியாது..மிகவும் கண்டிப்பானவர்.

எங்களைப் பற்றி தெரிந்துக்கொண்டு..ஹிந்தி வகுப்பின் போது ..வகுப்பறையில் நுழைவார்..ஹிந்தி மேடத்தைப் பார்த்து'என்னம்மா..ஒழுங்கா படிக்கிறாங்களா?'என்பார்.,

உண்மையை சொல்ல பயந்துக்கொண்டு..அந்த மேடமும் 'ஓ' என தலையாட்டுவார்கள்..உடனே அவர் என்னை கைகாட்டி..'இவனை ஒரு கேள்வி கேளுங்கோ'என்பார்.

உடனே மேடம் என்னிடம் 'துமாரா நாம் கியா ஹை?'என்பார்..

எனக்கு வாயில் வந்தவற்றை..உதாரணமாக 'கலம் குர்சி பர் ஹை'என பதில் சொல்வேன்..

'சரியாச் சொல்றானோ' என்பார்..

மேடமும் ..எங்கே..இல்லை என்று சொன்னால்..தனக்கு சரியாக சொல்லித்தர தெரியவில்லை..என ..திட்டு கிடைக்குமோ..என பயந்து..'சரியாகச் சொல்கிறான்' என்பார்..தலைமை ஆசிரியரும்..என்னைப்பார்த்து 'குட்"என சொல்லிவிட்டு..அடுத்த பையனைக் கைகாட்டுவார்..அவன் தன் பெயரை 'மேஜ்'என சொல்லி நல்லப் பெயரை எடுப்பான்..

இப்படியாக நாங்கள் ஹிந்தி படித்தோம்...பின்னர் பொறுப்புணர்ந்ததும்..அவசியமும் உணர்ந்து ..ஹிந்தியை தனியாகக்கற்று 'ராஷ்ட்ரபாஷா'வரை படித்தேன்.

ஆனாலும்...பேசுவதை புரிந்துக்கொள்ளும் என்னால்..திரும்பி சரளமாக பேசமுடியாது.

Sunday, November 2, 2008

மௌலியும்,விசுவும் மற்றும் நானும்..

காஃபி வித் அனு நிகழ்ச்சியில் சோ வும் மௌலியும் கலந்துக் கொண்ட நிகழ்ச்சி பார்த்திருப்பீர்கள்..அது சம்பந்தமாக வந்த டோண்டுவின் பதிவும் படித்திருப்பீர்கள்.,


விஷயம் இப்போது அதைப் பற்றியல்ல.. அந்த நிகழ்ச்சியால் என் முன் கொசுவத்தி சுருள்...தோன்ற அதன் பதிவு.

மௌலி என் நண்பர் ..நான்,மௌலி,விசு,ராஜாமணி,கிஷ்மூ மற்றும் அட்லாண்டா கணேஷ் அகிய ஐவரும் சேர்ந்து..எங்க டீன் ஏஜில் 'யங்க்ஸ்டர்ஸ் கல்சுரல் அஸ்ஸோஸியேஷன்' என்ற குழுவை தொடங்கினோம்.

சிவாஜி கணேசனுக்கு 'பத்மஸ்ரீ' விருது கிடைத்தபோது..அவரை முதலில் பாராட்டியது...நாங்கள்தான்..அதுவும் அம்பத்தூரில்.ரஞ்சன் தலைமையில் பாராட்டு விழா

பின்..முதன் முதலாக மௌலி எழுதிய..'லவ் ஈஸ் பிளைண்ட்"நாடகம் நடத்தினோம்..இரவு..10 மணிக்கு கிளம்பி ..நாங்களே இரவு முழுதும் அம்பத்தூரை சுற்றி நாடகத்திற்கான சுவரொட்டி ஒட்டியிருக்கிறோம்.,அதுபோன்ற சமயங்களில் ..இரவு..யாராவது ஒருவர் வீட்டில்..அவரவர் தாயார் ..அளிக்கும் உண்வை சாப்பிட்டிருக்கிறோம்.
பின் அவரது "BON VOYAGE" என்ற நாடகம்..தி.நகர்..வாணிமஹாலில் நடத்தினோம்.,அப்போது மௌலி..பி.டெக்., படித்துக் கொண்டிருந்தார்.பின் அந்த நாடகம் மூலம் ..மௌலி,விசு ஆகியவர்கள் y.g.p.,நாடகக் குழுவில் ஐக்யமாயினர்.,Y.G.மஹேந்திரனும்..மௌலியும் கல்லூரி தோழர்கள்.

மௌலியும்,விசுவும்..தைர்யமாக ..சினிமா உலகில் நுழைய...வங்கி வேலையில் இருந்த நான் அவர்களுடன் ஓட்டத்தில் கலந்துக் கொள்ள இயலவில்லை.வெறும் நாடகங்களுடன் நிறுத்திக் கொண்டேன்.

Saturday, November 1, 2008

எச்சில் இலை

நமக்கு கோபம் வந்தால் 'போடா எச்சக்கலை' என திட்டுபவர்கள் ஏராளம்.

ஆனால் ராமகிருஷ்ண பரகம்சருக்கு 'எச்சில் இலை' என்பது எப்படி இருக்கிறது பாருங்கள்.

மனிதன் எப்படி வாழ வேண்டும் என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்
மனிதன் எச்சில் இலை போல் வாழணும் என்றார்.

வாழி இலை யை துண்டாக்கி உணவு உண்ண போடுகிறோம் .பசித்தோர் முகம்
பார்க்கும் பாக்யம் அதற்கு கிடைக்கிறது. அது சாப்பாட்டு இலை ஆகவில்லை
எனில் ,ஏதோ விழாவில் வீட்டு வாசலில் கட்டப்படும். எல்லோரையும் பார்க்கும் சாதாரண நிலை அதற்கு ஏற்பட்டிருக்கும்.

விழா முடிந்ததும் குப்பை மேட்டிற்கு த்தான் அது போகும். ஆனால் எச்சில் இலைக்கு ஒரு பெரிய திருப்தி இருக்கிறது. அது மக்களுக்கு முழுவதுமாக பயன்பட்ட பின்னே அழிகிறது.

என்னே அவரது மனம்.

ஆகவே நண்பர்களே நம்மை அறியாமல் நாம் திட்டுவதாக நினைத்துக் கொண்டு

"எச்சி இலை "என திட்டுவதாக எண்ணி பாராட்டி வருகிறோம்.

அரசியல்வாதிகளும்...சினிமா கலைஞர்களும்...

திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின்..கலைஞர்கள் ..அரசியலில் பங்கு கொள்வது என்பது அதிக மாகிவிட்டது.

ஆரம்ப காலங்களில்..வாசன்,மெய்யப்பன் போன்றோர் காங்கிரஸ் கட்சியில் ஈடுபாடுடன் இருந்தனர்.எம்.ஆர்.ராதா..பெரியாரின் பிரதம சீடராகவே இருந்தார்..பின் அண்ணாவின் வழியில்...கலைவாணர்,கே.ஆர்.ராமாசாமி,கண்ணதாசன்,கலைஞர்,சிவாஜி ஆகியோர்..தி.மு.க.வில் அங்கத்தினர்களாகவும்..ஒரு சிலர் ஆதரவாளராகவும் இருந்தனர்.ஒரு நடிகர்..தீவிர அரசியலில் புகுந்து எம்.எல்.ஏ., ஆனது..எனக்குத் தெரிந்தவரை முதலில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தான்.பின்..காங்கிரஸ்ஸிலிருந்து எம்.ஜி.ஆர்.,தி.மு.க.விற்கும்...சிவாஜி..காங்கிரஸ்ஸிற்கும் வந்தனர்.
தி.மு.க.வில் எம்.ஜி.ஆர்.,மா பெரும் சக்தியாக திகழ்ந்தார்.,அண்ணாவே ஒரு சமயம்...நாம் கூட்டத்தில் எவ்வளவு நேரம் பேசினாலும் ஏற்படும் பயனைவிட..தம்பி..எம்.ஜி.ஆர்.,தன் முகத்தை ஒரு முறை மக்களுக்கு காட்டினால் ஏற்படும் பயன் அதிகம்..என்றார்.

அ.தி.மு.க., தோன்றிய பின்னர்...திரை உலகினர் அரசியலில் ஈடுபடுவது அதிகரித்தது..,எம்.ஜி.ஆர்.,ஆட்சியின் போது..சிரிப்பு நடிகர் ஐசரி வேலன்,திருச்சி சௌந்தரராஜன் ஆகிய நடிகர்கள் அமைச்சர்களாகவே இருந்தனர்.புரட்சி நடிகருக்குப்பின் ஜெ முதல்வர் ஆனதும்..ராதாரவி,,எஸ்.வீ.சேகர் ஆகியவர்கள் எம்.எல்.ஏ.,(எஸ்.எஸ்.சந்திரன்,ராஜ்யசபா எம்.பி.,)ஆகினர்.
தி.மு.க.தரப்பில் நெப்போலியன் எம்.எல்.ஏ.,ஆனார்.,சரத்குமார்.ராஜ்ய சபா எம்.பி.ஆனார்.இயக்குநர் ராமனாராயணன் எம்.எல்.ஏ.,ஆனார்.

பல நடிகர்கள்..குமரி முத்து,தியாகு,சந்திரசேகர் போன்றவர்கள் தி.மு.க.வின் பேச்சாளர் ஆயினர்.,தேர்தல் சமயத்தில்..ராதிகா..சிம்ரன்..சௌந்தர்யா,மனோரமா போன்றோர்..ஏதோ ஒரு கட்சிக்கு பிரசாரம் செய்தனர்.

சிவாஜி,பாக்யராஜ்,ஆகியோர் கட்சி ஆரம்பித்து அரசியலில் தோற்றனர்.

டி.ராஜேந்தர்..தி.மு.க.தரப்பில்..சட்டசபை உறுப்பினர் ஆகி..பின்னர்..ஒரு தனி கட்சி ஆரம்பித்து நடத்தி(?!) வருகிறார்.

விஜய்காந்த்,சரத்குமார்..ஆகியவர்களும் தனிக்கட்சி ஆரம்பித்துள்ளனர்.கார்த்திக்..ஃபார்வேர்ட் பிளாக் கின் தமிழக தலைவராகி..பின் விடுவிக்கப்பட்டு..இப்போது பதவிக்கு கனவு கண்டுகொண்டு இருக்கிறார்.,

ஆமாம்...இப்படி நடிகர்கள்..அரசியலில் ஈடுபடலாமா? என்று கேட்டால்...

அவர்களும் இந்தியக் குடிமகன்கள்தானே...ஒவ்வொருவருக்கும் அதற்கான உரிமை உண்டு...இன்னும் சொல்லப்போனால் ..இன்றைய அரசியல்வாதிகளைவிட...மக்களிடம் திரைஉலகினருக்கே நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மக்கள்..அவர்களின் ரசிகர்கள்...அவர்களுக்காக எதையும் செய்வார்கள்...

ஆனால்...திரை உலகத்தினரே..உங்களின் அரசியல் பிரவேசம்..ஆரோக்யமானதாய் இருக்கட்டும்..சுயநலமில்லா உழைப்பிருந்தால்...கண்டிப்பாக வெற்றி அடைவீர்கள்..

ஆமாம்...இவ்வளவு சொல்லிவிட்டு முக்யமானவரை விட்டுவிட்டேனே என்கிறிர்களா?

உண்மையில்...இன்று அரசியலுக்கு வர முழு தகுதியும் உள்ளவர் அவர்தான்..அவர் கண்டிப்பாக வருவார்..என்றே தோன்றுகிறது..சரியான சந்தர்ப்பத்திற்கு காத்திருக்கிறார் என்றே எண்ணுகிறேன்.

எம்.ஜி.ஆரும்..60 வயது தாண்டிய பின்னரே..தனிக்கட்சி ஆரம்பித்தார்...

இவரும் அதற்காகத்தான் காத்திருக்கிறாரோ?

(இப்பதிவில்..யார் பெயரேனும் ..விட்டுப்போயிருந்தால்...என் கவனக்குறைவே தவிர...வேறு காரணம் இல்லை)

Friday, October 31, 2008

தீபாவளிக்கு வெளியான பட விமரிசனம்..

இந்த தீபாவளிக்கு வந்த இந்த படம்..வசூலில் ஒரு சாதனையை ஏற்படுத்தும் என்று நம்பலாம்.

படத்தின் பெரும் பகுதி..கிழக்காசிய நாடுகளான சிங்கப்பூர்..மலேசியா,தாய்லாந்த்,ஹாங்காங்,ஜப்பான் இவற்றிலேயே படமாக்கப்பட்டிருக்கிறது.தமிழில் ஒரு படம்..இவ்வளவு வெளிநாடுகளில் எடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை எனலாம்.

காமிராவும்..அந்நாடுகளின் இயற்கை அழகை எல்லாம்..அப்படியே அள்ளி..அள்ளி தந்திருக்கிறது.அவ்வழகில் கண்டிப்பாக நாம் மயங்கிவிடுவோம்.இதில் கதானாயகனுக்கு நாலு கதாநாயகிகள்.ஒளிப்பதிவாளர் ராமமூர்த்தி.

அதே போன்று..எது வெளிப்புறக் காட்சி..எது அரங்க அமைப்பு என்றே தெரியாதவாறு..செட் .போட்டிருக்கும் ஆர்ட் டைரக்டருக்கு ஒரு சபாஷ்.

படம் வெளியாகும் முன்னே பாடல்கள் அனைத்தும் வெளிவந்து விற்பனையில் சக்கைப் போடு போட்டுள்ளதால்..இசையைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை.

படத்தின்...தயாரிப்பாளரும்..இயக்குநரும்..ஏற்கனவே இரண்டு மாபெரும் வெற்றிகளை கொடுத்தவர்.இதில் ஹேட்ரிக் அடித்துள்ளார்.

படம்-உலகம் சுற்றும் வாலிபன்
இயக்குநர்,தயாரிப்பாளர்-எம்.ஜி.ஆர்.
இசை-எம்.எஸ்.வி.

இறுதிவரை பிரியாதிருக்க...(கவிதை)

இன்று

உன் மணநாள்

இறுதிவரை துணையிருப்பாய்

என்றிருந்தேன்..

ஆயின்..வேறொருவன் துணையானாய்

மரணமே...

இனி என் துணை

மறு பிறப்பென்று ஒன்றிருந்தால்

மறவாமல் உனக்கு

மகனாய் பிறந்திடுவேன்..

அப்போதேனும்..

உன் இறுதி வரை

உனைவிட்டு பிரிய வேண்டாமே!!!!

Wednesday, October 29, 2008

அரசியல் புதிர் போட்டி

தமிழக அரசியலை உன்னிப்பாய் கவனித்து வருபவரா..நீங்கள்...அப்போது கீழ்கண்ட வினாக்களுக்கு பதில் தெரிகிறதா என்று பாருங்கள்..

1.சுடுகாடு ஷெட் ஊழல்..செய்ததாக யார் மீது புகார் எழுந்தது ?தற்போது அவர் எந்த கட்சியில் உள்ளார்?

2.காலில் மனைவி யுடன் விழுந்து...ஆசி வாங்கிய முன்னாள் அ.தி.மு.க.அமைச்சர்..இன்று தி.மு.க.அரசிலும் அமைச்சர்..இவர் யார்?

3.தன் பிறந்த நாள் அன்று...அந்த தலைவர் ஒரு பத்திரிகை ஆசிரியரிடம் ஆசி பெற்றார்..அந்த தலைவர் யார்?

4.அ.தி.மு.க.,ஆதரவாளர் முதலில்..பின் தி.மு.க.தயவால் ராஜ்யசபா உறுப்பினர் ஆகி..மீண்டும் பதவி போனதும் அ.தி.மு.க.வில் சேர்ந்து..இன்று அதிலிருந்து விலகி ஒரு கட்சியும் ஆரம்பித்துள்ளார்.இவர் யார்?

5.தமிழக அமைச்சரவையில் ..இலாகா இல்லாத அமைச்சராக செயல் படும் அமைச்சர் யார்?

6.கலைஞருக்கு தங்கபேனா கொடுத்தவர்..இன்று பரம வைரி..யார் இவர்?

7.தன் முதுகில் குத்து அடிக்கடி வாங்கி...தன் ஜாதகம் அப்படின்னு சொல்லும் பகுத்தறிவு வாதி யார்?

8.பல தலைவர்கள்..பிரபல எழுத்தாளர்கள் படைப்பெல்லாம் அரசுடமை ஆக்கப்பட்டும்..இவருடையது ஆகாமல்.முட்டுக்கட்டை போடப்பட்டுள்ள தலைவர் யார்?

9.புத்தகக் கண்காட்சியில்..தன் பணத்தில் ஒரு கோடி நன்கொடை கொடுத்து..ஒவ்வொரு வருடமும்..சிறந்த எழுத்தாளருக்கு பரிசு வழங்கச் சொன்னவர் யார்?

10.2009ல் எம்.பி., 2011ல் முதல்வர் என கனவு காண்பவர் யார்?

ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 5 மதிப்பெண்.,
நீங்கள் 50 மதிப்பெண்களையும் பெற்றிருந்தால்...வருங்கால முதல்வர் நீங்கள் தான்...
40 மதிப்பெண் என்றால்..அமைச்சர் ஆகலாம்..
35 மதிப்பெண் என்றால் ஒரு எம்.எல்.ஏ.,ஆகலாம்..
அதற்கும் குறைவு என்றால்..பேப்பர் படிப்பதைக் கூட நீங்கள் விட்டு விடலாம்..காசு மிச்சம்.

வாய் விட்டு சிரியுங்க..

1. டாக்டர் சாப்பிடும் போது..அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு ..அப்புறம்..சாப்பிட்டதை வாய்க்கு கொண்டு வந்து அரைச்சு சாப்பிடறேன்..
இந்த நேரத்தில எப்படி என் க்ளினிக் வந்தீங்க?
கால் நடையாகத்தான்

2.டாக்டர்..எனக்கு டைஃபாய்டா...என் நண்பர் ஒருத்தர் டைஃபாய்ட் வந்துதான் செத்தார்..நானும் அப்படி செத்துடுவேனா?
கவலைப்படாதீங்க..அப்படி ஏதாவது ஆச்சுன்னா..உங்களுக்கு வந்தது மலேரியான்னு சொல்லிடறேன்.

3.அந்த ஃபைனான்ஸ் கம்பனி போலியானதுன்னு எப்படி சொல்ற
பணம் போட்டவங்களுக்கு எல்லாம்..duedate ல பணத்தை ஒழுங்கா திருப்பித் தந்துடறாங்களாம்

4.இன்னிக்கு எல்லைப் பிரச்னைக் குறித்து சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
எந்தெந்த நாட்டுக்கிடையே
என்னுடைய அம்மாவுக்கும்..மனைவிக்கும் இடையேத்தான்...எல்லை மீறி சண்டை போடுவதில்லை என்று..

5.மாப்பிள்ளை வரதட்சணை வாங்கினார்னு..யாரோ போலீஸ்ல புகார் செஞ்சுட்டாங்க..
அப்புறம் என்ன ஆச்சு?
வரதட்சணை வாங்கற பழக்கம் தனக்கில்லைன்னு ..தன்னோட மூணு மனைவியையும் கொண்டுவந்து சாட்சியா காட்டினாராம்.

6.டாக்டர்- சிஸ்டர்..ஆபரேஷன் முடிஞ்சதும் 'சில்'லுன்னு ஒரு காபி வேணும்
ஏன் டாக்டர்
ஆபரேஷன் பண்ணின உடல்லே இருந்துதான் 'ஆவி'பறக்குமே

Tuesday, October 28, 2008

தி.மு.க.வில் ஆற்காட்டார் இடத்தை பிடிக்கிறாரா பாலு?

தி.மு.க.வில்..இக்கட்டான நேரங்களில்..முரசொலி மாறன் இருந்தவரை அவரை கலைஞர் பேச விடுவார்.ஒரு சமயம் கலைஞர் முன்னிலையிலேயே..அமைச்சர்கள்..எம்.எல்.ஏ.க்கள் என அனைவரையும் ஒரு பிடி பிடித்தார்.
அவரது மறைவுக்குப் பின்..அந்த வேலையை ஆற்காடு வீராசாமியை விட்டு செய்ய வைத்தார் கலைஞர்.பா.ம.க. கூட்டணியில் தி.மு.க.,வை காராசாரமாக விமரிசித்து வந்த போது..அக்கட்சியைச் சேர்ந்த காடுவெட்டி பற்றி பேச வைத்து..பா.ம.க.வை கழட்டி விடும் வேலைக்கு உபயோகித்துக் கொண்டார்.
ஆனால்..பா.ம.க., பிரிந்து சென்றதும்..கம்யூனிஸ்ட்கள் விலகியதும்..தி.மு.க.விற்கு சற்றே கவலையை ஏற்படுத்தியது.எப்படியாவது அக்கட்சியை திரும்ப இழுத்துக் கொள்ள முயன்று வருகிறது.
ஆனால்..மின்வெட்டு...ஆற்காட்டாரை ஓரளவு கலைஞரிடமிருந்து தள்ளி வைத்திருக்க...கலைஞர் பா.ம.க.,வை திரும்ப கொண்டுவரும் வேலையை டி.ஆர்.பாலு விடம் ஒப்படைத்திருக்கிறார் போலிருக்கிறது.
திண்டிவனத்தில்..நான்கு வழி சாலை திறப்பு விழாவில்..பிரிந்தவர்கள்..மீண்டும் கூடி..வரும் தேர்தலில் வெற்றி பெறுவோம்..என மறைமுகமாக..பா.ம.க.,விற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
கலைஞர் சம்மதம் இல்லாமல் அவர் இவ்வேலையை செய்திருக்க மாட்டார் என நம்பலாம்.

மிருகங்களே..மனிதனாய் இருக்காதீர்கள்....

"இனம் காப்போம்
இன மானம் காப்போம்
இனப் படுகொலையை
என்ன விலை கொடுத்தேனும் தடுப்போம்"

-கலைஞர்-






நன்றியில் நாயாய் இரு
வீரத்தில் சிங்கமாய் இரு
ஞாபகத்தில் யானையாய் இரு
உறவுகளில் காக்கையாய் இரு
மானத்தில் மானாய் இரு
தந்திரத்தில் நரியாய் இரு
சேமிப்பில் ஒட்டகமாய் இரு -ஆனால்
மனிதா
மனிதனாய் மட்டும் இருந்திடாதே!!!

ஓ..மிருகங்களே..
நீங்கள் நீங்களாகவே இருங்கள்
மனிதனாகும் ஆசை வேண்டாம்...

Monday, October 27, 2008

இந்த குட்டிக்கதைக்கு வேறு அர்த்தம் கற்பிக்காதீர்....

இப்போது ..இந்த பதிவில் ..உங்களில் பலருக்குத் தெரிந்த குட்டிக்கதை ஒன்றை சொல்கிறேன்..
இதை படித்துவிட்டு..உடனே...மணிகண்டன்..போன்றோர்..வேறு ஏதாவது அர்த்தம் கண்டுபிடிக்காதீர்கள்...

ராமர்..ஒரு சமயம் வனத்தில் நடந்துக்கொண்டிருந்த போது...அடக்கமுடியா தாகம் ஏற்பட்டது..பக்கத்தில் எங்கேயாவது தண்ணீர் கிடைக்குமா?என்று தேடிப்பார்த்த போது...அருகாமையில் ஒரு பொய்கை இருப்பதைப்பார்த்தார்.கையில் இருந்த அம்பை..தரையில் ஊன்றி விட்டு..தண்ணீர் குடிக்கச்சென்றார்.குடித்து விட்டு திரும்பும்போது..அம்பை எடுக்க குனிந்தார்..அம்பு..தரையில் இருந்த ஒரு தவளை மீது குத்தி இருந்தது..தவளையும்..குற்றுயிராய்..மரணத்திற்கு போராடிக்கொண்டிருந்தது.

உடனே..ராமர்..'ஏ..தவளையே...நான் அம்பை தரையில் ஊன்றுவதற்கு முன்..நீ இருப்பதை தெரிவித்திருக்கலாமே?'என்றார்..

அதற்கு..தவளை'ராமா..வேறு..யாராவது இக்காரியத்தை செய்திருந்தால்..நான்..ராமா..எனக்கு உதவு..என உன்னை அழைத்திருப்பேன்..ஆனால்..நீயே இக்காரியத்தை செய்துவிட்டதால்...என்னால் உன்னை அழைக்கமுடியாமல் போயிற்று'என்றதாம்.

இது ஆத்திகவாதிகள் மட்டும் அல்ல..நாத்திகவாதிகளும்..ஒரு கதையாகவே எடுத்துக் கொள்ளவும்.

கலைஞர் பார்ப்பனராய் இருந்திருந்தால்....

கலைஞர் ஒரு பார்ப்பனராய் இருந்து..தமிழக முதல்வராயும் ஆகி..அனைத்துக் கட்சிக்கூட்டம் கூட்டி..இலங்கை தமிழர் பிரச்னைக்கு ..மத்திய அரசு முடிவெடுக்காவிட்டால்..40 எம்.பி.க்களும்
ராஜினாமா செய்வோம் என அறிவித்துவிட்டு,பின் தில்லியிலிருந்து..கண்துடைப்பாய்...பிரணாப் முகர்ஜி வந்ததும்..40வருட போராட்டம் 4 நாளில் முடிவெடுக்க முடியாது என உணர்ந்து..ராஜினாமா நாடகத்தை வாபஸ் பெற்றிருந்தால்..பார்ப்பன எதிர்ப்பு கலைஞர் என்ன சொல்லி இருப்பார்..என யூகித்து பின்னூட்டம் இடுங்கள்...சிறந்த பின்னூட்டம் இடுவோருக்கு...அவர் பதிவுகளுக்கு நான் 6 மாதம் தொடர்ந்து பின்னூட்டம் இடுவேன்.

Sunday, October 26, 2008

தாமிராவும்..பிளீச்சிங்க்பவுடரும்..பின்னே கலைஞரும்

தமிழன் ஒரு இளிச்சவாயான்..அவனை சாதாரண குழந்தையால் கூட கோபமூட்ட வைக்கலாம்...உடன் உணர்ச்சிவசப்படுபவன்...கோபம் வந்த சில நிமிஷங்களில் சமாதானம் அடைபவன்.
தாமிரா... ரிலையன்ஸின் பிரௌசிங்க் சென்டர் போனார்..அவரால் பிரௌஸ் பண்ண முடியவில்லை...அங்கிருந்த ஊழியர்களும் சரியான பதிலை சொல்லவில்லை..உடனே கோபமடைந்தார்..
ரிலையன்ஸ் மீது காறி உமிழுங்கள் என கோபத்தில் பதிவிட்டார்..பின் நண்பர்கள் சிலர் கூற ..கோபம் தணிந்து..ரிலையன்ஸை கண்டிக்கிறேன்..என்று மாற்றிக்கொண்டார்.

பிளிச்சிங்க். அவரது பதிவு ஒன்றால்...ஒருவர் மீது கோபம் கொண்டு..நாய்..சிங்கம் கதையெல்லாம் சென்னை பாஷையில் பதிவிட்டார்..கோபத்தில்..பின்னர்..அவர் நண்பர்களாலும்,கோபமும் தணிந்ததும் ..குறிப்பிட்ட பதிவை விலக்கிக்கொண்டார்.

கலைஞர்..இலங்கை தமிழர்களின் அவல நிலையை குறுந்தகடில் பார்த்தார்..உணர்ச்சிவசப்பட்டார்..அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டினார்.மத்ய அரசுக்கு 2 வாரம் அவகாசம் அளித்தார்..அதற்குள் ..அரசு முடிவெடுக்கவில்லை எனில் தமிழக எம்.பி.க்கள் 40 பேரும் ராஜினாமா செய்வார்கள் என்றார்..பிரதமர்..நாத்தழுதழுக்க பேசியதும்..கோபம் சிறிது தணிந்தது.ப்ரனாப் முகர்ஜியை அனுப்பி..கலைஞரின் கோபத்தை தணித்தனர்.கோபம் தணிந்த கலைஞர்..எம்.பி.க்கள் ராஜிநாமா இல்லை என அறிவித்து விட்டார்..

அதாவது..கலைஞரும்..தமிழன் ஆயிற்றே!!
தமிழனுக்கான இளிச்சவாய்த்தனமும்..உணர்ச்சி வசப்படுதலும்..விட்டுக்கொடுத்தலும்,விட்டுக்கொடுத்ததும் சால்ஜாப்பு சொல்வதுமான குணங்கள் அவரிடமும் உண்டாயிற்றே!!
அவரை அறிந்தவர்கள்..கலைஞர் ராஜதந்திரி என்கிறார்கள்..உண்மையா?

தலைவர்களின் தீபாவளி செய்திகள்...

பிரதமர்- இந்த நாள்..நல்ல நாள்..எல்லா மாநிலங்களும் இப் பண்டிகையைக் கொண்டாடுவதால்..என் காதுகளுக்கு இன்று எந்த பிரச்னையும் வராது..நாளை..எந்த மாநில முதல்வர் எந்த பிரச்னையை எழுப்புவார்னு தெரியலை...நீங்க என்ன கேட்டீங்க..தீபாவளி செய்தியா...நான் இதுவரை இந்த விஷயமாக சோனியாஜி யிடம் பேசவில்லை..அவர் இதில் என்ன முடிவு எடுக்கிறாரோ அதுதான் என் முடிவும்..செய்தியும்...

கலைஞர்-உடன்பிறப்பே..இன்று காலை தொலைபேசியில் பிரதமரிடம் பேசினேன்..நரகாசூரனிடம் மக்கள் பட்ட அன்னலை..நாத்தழுதழுக்க கேட்டார்...அவரது இந்த உணர்ச்சி கண்டு..நான் மெய்சிலிர்த்தேன்..39 ஆண்டுகளாக அண்ணா என் கனவில் வந்து..தம்பி..நீ வாளாயிருக்கிறாயே..என கேட்டுக்கொண்டிருந்தார்..இன்று பிரதமரின்..எண்ண அலைகள்..பார்க்கும் போது அண்ணாவின் மனதில் தைத்திருந்த முள் எடுக்கப்பட்டதாகவே உணர்கிறேன்.

ராமதாஸ்-என் நிலைபாடு குறித்து..பலரும்..பலவும்..பேசிக்கொண்டிருக்கிறார்கள்..எது..எப்படி இருந்தாலும்..காங்கிரஸ் உடன் கூட்டணி உண்டு..அன்புமணிக்கு ..மத்திய அமைச்சர் பதவி உண்டு.2011ல் பா.ம.க.ஆட்சி தமிழகத்தில் மலரும்.

ஜெயலலிதா- நரகாசூரன் போன்ற ..வன்முறை சக்திகளை..என் ஆட்சியில் இரும்புக்கரம் கொண்டு அடக்கியவள் நான்..ஆனால்..கருணாநிதி ஆட்சியில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.வரும் 28ம் தேதி ..கலைராஜன் தலைமையில் எஸ்,வீ.சேகர் வீட்டு முன்..இதற்கான ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

ப.சிதம்பரம்-நாட்டில் பண வீக்கம் இரட்டை இலக்கத்தில் உள்ளது..அடுத்த தீபாவளிக்குள் ஒற்றை இலக்கிற்கு வந்துவிடும்...ஆகவே பங்குசந்தை சீர்பட்டுவிடும்..பயம் வேண்டாம்.

ஆற்காடு வீராசாமி-தீபம்+ஒளி..அதுதான் தீபாவளி.ஆகவே மக்கள் ஒளிக்கு மின்சாரத்தை நம்பாமல்..தீபங்களை ஏற்றி வைத்துக்கொள்ளுங்கள்..அதனால்தான்..கலைஞர் பாமாயில் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் குறைத்துள்ளார்.

பர்னாலா--இதுபோல சமயங்களில் வாழ்த்துக்கள் சொல்வதுதான் என் வேலை..என எனக்கு நன்கு தேரியும்..ஆகவே ரம்ஜானுக்கு வாழ்த்து சொல்லி முடிந்ததுமே..தீபாவளி வாழ்த்து எழுதிவிட்டேன் (என்றபடி 100பக்கங்கள் எழுதிய புத்தகத்தை கொடுக்கிறார்)

ரஜினி-வாழ்த்து கேட்டு..என்னை யாரும்..கட்டாயப்படுத்த முடியாது..அதே நேரம்..நான் வாழ்த்து சொன்னால்..அதை யாரும் தடுக்க முடியாது..அப்போது ரசிகர்களை அழைத்துக்கொள்வேன்.

(நமது சரடு நிருபருக்கு அளித்த பேட்டி)

Saturday, October 25, 2008

தெய்வம் யார் அவரவர் பாணியில்

...

தெய்வம் இல்லை என்றான்

நாத்திகன்

தெய்வம் கோவிலில் என்றான்

ஆத்திகன்

தெய்வம் தாய்தான் என்றான்

அன்புமகன்

தெய்வம் செய்யும் தொழில் என்றான்

உழைப்பாளி.

Friday, October 24, 2008

தயாநிதி மாறனை வாழ்த்தினார் கலைஞர்..

24-10-08 அன்று..ஒத்திவைக்கப்பட்ட ..இலங்கை தமிழர்களுக்கான மனித சங்கிலி போராட்டம் நடை பெற்றது..காலையிலிருந்து சற்று வெயில் இருந்த நிலையில்..போராட்டம் மழையிலிருந்து தப்பிவிடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது..ஆனால்..தொடங்க இருந்த நேரம் மழை கொட்ட ஆரம்பித்தது.திறந்த ஜீப்பில் போராட்டத்தை பார்வையிட எண்ணி இருந்த கலைஞர்..அதனால் காரில் அமர்ந்த வாறே பார்வையிட்டார்.கல்லூரி மாணவிகள் உட்பட பலர் கொட்டும் மழையில் நின்றிருந்தனர்.
சென்னை..அண்ணாசாலை அருகே..போராட்டத்தில் கலந்துக்கொண்டு..நின்றுக்கோண்டிருந்த தயாநிதி மாறனிடம்..கைகுலுக்கி..தன் வாழ்த்துக்களை தெரிவித்தார் கலைஞர்.(அழகிரி இல்லை போலும்).,அதே போல தேனாம்பேட்டையில் நின்றிருந்த ராமதாஸிற்கும்..வாழ்த்துக்களை தெரிவித்தார்.
சமீப காலமாக..கலைஞர் பார்வை தன் மேல் பட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த திரை உலகினர் சிலரையும் பார்க்க முடிந்ததுபோராட்டத்தில்.

வாய் விட்டு சிரியுங்க....தீபாவளி ஸ்பெஷல்..

1.உங்க வீட்டு கேசரியிலே கொஞ்சம் சர்க்கரை குறைவா இருக்கு
அடப்பாவி...அது கேசரி இல்ல உப்புமா?

2.என் மனைவி ஸ்வீட்ஸ் செய்யறதிலே எக்ஸ்பர்ட்..உன் மனைவி எப்படி
அவ ஸ்வீட்ஸ் சாப்பிடறதிலே எக்ஸ்பர்ட்

3.இந்த சமயத்திலே நீ வீட்டுக்கு வந்தது என் மனைவிக்கு பிடிக்கலைன்னு நினைக்கிறேன்
ஏன் அப்படி சொல்ற
அவ செஞ்ச அல்வாவை உனக்கு கொண்டு வந்து தர்றாளே!

4.பெண்1- தீபாவளிக்கு வாஷிங்மெஷின்,வெட் கிரைண்டர் எல்லாம் வாங்கலாம்னு இருக்கேன்..நீ..?
பெண்2-எனக்குத்தான் கல்யாணமாயிடுச்சே...

5.மாமனார்-(தீபாவளிக்கு வந்திருக்கும் அமெரிக்க மாப்பிள்ளையிடம்) தீபாவளிக்கு..சரிகை வேட்டி..அங்கவஸ்திரம் எல்லாம் வாங்கியிருக்கேன்..ஆனா இன்னிக்கும் இப்படி அரை பேன்டோ
டுதான் நிற்பேன்னா எப்படி மாப்பிள்ளை?

6.இரண்டு நாளா..ரொம்ப குஷியா இருக்கீங்க?
என் மனைவியை ஊருக்கு அனுப்பி இருக்கேன் ..அதுதான்..

7.என் மனைவி ஒரு மாதம் பிறந்த வீட்டிற்கு போயிருக்கா..
அதுக்கு சந்தொஷப்படாம ..வருத்தப்படறே..
அந்த ஒரு மாசம் இன்னியோட முடியறது.அதுதான்

8.இன்ஸ்பெக்டர்- என்னடா..கபாலி ..மாமூல் வரல்லே..மாமியார் வூட்டுக்கு அனுப்பிடுவேன்
கபாலி-நிஜ மாமியார் வீட்டுக்குத்தான் போயிருந்தேன்...சார்

இன்றைய தமிழனின் நிலை

தமிழன் என்று சொல்லடா..தலை நிமிர்ந்து நில்லடா என்றார் நாமக்கல் கவிஞர்..ஆனால் இன்று ..

அண்டை நாடுகளில் அவன் பிரச்னை..அகதிகளாக..அவன் வரும் நிலை..இவையெல்லாம் இருக்கட்டும்..
சொந்த நாட்டிலேயே அவன் இரண்டாம் தர குடிமகனாகவே இருக்கிறான்..என்பது..மறுக்கமுடியாத உண்மை.
பாருங்கள்..1974ல் முடிந்த ஒப்பந்தம்..புதுப்பிக்காததால்..காவிரி தண்ணீர் பிரச்னை..இன்றுவரை தீர்ந்தபாடில்லை.நாட்டின் உச்ச மன்ற தீர்ப்புக்குக்கூட அடிபணியாத மாநில அரசுகள்..நவம்பர் மாதம் இறுதி தீர்ப்பு வருகிறதாம்..பார்ப்போம் என்ன நடக்கிறது என்று..
அடுத்து..கேரளா..முல்லைப்பெரியாறு அணை விவகாரம்..இதிலும் இதுவரை தமிழன் விட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கிறான்.
சற்று..யோசித்துப்பார்த்தால்...ஹிந்தி தெரியாத மக்கள் உள்ள ஒரே மாநிலம்.நமது..
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள்கூட..எம்மாநிலத்தை சேர்ந்தவராய் இருந்தாலும் ஹிந்தியில் பேசிக்கொண்டிருக்கும் போது..அங்கும் தமிழன் தனித்து விடப்படுகிறான்.
இதெற்கெல்லாம் காரணம்..அரசியல்..
இன்றைய தமிழக அரசியல் ..தலைவர்களிடையே உள்ள தனிப்பட்ட பகைமை உணர்ச்சியிலேயே ..நடந்துக் கொண்டிருக்கிறது.
இப்படியே போய்க்கொண்டிருந்தால் 'தமிழன் என்று சொல்லடா...தலை குனிந்து நில்லடா'என்ற நிலை வந்துவிடுமோ என்ற பயம் ஏற்படத்தான்செய்கிறது

Thursday, October 23, 2008

கலைஞரின் ராஜதந்திரமும்...வைகோ கைதும்..

கலைஞருக்கு எதிராக அரசியல் செய்வோர் அவர் அளவிற்கு முடியாவிட்டாலும்..ஓரளவு புத்திசாலித்தனமாக அரசியல் செய்ய வேண்டும்.
வைகோ கைது மீண்டும் இதை நிரூபித்துள்ளது.
சங்கரராமன் கொலை ஆன போது..அதில் சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கா விட்டால்..தி.மு.க.,ஆர்ப்பாட்டம் செய்யும் என்றதுமே..அவசர அவசரமாக ஜெ அரசு..ஜெயேந்திரரை ஹைதராபாத்தில் கைது செய்தது.இதன் காரணமாக ஜெ ஒரு சாராரின் ஆதரை இழந்தார்.
இப்போது விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரிப்பவர்களை..தி.மு.க.,அரசு விட்டு வைத்திருக்கிறது..என் ஆட்சிக் காலத்தில் பொடா சட்டத்தில் இவர்களை கைது செய்திருக்கிறேன்..என்று ஜெ சொல்லப்போக...அவர் இப்படி சொன்னதால்தான் வைகோ கைதானாற்போல ஒரு மாயை தோற்றுவிக்கப்பட்டுவிட்டது. கலைஞரும்..ஜெ க்கு ஆதரவாக செயல்பட்டு வந்த கூட்டணிக் கட்சிக்கு வேட்டு வைத்து விட்டார்.,
ஜெ..தனித்து விடப்பட்டுள்ளார்..
நுணலும் தன் வாயாற் கெடும்...

மங்கை உனக்கு ஒரு சல்யூட்....

தமிழ்மண பதிவாளர்கள் அனைவரும் அனேகமாக இவரை அறிந்திருப்பார்கள்.உண்மையில் இவர் இணையத்தை புரிந்துக் கொண்டு..தன் பதிவுகள் மூலம் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்கள்.
சமூக அவலம்..மனித நேயம்..கொடுமைகளைக் கண்டு கொதிக்கும் மனபாங்கு..தன்னலமற்ற சேவை..இவற்றிற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு எனலாம்.,
எய்ட்ஸ் விழிப்புணர்ச்சிக்கு..இவரின் தொண்டுகள் பாராட்டத்தக்கது
அண்மையில் தில்லியில் அரசு மருத்துவ மனைகளில் இயங்கி வரும் - HIV சோதனை மற்றும் ஆராய்ச்சி மையங்கள் மிக மோசமாக இயங்கி வருவதாகக் கேள்விப்பட்டு..அவற்றில் திடீர் சோதனை நடத்த அதிகாரிகள் உத்தரவிட..மங்கை உண்மை நிலை அறிய..தானே பரிசோதனை செய்துக் கொள்ள வந்துள்ளதாகக் கூறி ஒரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.எப்படிப்பட்ட ஒரு முடிவு..எந்த ஒரு மனிதனுக்கும் வராத ஒரு எண்ணம்.
சாதாரண நோயே ..நமக்கு இருப்பது மற்றவர்க்கு தெரியக்கூடாது என்ற எண்ணம் உள்ள சமுதாயத்தில்..இப்படி ஒருவரா...
மங்கை...பாராட்ட வார்த்தைகளே இல்லை.
இதுவரை அவர் பக்கங்களுக்கு போகாதவர்கள்..சென்று அவரது ஒவ்வொரு பதிவையும் படியுங்கள்..
எல்லா பதிவுகளும் படிக்கப்பட வேண்டும் என்பதால்..குறிப்பிட்டு எப்பதிவையும் நான் சொல்லவில்லை.

http://manggai.blogspot.com

மங்கை..அனைவர் சார்பிலும் நன்றி.

Wednesday, October 22, 2008

தீபாவளி ..சுப்பு தாத்தா சொன்ன கதை..

இந்த வருஷம் தீபாவளியை அமெரிக்கவில் ,தன் மகனுடன்..சுப்பு தாத்தா கொண்டாட(!!!) நேர்ந்துள்ளது.மகனும்..மருமகளும் வருந்தி அழைத்ததால்..ஆறு மாதம் ஸ்டேட்ஸ் வந்திருக்கிறார்.
அவர் தன் பேரனிடம் 'ம்..இந்தியாவில் இருந்தா..தீபாவளியை அமர்க்களமா கொண்டாடுவேன்..'என்று கூறப்போய்..அவனும் ஆவலுடன் தீபாவளின்னா என்ன தாத்தா'என்றான்.

தன்னை மதித்து(!!??) தன் பேரன் கேட்பதால் சொல்ல ஆரம்பித்தார்.

"முன்னொரு காலத்திலே..நரகாசூரன்..நரகசூரன்னு ஒருத்தன் இருந்தான்..அவன் மக்களை எல்லாம்..ரொம்ப கொடுமை படுத்தி வந்தான்..அந்த கஷ்டத்தை தாங்காத மக்கள் எல்லாரும்..பூமாதேவி கிட்ட சொல்ல..அவ அவனை வதம் பண்ணினா..சாகறப்போ நரகாசூரன் ..இவ்வளவு நாள் நான் மக்களை எல்லாம் ரொம்ப கொடுமைப் படுத்திட்டேன்..அதனால..நான் சாகிற இந்த நாளை அத்தனைப்பேரும் சந்தோஷமா..புது டிரஸ் போட்டுண்டு..பட்டாசு எல்லாம் வெடிச்சு..ஸ்வீட் எல்லாம் சாப்பிட்டு கொண்டாடட்டும் என்றான்"
அதுதான் தீபாவளி...என்றார்.

'போ..தாத்தா..நீ சொல்றதே புரியலை..அசுரன்னா என்ன..வதம்ன்னா என்ன..பூமாதேவிக்கு என்ன வேலை..ஒரேயடியா குழப்பறே..தாத்தா..'என்றான் பேரன்.

'சரி..உனக்கு புரியறமாதிரியே சொல்றேன்..'என்ற தாத்தா..DVD யில் அவன் சில தமிழ் படங்கள் பார்த்த ஞாபகம் வர..சொல்ல ஆரம்பித்தார்.

'நரகாசூரன்னு ஒரு தாதா இருந்தான்..அவன் கிட்ட நிறைய அடி ஆட்கள்..அவங்களை வைச்சு..ஜனங்களை அடிக்கிறது..கொள்ளையடிக்கிறது..கொலை செய்யறதுன்னு கொடுமைகள் செஞ்சுக்கிட்டு இருந்தான்..பூமாதேவின்னு ஒரு இன்ஸ்பெக்டர் இருந்தா..ஜனங்க அவ கிட்டப் போய் முறையிட்டாங்க..அவங்க நரகாசூரனைக் கூப்பிட்டு இப்படியெல்லாம் நடக்கக்கூடாதுன்னு சொன்னாங்க..அவனோ கேக்கலை...ஒருநாள் அவன் தப்பு செஞ்சப்போ..பூமாதேவி பாத்துட்டாங்க..அவனும் இவங்களைப்பார்த்து ஓட ஆரம்பிச்சான்.உடனே அவங்க என்கவுண்டர்ல
அவனை சுட்டுட்டாங்க...அவன் செத்துப்போறப்ப..நான் எல்லாரையும் ரொம்ப கொடுமைப்படுத்திட்டேன்.அதனாலே..நான் சாகிற இந்த நாள மக்கள்..fire works,cookkie,new dress னு
கொண்டாடட்டும்ன்னான்...அதுதான் தீபாவளி..இப்ப புரியுதா?'என்றார்.

'ஓ..புரிஞ்சிடுத்து..ரஜினி,விஜய்,கமல்..எல்லாம் பூமாதேவி மாதிரி.. அப்பறம்..சுமன்,பிர்ம்மானந்தம்.ஃப்ளச்சர் இவங்க எல்லாம் நரகாசூரன் மாதிரி..சரிதானே'என்றான்.

தாத்தாவும் ஏமாற்றத்தை மரைத்துக்கொண்டு 'ஆம்' என்பது போல தலையை ஆட்டினார்.


பதிவர்கள்..அவர்களது நண்பர்கள்..பின்னூட்டம் இடும் அன்பர்கள் எல்லோர்க்கும் சுப்பு தாத்தா மூலமா எங்க தீபாவளி வாழ்த்துக்கள்.

Tuesday, October 21, 2008

தமிழகம் இரண்டாகப் பிரியப்போகிறதா?

திராவிட முன்னேற்ற கழகம் பிறந்த போது..அதன் முக்கிய கொள்கையே..தனி திராவிட நாடு..ஆனால் ஒரு கால கட்டத்தில்..அண்ணா அந்த கொள்கையை கைவிட்டார்.
மும்பையில் சமீபத்திய வட இந்தியரை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தைப் பற்றி பேசும்போதும்..மத்திய அமைச்சர் சிவராஜ் படீல்..'பிரிவினைக் கேட்கும் நபர் யாராய் இருந்தாலும் அவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"என்று கூறியுள்ளார்.
இனி தமிழகத்திற்கு வருவோம்...
ஏற்கனவே..மதுரையில் தனிக்காட்டு ராஜாவாக இயங்கிவரும் அஞ்சாநெஞ்சனை எதிர்த்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தியது.தனியொரு மனிதனைக் கண்டித்து..அதுவும் எந்த ஒரு பதவியிலும் இல்லாத ஒருவரை குறிவைத்து இதுவரை எந்த ஒரு கட்சியும் போராட்டம் நடத்தியதில்லை.
இந்நிலையில் ..ஒரு சில பத்திரிகைகள் ..எல்லை மீறி ..நடப்பதாகவே தோன்றுகிறது.
ஒரு தமிழ் இதழில்..தென் தமிழக முதல்வர் அழகிரி ..என்று கூறியுள்ளது.
நம் கேள்வி எல்லாம்...
1.இதை ஏன் முதல்வர் கண்டிக்கவில்லை.
2.தமிழகத்தில் வருங்காலத்தில்..இரண்டு முதல்வர்கள் வரும் வாய்ப்புண்டா?
3.சாதாரண கருத்துக்கணிப்புக்கே...குடும்ப சண்டை..பிரிவினை எல்லாம் வந்த போது..இந்த விஷயம் மட்டும் ஏன் அடக்கி வாசிக்கப்படுகிறது.
4.இல்லை..வட தமிழகத்திற்கு தனியாக ஸ்டாலின் முதல்வர் ஆகிறாரா?

வாய் விட்டு சிரியுங்க...

1.யாதும் ஊரே..யாவரும் கேளிர் என்ற கொள்கை உடையவர் எங்க தலைவர்..ஓட்டலுக்குப் போனாலும்..காசி ஹல்வாவும்,கல்கத்தா ரசகுல்லாவும்,மங்களூர் போண்டாவும்..மும்பை மீல்ஸூம் தான் சாப்பிடுவார்.

2.தலைவர் இடைத்தேர்தலுக்கு ஏன் பெண் வேட்பாளரை அறிவிச்சிருக்கார்
'இடை'த்தேர்தல்னா அதுலே பெண்கள்தானே வெற்றி பெற முடியும்.

3.அதோ போறாரே அவர் நம்மை 'சௌக்யமா'ன்னு விசாரிக்கமாட்டார்
ஏன்?
அவர் டாக்டர் ஆச்சே

4.கவர்ச்சி நடிகை காந்தா நிர்வாண நிதி திரட்டறாங்களாம்
ஐயோ..அது நிர்வாணநிதி இல்லை..நிவாரண நிதி

5.கோவியானந்தா- நீங்க துறவியானதற்கு காரணம்?
ராதானந்தா-மனைவி..குழந்தைகள் தான் காரணம்..ஆமாம் நீங்க?
கோவியானந்தா-மனைவி குழந்தைகள் இல்லாததுதான் காரணம்

6.மகன்-(தந்தையிடம்)அப்பா நீ எந்த ஊர்ல பிறந்தே
தந்தை-திருநெல்வேலியில்
மகன்- அம்மா
தந்தை-மும்பையில்
மகன்- நான்
தந்தை-சென்னயில்
மக்ன்- என்ன ஆச்சர்யம்..எங்கெங்கோ பிறந்த நாம எப்படி ஒன்னா திருச்சிலே சேர்ந்திருக்கோம்

Monday, October 20, 2008

இயக்குநர் ஸ்ரீதர் ஒரு சகாப்தம்

அன்றும்..இன்றும்..என்றும்..மறக்கமுடியாத தமிழ் நகைச்சுவை சித்திரம் 'காதலிக்க நேரமில்லை'
கொடுத்த ஸ்ரீதர் மரணச்செய்தி..எல்லா வயதினரையும் துயரடையச் செய்திருக்கிறது.
முதன் முதல்..தனது 'ரத்தபாசம்' நாடகத்தை T.K.சண்முகத்திடம் எடுத்துப்போனார்.அதைப்படித்த சண்முகம்..அதை நாடகமாக நடித்ததுடன்..திரைப்படமாகவும் எடுத்தார்.அப்போது ஆரம்பித்த ஸ்ரீதரின் முன்னேற்றம்...கடைசிவரை நின்றது.
இவரைப்போல..இன்றும் நினைவில் நிற்கும் படங்களை வேறு இயக்குநர்கள் யாராவது எடுத்திருப்பார்களா என்பது சந்தேகமே..
எதிபாராதது இவர் கதை வசனம்..காதலித்த பெண்ணே அம்மாவாகிறார்..(இதன் தாக்கம்தான் பாலச்சந்தருக்கு மூன்றுமுடிச்சு கொடுத்திருக்க வேண்டும்).திரை உலகில் திருப்பம் ஏற்படுத்திய படங்களில் ஒன்று..
அவர் கதை..வசனத்தில்.. வந்த படங்கள்..
புனர்ஜென்மம்,(கதை-வசனம் மட்டும்)
அமரதீபம்(கதை-வசனம் மட்டும்)
மீண்ட சொர்கம்(கதை-வசனம் மட்டும்)
கல்யாணபரிசு
காதலிக்க நேரமில்லை
நெஞ்சில் ஓர் ஆலயம்,காதலிக்க நேரமில்லை
சுமைதாங்கி,கலைக்கோயில் ,வெண்ணிற ஆடை
நெஞ்சிருக்கும் வரை,நெஞ்சம் மறப்பதில்லை
சிவந்த மண்
அவளுக்கென்று ஒரு மனம்
தேன்நிலவு
இளமை ஊஞ்சலாடுகிறது
துடிக்கும் கரங்கள்
தந்துவிட்டேன் என்னை
ஊட்டிவரை உறவு
உரிமைக்குரல்
மீனவநண்பன்
தவிர..நெஞ்சில் ஓர் ஆலயம்,கல்யாணபரிசு,சிவந்தமண்,காதலிக்க நேரமில்லை இந்தியில் வந்துல்ள படங்கள்.

தற்சமயம் எனக்கு ஞாபகம் வந்த படங்கள் இவை..இதுபோல வேறுஇயக்குநர் படங்கள் ஞாபகம் இருக்குமா?தெரியவில்லை.
கடைசிவரை..திரும்ப வந்து படம் கொடுப்பேன் என்று சொல்லிவந்தார்..
பல நடிகர்களை அறிமுகம் செய்தவர்.
சிலரது பெருமை ..வாழும்போது தெரிவதில்லை..அதில் ஸ்ரீதரும் ஒருவர்.
தேசிய அளவில் அங்கீகாரம் ஏற்படுத்திக்கொள்ள தெரியா இயக்குநர்.
பல எழுத்தாளர்களின் நூல்கள் அரசுடமை ஆக்கப்பட்டதுபோல இவரது சில முக்கிய படங்கள் அரசுடமை ஆக்கப்படவேண்டும்.
அரசு செய்யுமா?

அநாவசியமாக யாரும் விஜய்காந்தை விரோதித்துக் கொள்ளாதீர்கள்

சமீப காலங்களாக சில பத்திரிகைகள்..சில இணைய பதிவாளர்கள் கேப்டனை மரியாதை இல்லாமல் விஜய்காந்த் என்று சொல்வதுடன்..அவரை..அவர் அரசியலை கிண்டல் செய்து வருகிறார்கள்.அவர் ஒருவர் மட்டுமே..மரியாதை கொடுக்கமாட்டேன் என்று கூறி கலைஞரை..கருணாநிதி எனக் கூற ஏக போக உரிமை பெற்றவர்.
இவ்வளவு நாட்கள் சந்தேகத்தோடு இருந்த ..என்னைப்போன்றவர்கள்..சமீபத்திய அவர் கட்சியின் இளைஞர் பேரணி பார்த்து மலைத்துப் போயிருக்கிறோம்.கலைஞர் திருடிவிடுவார்..என்பதற்காக பல அரிய திட்டங்களை ரகசியமாக அவர் வைத்திருக்கிறார்..பதிவிக்கு வந்ததும் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடுவார்.
அவரால் எப்படி பதவிக்கு வரமுடியும் என்கிறீர்களா..
ஒரு எளிய கணக்கு..
இவ்வளவு நாட்களாக அரசியலில் இருந்தும்..கலைஞர்,ஜெயலலிதா ஆகியவர்களுக்கு தெரியாத கணக்கு.
அதை ரகசியமாக வைக்காமல் உடைத்து விட்டார் பேரணி கூட்டத்தில்.
'மொத்தம் 5 லட்சம் பேர் வந்திருக்கிறீர்கள்..ஒருவர் 100 வாக்குகள் வாங்கிக்கொடுத்தால் 5கோடி வாக்குகள்.' என்றார்..பின் என்ன அவர்தான் முதல்வர்.
ஆகவே அனைவரும் இனி அவரை கிண்டல் செய்ய வேண்டாம்.

Sunday, October 19, 2008

ஐ.டி.துறையின் இன்றைய நிலை..

தங்க சுரங்கம்..தகர சுரங்கமாகிறது என்று பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரையை நான் எடுத்துப்போட http://sowmyatheatres.blogspot.com/2008/10/blog-post_10.html
..தமிழ்நெஞ்சம்..இது பற்றி உங்களது எண்ணம் என்ன..எனக்கேட்டிருந்தார்.அதற்கான பதிவே இது.

ஒரு மாணவன் 9ம் வகுப்பு தேறி 10ம் வகுப்பு போகிறான்..அவனுக்கான பள்ளிச்செலவுகள் போக..மாதம் ஆயிரம் ரூபாய்க்கு செலவு செய்து..கணக்கு..மற்றும் சயின்ஸ் பாடங்களுக்கு டியூஷன் வைக்கப்படுகிறது.அவன் நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என குடும்பத்தினர் சில தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கிறது.புத்திசாலி பையனாய் இருப்பவன் 90 மதிப்பெண்கள் சராசரியாகப் பெற்று தேறுகிறான். அவன் வாங்காமல் போன மதிப்பெண் எங்கே? என்று தேடப்படுகிறது.
+2 சேருகிறான்..சயின்ஸ் குரூப்..மொத்தமாக பள்ளிச்செலவுகள்..வருஷம் முழுதும் என மொத்தமாக டியுஷன் ஃபீஸ்..கணக்கு..பிசிக்ஃஸ்,கெமிஸ்ட்ரி,கம்.சயின்ஸ் என.,இரண்டு வருடங்கள் பெற்றோர் வயிற்றில் நெருப்பு.பையன் நல்ல மதிப்பெண் பெற்று தேறினால்..கவுன்சிலிங்கில் நல்ல காலேஜ் கிடைக்கிறது.சற்று குறைவான(95%!!!)மதிப்பெண் ஆனால் சுயநிதி கல்லூரியில்..வாங்குவதில்லை என்று சொல்லியபடியே வாங்கும் கேபிடேஷன் ஃபீஸ்(லட்சங்கள்)செலுத்தி...ஃபீஸ் 4 வருஷங்களும் கட்டி படிப்பை முடிக்கிறான்.
10ம் மதிப்பெண்,+2 மதிப்பெண்,இஞ்சினீரிங்க் மதிப்பெண்(இது 75%குறையாமை இருந்தால்தான் கேம்பஸ் தேர்வில் நல்ல கம்பெனி ) பார்த்து வேலை கிடைக்கிறது.
இது எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்..இவ்வளவு கஷ்டங்கள்..தியாகங்கள் செய்தால் தான் வேலை.அதுவும் உடனே லட்சக்கணக்கில் இல்லை,..ப்ராஜெக்ட்..டீம் லீடர்..
இப்படியெல்லாம் மாதம் 25000க்குள்தான் சம்பளம்.காலநேரம் பார்க்காமல் ..ஆண்..பெண் என சலுகைகள் இல்லாமல்..உடலை வறுத்தி உழைக்க வேண்டும்.வாழ்வில் பல சௌகரியங்கள்..சின்னச்சின்ன சந்தோஷங்கள் எல்லாம் அவனுக்கு கிடையாது.

சரி இனி தலைப்பு...
இந்திய ஐ.டி.கம்பெனிகள் அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து அவுட் சோர்ஸிங் முறையில் வேலையைப் பெறுகின்றன.ஒரு மணி நேரத்திற்கு 15..20..யு.எஸ்.டாலர் என்ற முறையில் வாங்கிக்கொள்கின்றனர்..ஆனால் வேலையில் இருப்போருக்கு 2 அல்லது 3 டாலர் ஒரு மணி நேரத்துக்கு கொடுக்கப்படுகிறது.இரவு நேர வேலை. ஓரளவு நல்ல சம்பளம்..அதற்கு ஊழியர்கள் கொடுக்கும் விலை..நிம்மதியில்லா வாழ்க்கை,சிறு வயதிலேயே இரத்த அழுத்தம்,சர்க்கரை வியாதி போன்ற வியாதிகள்.

இப்படி தேவையில்லா வாழ்வானாலும்..பொன் முட்டையிடும் வாத்தே ஐ.டி.துறை.இப்போது..அகில உலகிலேயே பொருளாதார சிக்கல் உள்ளது.ஏர்வேஸ் ஆட் குறைப்பு பற்றி பேசாத நாம்..இத் துறை பற்றி மட்டும் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்.
நம் புத்திசாலி ஊழியர்களும்..தேர்ந்த ஆங்கிலமும் இருக்கும் வரை நமக்கு கவலை இல்லை..
இடையே இப்பொழுது இருப்பதெல்லாம் just passing clouds .

யாரும் மனம் தளர வேண்டாம்.

Friday, October 17, 2008

வாய் விட்டு சிரியுங்க..

1.நீதிபதி-(குற்றவாளியிடம்)கன்னிப்பெண்ணை கற்பழித்தக் குற்றத்திற்காக உன்னை தண்டிக்க விரும்புகிறேன்..நீ ஏதேனும் கூற விரும்புகிறாயா?
குற்றவாளி- இது என் கன்னி முயற்சி ஐயா..மன்னிச்சு விட்டுடுங்க

2.காதலன்-எவ்வளவு நாட்கள் நாம இப்படியே காதலராய் இருக்கிறது..உங்கப்பாவை வந்து நான் பார்க்கவா?
காதலி-வேண்டாம்..வேண்டாம்..அவர் சம்மதம்னு சொல்லிட்டா..என்ன செய்யறது

3.தயாரிப்பாளர்-நானே திரைக்கதை,வசனம்,இயக்கம்,ஒளிப்பதிவு,பாடல்,இசை எல்லாப்பொறுப்பையும் ஏத்துக்கிட்டு ஹீரோவாகவும் நடிச்சுடலாம்னு பார்க்கிறேன்..
நண்பர்-பக்கத்திலேயே ஒரு தியேட்டர் விலைக்கு வருதாம்..அதையும் வாங்கிட்டீங்கன்னா உங்க படத்தை அங்கே ரிலீஸ் செய்திடலாம்

4.அந்த சேனல் உரிமையாளரை ஏன் கைது பண்ணிட்டாங்க
உலகத்தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதன் முறையா..பெரிய திரைக்கு வர்றதுக்கு முன்னாலேயே சின்னத்திரையில் படம் போட்டுட்டாராம்

5.தலைவர் வார்த்தைக்கு வார்த்தை தான் டாக்டர்னு சொல்றாரே..படித்து வாங்கின பட்டமா?
இல்ல..கொடுத்து வாங்கின பட்டம்

6.(இரண்டு பெண்கள் பேசிக்கொள்கிறார்கள்) இவ்வளவு வயசாகியும் ஏன் கல்யாணம் பண்ணிக்காம இருக்க
எங்கப்பா இன்னும் தாத்தாஆகிற வயசாகல்லேன்னு என் ஜாதகத்தையே எடுக்கமாட்டேன்னுட்டார்.

சினிமா..சினிமா.. தொடர் பதிவு..

இத் தொடர் பதிவில் அன்போடு என்னை இழுத்துவிட்ட கோவி க்கு நன்றி.

1.எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

எந்த வயது என என் பெற்றோர்களைத்தான் கேட்க வேண்டும்..அதற்கு இப்போது வாய்ப்பில்லை..எனக்கும் அவசரமில்லை.!!நினைவு தெரிந்து பார்த்த முதல் படம் அமரதீபம்..உணரும்
வயதி ல்லை அப்போது.அந்த படத்தில்வரும் 'தேன் உண்ணும் வண்டு...'மறக்க முடியாத பாடல்.

2.கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
'தசாவதாரம்'.சென்னை ஐநாஃக்ஸ் தியேட்டரில்.தியேட்டர் சர்வதேச தரத்தில் இருந்தது . பட விமரிசனம் ஏற்கனவே செய்து விட்டேன்.

3.கடைசியாக அரங்கிலன்றி பார்த்த தமிழ் சினிமா எது? என்ன உணர்ந்தீர்கள்?
குசேலன். வாசு இன்னும் சிறிது மெனக்கட்டிருந்தால் இதை வெற்றிப்படம் ஆக்கி இருக்கலாம்.

4. மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?
பல..உடனே ஞாபகத்திற்கு வருவது...கன்னத்தில் முத்தமிட்டால்...இதைவிட அழகாக இலங்கை பிரச்னையை சொல்லி இருக்க முடியாது.ஹேட்ஸ் ஆஃப் டூ மணிரத்னம்.
அடுத்ததாக 'கற்றது தமிழ்' சொல்லலாம்..இன்றைய பிரச்னைகளை ஓரளவு எதார்த்தத்துடன் சொன்ன படம்.
'அஞ்சாதே' அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

5.(அ)உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா..அரசியல் சம்பவம்...
'என்கடமை'என்று ஒரு M.G.R.,படம்.நல்ல படம்..அந்த படம் வெளியான சமயம்..'காமராஜர் என் குரு'என்றார் M.G.R.,ரசிகர்களால்(!!!) அதை ஏற்கமுடிய வில்லை.படம் தோல்வி.
அடுத்து அசோகன்..கஷ்டப்பட்டு..தன் வாழ்நாள் சம்பாதியம் முழுதும் போட்டு எடுத்த படம்'நேற்று..இன்று..நாளை'..அந்த சமயம் M.G.R.,கட்சி ஆரம்பித்திருந்த சமயம்..தி.மு.க.வினரா
ல் ஆர்ப்பாட்டம்..படம் வெளியான தியேட்டர் திரை கிழிப்புகள்..படத்தை தோல்வி அடைய செய்துவிட்டது.அசோகன் பின் மீளவே இல்லை.
தேவையில்லா ..அரசியல்..தனிப்பட்ட மனிதர்களை அழிக்கும்போது மனம் வேதனை அடைகிறது.
(ஆ)உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா...தொழில் நுட்ப சம்பவம்..
விடிவெள்ளி என்று ஒரு படம்...தொழில் நுட்பம் வளாராத நேரம்..அப்படத்தில் 'கொடுத்துப் பார்..பார்..'என்றொரு பாடல் காட்சியில்..தென்னை மரத்தை ஒரு குடையைப்போல் காட்டுவார்
அப்பட ஒளிப்பதிவாளர் வின்சென்ட்.
நாடோடிமன்னன் படத்தில்..பாலம் அறுந்து விழ..அதில் கதாநாயகி யுடன்M.G.R. தொங்குவார். மறுமுனையில் அப்பாலத்தை விழாமல் தாங்கிப்பிடித்துக்கொண்டிருப்பார் இன்னொரு
M.G.R., ஒளிப்பதிவாளர் G.K.ராமு.
12 B பட எடிட்டுங்கும்..சமிபத்தில் வந்த நேபாளி பட எடிட்டுங்கும் சொல்லும் படியானவை.

6.தமிழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
இவற்றைவாசிக்காவிட்டால்..இன்று தமிழ் பத்திரிகைகள் எதையும் வாசிக்க முடியாது.கிசு கிசு உள்பட எல்லாவற்றையும் வாசிப்பதுண்டு.

7.தமிழ் சினிமா இசை
மிகவும் வளர்ந்திருக்கிறது.ஆனால்.வெறும் ஹார்மோனியம் மட்டுமே வைத்து பாடிய 'அத்தான்..என் அத்தான்' என்ற பாடலிலிருந்து..நாக்க முக்கா வரை..அனைத்து இசை அமைப்பாளர்களுமே இசைத்திலகங்கள் தான்.இளையராஜா..ரஹ்மான் ஆகியர்வர்களுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.

8.தமிழ் தவிர..வேறு இந்திய..உலக மொழி பார்ப்பதுண்டா?
சந்தர்ப்பம் கிடைத்தால்..எல்லா மொழி படங்களும் பார்க்கும் வழக்கம் உண்டு. சமீபத்தில் பார்த்த ஹிந்தி படம்..'தாரே ஜமீன் பர்'(நமது இயக்குநர்களாலும் இப்படி படம் எடுக்க முடியும்)
ஆங்கிலபடம்'IRONMAN'. சமீபத்தில் கொரியன் படம் ஒன்று பார்த்தேன்..சாதாரண காதல் கதைதான்.அருமையாக எடுத்திருந்தார்கள்.பெயர் மறந்து விட்டது.

9.தமிழ் சினிமா உலகுடன் நேரடி தொடர்பு உண்டா?என்ன செய்தீர்கள்?
நேரடி தொடர்பு இல்லை..ஆனால் விசு,மௌலி..போன்ற நண்பர்கள் உண்டு..Y.G.மஹேந்திரன்,S,ve.சேகர் ஆகியவர்களை நன்கு தெரியும்.மேலும் சிலரை தெரியும்..ஆனால் இன்று அவர்கள் அதை ஒப்புக்கொள்வார்களா என்று தெரியும்.
மேலும் ஒரு பிரபல இயக்குநர் 1983ம் ஆண்டு எனது 'காயத்ரி மந்திரம்'என்ற நாடகத்தில் கதாநாயகன் வேடத்தில் நடித்தார்.அவரை இரண்டு ஆண்டுகளுக்குமுன் frankfurt விமான நிலயத்தில் சந்தித்தேன்.அவர் கனடாவிலிருந்து குடும்பத்துடன் வகேஷண் முடித்து connecting ஃப்ளைட்டுக்கு காத்திருந்தார்.நான் U.S.A.,க்கு செல்ல காத்திருந்தேன்.அப்போது அவரைப்பர்த்ததும்..கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் என்னிடம் பேசினார்.மகிழ்ச்சியாக இருந்தது.அந்த இயக்குநர்...'ஷங்கர்'

10.(அ)தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
எதுவும் யார் தலையிலும் ஓடவில்லை.இளம் இயக்குநர்கள் பலர் திறமையுள்ளவர்கள்.எதிர்காலம் பிரகாசமாகவே இருக்கும்.

10.(ஆ)அடுத்த ஓராண்டில் தமிழில் சினிமா கிடையாது..மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள்..செய்திகள்..எதுவுமே பத்திரிகைகள்..தொலைக்காட்சி இணையம் உள்ளிட்டவை ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக் கொள்வோம்..உங்களுக்கு எப்படி இருக்கும்..தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
அடடா..இந்த கேள்விகேட்டவர்களுக்கு ஏன் இப்படி ஒரு கொல வெறி..என்னை விடுங்கள்..எனக்கு ஒன்றும் ஆகாது..
பொதுவாக இவை எல்லாம் இன்று இல்லாவிட்டால்..மக்கள் பைத்தியம் பிடித்து அலைவார்கள்.நாட்டில் மன நல மருத்துவர் பாடு கொண்டாட்டம்.நாட்டின் ஜனத்தொகை 200 கோடியை விரைவில் எட்டிவிடும்.அவ்வளவுதான்.

இத்தொடர் பதிவுக்கு நான் அழைப்பவர்கள்
மணிகண்டன்
நசரேயன்

Thursday, October 16, 2008

இன்று கவியரசு கண்ணதாசன்நினைவு நாள்

கவிஞர்கள் வாக்கு பொய்க்காது என்பார்கள்..கி.பி.2000 பற்றி கவியரசு என்ன எழுதினார் தெரியுமா?


கி.பி.2000
__________


ஒருநூறு கோடியாய்
மக்கட் தொகைகூடி
உணவுக்கு தத்தளிக்கும்

ஓராயிரம் கட்சி
பேதங்கள் தோன்றியே
உள்நாட்டுயுத்தம் மூளும்

பொருள்நூறு கொண்டவர்
பூட்டை உடைக்கின்ற
புரட்சியை நாடுகாணும்

பூஞ்சோலை காடுகள்
ஏதுமில்லா திந்தப்
பூமியை மக்கள் சூழும்

உருவான தொழிலெல்லாம்
உதவாது போய் எங்கும்
உற்சாக மற்றுவிடுமே

ஒளிதொன்றும் நெஞ்சிலே
இருள் தோன்று கின்றதே
உணர்கபா ரததேச மே!

சூடான இடுகையில் இடம் பெறுவது எப்படி?

பதிவர்கள் பதிவிடும் போதே ..அப்பதிவு சூடான இடுகையில் வர..என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசிப்பதுண்டு.பதிவில் எழுதும் விஷயங்கள் பற்றி கவலைப் படுவதில்லை.மலையாள படம் தமிழில் டப் செய்யும் போது..வைக்கப்படும் தலைப்புகள் போல்..'அவளுடைய இரவுகள்''மாமனாரின் மன்மத லீலைகள்' இப்படி வைக்கலாம்.தமிழ்மணம் அனுமதிக்குமா தெரியவில்லை.ஆனால்...சூடான இடுகைக்கு சூடான தலைப்பு என்பது எழுதப்படாத விதியாகும்.
எனது இடுகைகள் சில சூடான இடுகையில் வருவதுண்டு..ஆனால் அப்படி வர..இடுகை இட்டு சில மணி நேரங்கள் ஆகின்றன.ஆனால்..சில நட்சத்திர பதிவர்கள்..என்ன எழுதினாலும்..அடுத்த பத்தாவது நிமிடம் ..சூடாகி விடுகிறது.
சூடான இடுகையில் வர பதிவர்களுக்கு ஏன் ஆசை?
இப்பொழுதெல்லாம்..நாளொன்றுக்கு சராசரி 270 இடுகைகள்
இடப்படுகின்றன.நம் பதிவு வந்த அரை மணி நேரத்தில் முகப்பில் இருப்பதில்லை.யாராவது பின்னூட்டமிட்டால்..வலப்பக்கத்தில் சில நேரம் இருக்கும்..இல்லையேல் அதுவும் இல்லை.அதுவே ..பின்னூட்டம் இல்லையென்றாலும்..அதிகம் பேர் பார்த்தால்..அது சூடான இடுகை.சிறிது நேரம் பதிவு இருந்துக் கொண்டே இருக்கும்.அந்த ஆசை தான் ஒவ்வொரு பதிவரையும் அதற்கு இழுக்கிறது.
அடுத்தது..பதிவிடும் நேரம் மிக முக்கியம்.நமது மென் பொருள் வல்லுநர்களுக்கு அது அலுவலக நேரமாய் இருக்க வேண்டும்.இவர்கள்தான் பதிவுலக அச்சாணிகள்.இவர்கள் படிக்காவிட்டால்..எந்த பதிவாய் இருந்தாலும் கோவிந்தா தான்.
சிலருக்கு..தொடர்ந்து பழைய பதிவுகளுக்கும் பின்னூட்டங்கள் இருந்துக் கொண்டேயிருக்கின்றன.அவை..நூறு நாட்கள் 3 காட்சிகளுடன் ஓடும் படங்களாயில்லாமல்...1000 நாட்கள் பகல் காட்சி மட்டுமே ஓடும் படங்கள் போல.
என் பதிவுகள் எல்லாம் மினிமம் காரண்டி பதிவுகள் ..
இப்படி ஒரு பதிவு போட்டு...சூடான இடுக்கைக்கான தலைப்பும் வைத்து விட்டேன்.
பார்ப்போம் இது சூடான இடுகையில் வருகின்றதா என்று.

வந்ததும்..வராததும்

1.பழனி கோயில் உண்டியலில் வசூல் ரூ.1.12 கோடியை தாண்டியது.இதில் ஒரு பக்தர் போட்டுள்ள160கிராம் எடையுள்ள தங்க யானையும் அடக்கம். (இது செய்தி)
யானை என்றதும் யார் போட்டிருப்பார்கள் என ஓரளவு யூகிக்க முடிகிறது.

2.இலங்கையில் உள்நாட்டு பிரச்னைக்கு நம் ராணுவம் தலையிட முடியாது(செய்தி)
ராஜிவ்காந்தி அனுப்பிய IPKF போலவாவது தமிழரைக் காக்க (ராணுவத்தால் !!!!) அனுப்பப்படுமா? ஸ்ரீலங்கா அரசு கேள்வி.

3.நம் நாட்டில் 7.3 லட்சம் பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள்.ஆண்டுக்கு அவர்கள் மொத்த வருமானம் 180 கோடி ரூபாய் -செய்தி
அவர்களிடம் வட்டிக்கு கடன் கிடைக்குமா? மத்திய தர குடும்பஸ்தர் ஒருவர் கேள்வி

4.ராமர் இலங்கையிலிருந்து திரும்பும்போது ராமர் சேது பாலத்தை தன் அம்பாலேயே அழித்துவிட்டார்..சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு -செய்தி
இதிலிருந்து ராமர் இருந்தார் என ஒப்புக்கொள்கிறார்கள் என தெரியவில்லையா? என்கிறார் r.s.s., v.h.p. தலைவர்கள்.

5.லதா மங்கேஷ்வருக்கு 80 வயது -செய்தி
அவர் குரலுக்கு என்றும் 16 என்கிறார் அவர் ரசிகர் ஒருவர்.

Wednesday, October 15, 2008

இலங்கை தமிழர் பிரச்னை...நான் விடைபெறுகிறேன்..நன்றி

இலங்கை தமிழர் பிரச்னை குறித்து..அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெற்றதும்...அதில் மத்திய அரசுக்கு இரண்டு வார அவகாசம் கொடுப்பதாகவும்..அதற்குள் மைய அரசு இலங்கை அரசுடன் பேசி தீர்வு காண வேண்டும் என்றும் ...தவறினால் தமிழக அனைத்து எம்.பி.க்களும் பதவி விலகத்தயார் என்றும் முடிவெடுக்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக கனிமொழியும்..தனது ராஜ்ய சபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக...ராஜினாமா கடிதத்தை கலைஞரிடம் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இது போன்ற சமயங்களில் கலைஞரின் கரத்தை பலப்படுத்த வேண்டியது..ஒவ்வொரு தமிழனின் கடமை என்பதால்..நானும் பதிவுகள் இனி இடுவதில்லை என தீர்மானித்து..ராஜினாமா கடிதத்தை என் மனைவியிடம் கொடுத்துள்ளேன்.இரண்டு வாரங்களில் மைய அரசு முடிவெடுக்கவில்லை எனில் என் ராஜினாமா ஏற்கப்படும் என என் மனைவி தெரிவித்துள்ளார்.

வாய் விட்டு சிரியுங்க

கணவன்- டாக்டர் என்னை கிச்சன் பக்கமே போகக்கூடாதுன்னு சொல்லிட்டார்
மனைவி-அவர் சொன்னது கிச்சன் பக்கம் இல்லை..சிக்கன் பக்கம்

2.நாட்டு வைத்தியரை காதலிச்சது தப்பாப்போச்சு
ஏன்
எப்ப கல்யாணத்தை பத்த்தி பேசினாலும்..ஒரு மண்டலம் போகட்டும்னு சொல்றார்.

3.அந்த டாக்டர் கிட்ட ஆபரேஷனுக்குப் போனா..நோயாளி குடும்பத்துக்கு ஒரு சௌகரியம்
என்ன?
அமரர் ஊர்திக்கு தனியா சார்ஜ் எதுவும் கிடையாது

4.எதிர்க்கட்சித் தலைவர் என் மேல் சுமத்தும் ஊழலுக்கு பதில் சொல்லும் ஆணவம் என்னிடம் இருக்கிறது
தலைவரே..அது ஆணவம் இல்ல..ஆவணம்

5.அப்பா..நதி நீர் பேச்சு வார்த்தைன்னா என்ன?
தண்ணீருக்காக குழாயடியில் இரண்டு பேர் அடிச்சுக்கிட்டா..அது குழாயடி சண்டை..அதுவே இரண்டு மாநிலம் அடிச்சுக்கிட்டா நதி நீர் பேச்சு வார்த்தை.

6.டாக்டர் நீங்க சொன்ன மாதிரி ஒரு மாசமா..நாள்தோறும் விளையாடியும் எடைகுறையிலே
என்ன விளையாடினீங்க?
சீட்டாட்டம்தான்.

Tuesday, October 14, 2008

நாத்திகம் பேசும் மதன்..

நாத்திகம் பேசினால்..பிராமனீயம் பர்ரி பேசினால்..அல்லது பதிவிட்டால் உடனே பல கண்டனங்கள்..கையாலாகாதவன் என்ற பட்டங்கள்..ஆனால் சென்ற வார விகடனில் மதன் கேள்வி பதிலில் ஒரு பதிலில் அவர் நாத்திகவாதியாய் பேசி இருக்கிறார்..அதை கண்டித்து இதுவரை யாரும்..எழுதவோ..பேசவோ இல்லையே..ஏன்?
சிவபெருமானின் டிரஸ் புலித்தோலா? சிறுத்தைத் தோலா? என்ற கேள்விக்கு..பதிலில் அவர் சொன்னதை பாருங்கள்..
யாருக்குத் தெரியும்?அது மனிதக் கற்பனை.ஆனால்..சிறுத்தையைவிட புலி மேலானது.ஆகவே அது புலித்தோலாகத்தான் இருக்க வேண்டும்.வங்காளத்தில்தான் புலிகள் உண்டு..அங்கிருந்து புலித்தோல்கள் கைலாயத்திற்கும்(???!!!!)போயிருக்கலாம்(இது கிண்டல்தானே-நான்)ஐஸ் மலை மீது புலி,சிறுத்தை எதுவும் வாழ வாய்ப்பு இல்லை.மொத்தத்தில் இதையெல்லாம் ஒரு குறியீடாக எடுத்துக் கொள்ளுங்கள்.
மேலும் ஒரு கேள்வியில் ..நாத்திகம் பற்றி பேசும்போது..இன்னொரு மதத்தை தாக்கினால்,.காரணங்கள் கற்பிக்கப்பட்டு வாதங்கள் எடுபடாமல் போகலாம்.தவிர ,நம் மதத்தில் உள்ள மூடனம்பிக்கைகளுக்கு எதிராக போராடிய பிறகு,மற்ற மதங்களுக்குப் போகலாம்.ஆனால் ..எல்லா மதங்கலும் இதைப் பின்பற்றினால் பண்பாக(??!!)இருக்கும்.
இதைத்தவிர....பூஜை,புனஸ்காரங்கள் எல்லாம் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காக புத்திசாலிகள் கண்டுபிடித்த யுக்தி..என ஜாபாலி ராமனிடம் நாத்திக வாதம் புரிவதை தேவையில்லாமல் இங்கு சொல்லி இருக்கிறார்.
மாமியார் உடைத்தால் மண்குடமா??

ரஜினி அரசியல் பிரவேசம் இல்லை..தலைவர்கள் கருத்து

கலைஞர்- ரஜினியின் நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டியவை.ஒரு நடிகன் தன் எல்லையை உணர்ந்துள்ளார். உடன்பிறப்பே இதிலிருந்து அவர் நம்மை மறைமுகமாக ஆதரிக்கிறார் என்று இறுமாப்புள்ளவர்களுக்கு விளங்கவில்லை என்றால் ..உனக்குமா விளங்கவில்லை.
ஜயலலிதா-இவர் அரசியலில் வந்திருந்தால்..தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்றியிருக்க முடியாது.என்னால் மட்டுமே முடிந்திருக்கும்.,நாளை தொண்டர்கள் போயஸ் தோட்டத்தில்..என் வீட்டில் மின்சாரம் இல்லாததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் பண்ணுவார்கள்.
காங்கிரஸ்-(தலைவர்கள் அதிகம் உள்ளதால் ஒரு குறிப்பிட்ட தலைவர் தன் பெயர் வெளியிடுவதை விரும்பாமல்)இந்த விஷயத்தில் தனிப்பட்ட முறையில் கருத்து சொல்வதைவிட அன்னை சோனியாவின் கருத்தே எங்கள் கருத்து.
விஜய்காந்த்-ரஜினியின் அறிக்கை கருணாநிதியின் சதிவேலைதான்..வரும் தேர்தலில் மக்கள் எனக்கு வாக்களித்து இதை நிரூபிப்பார்கள்.
ரஜினி ரசிகன்- அவர் மனதில் ஏதோ இருக்கிறது..கண்டிப்பாக எங்கள் உணர்வுகளை அவர் புரிந்துக் கொள்வார்..சத்யநாராயணன் பார்த்துக்கொள்வார்.நிச்சயம் தலைவதான் அடுத்த முதல்வர்.
பி.வாசு-அப்பாடா...அவ்வலவுதான்னு நினைச்சேன்..கண்டிப்பா அவரை வைச்சு இன்னோரு படம் இயக்கிடுவேன்.
ரஜினி-பாபா படம் முடிஞ்சதும் நுழைய நினைத்தேன்..படம் அவுட்..இப்போ குசேலன் வந்ததும் நுழைய நினைச்சேன் ..ஃப்ளாஃப்..அதனாலே அடுத்து எந்திரன் வந்ததும் பார்த்துக்கலாம்.
பொதுமக்கள்-அப்பாடா...இன்னொரு கட்சி கூப்பாடிலிருந்து தப்பித்தோம்
ராமதாஸ்-கலைஞர் ஆட்சி குறைகளை ஆராய்ந்து வருவதால் இப்பொதய்க்கு கருத்து இல்லை.ஆனால் மக்கள் நடிகர்களை நம்பக்கூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறோம்.

((பேட்டி-நமது 'சரடு நிருபர்'))

Monday, October 13, 2008

பிராமணர்களும்..தனம் படமும்..

தனம் திரைப்படத்தை இப்போதுதான் dvd ல் பார்த்தேன்.,
படம் எடுத்த இயக்குநர் யாரை திருப்தி படுத்த வேண்டும் ..என்று படம் எடுத்தாரோ..தெரியாது.
படத்தில் தேவையில்லாமல்..ஒரு பிராமண குடும்பத்தை இழுத்துள்ளார்.
அது ஆசாரமான குடும்பமாம்...அவர்கள் ஜோதிடர்..பையனுக்கு தாசி பெண் மருமகளாக வந்தால் லக்ஷ்மி காடாக்ஷம் வரும்?! என சொல்கிறார்.ஏனென்றால் அவர்களது பையன் ஒரு தாசியை காதலிக்கிறான்.,குடும்பம் அதை ஏற்கவில்லை.அந்த ஜோதிடரும் ..அவளிடம் ஒரு முறை போக முயன்றபோது.. அவள் மறுத்து விட..அவளை பழி வாங்க இப்படி ஜோதிடம் சொல்கிறார்.
லக்ஷ்மி வருவாள் என்றதும் ..அந்த குடும்பம் சம்மதித்து விடுகிறதாம் ??!!
அவர்கள் வீட்டு எதிர் வீட்டு திண்ணையில்..ஒரு பிராமண கோஷ்டி..பிறன் மனை என்று தெரிந்தும்..அந்த வீட்டு மருமகளைப் பற்றி பேசுவதும்..ஆபாசமாக பேசுவதும்..
இதுதான் அவர்களின் வேலை என்பது போல் காட்டப்படுகிறது.அந்த பிராமணர்களின் மனைவிமார்தான் வீட்டுப்பொறுப்பை ஏற்று..கடைக்கு செல்வது போன்ற தொழில்களை செய்கிறார்கள்.இவர்கள் வெறும் வெத்து வேட்டு.
இப்போது மீண்டும் ஜோதிடர்..அந்த பெண்ணை நெருங்குகிறார்.அவள் மறுத்து விட...குடும்பத்தாரிடம்..அவல் மூலம் பிறந்த பெண் குழந்தையால் குடும்பத்துக்கு ஆபத்து எனக்கூறி..குழந்தையை கொன்றுவிடச் சொல்கிறார்.அப்படியே நடக்கிறது.பின் அந்த பெண் குடுப்பத்தையும்..அந்த ஜோதிடரையும் விஷம் வைத்துக் கொல்கிறாள்.
என் கேள்வியெல்லாம்
குசேலன் படத்தில்..நாவிதர்களை காமெடி என்ற பெயரில் கேலி செய்திருக்கிறார்கள் என அவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
தனம் படத்தில் ஜோதிடர்களை கேவலப் படுத்துகிறார்களே..அவர்கள் ஏன் பொங்கி எழவில்லை.
ஜாதியைக்காட்டாமல்..ஒரு குடும்பத்தைக் காட்டி இருக்கலாமே..ஏன் ஒரு பிராமிண் குடும்பத்தைக் காட்ட வேண்டும்? இதை ஏன் அவர்கள் எதிர்க்கவில்லை?
படம் முழுதும் அந்த பிரிவினரை கிண்டல் செய்ய என்றே எடுக்கப்பட்டதாய் தெரிகிறது..தேவையில்லாமல்.எந்த ஜாதியை இழுப்பவர்கள் ஆனாலும்.அவர்கள் கண்டிக்க பட வேண்டியவர்களே!!.

காலம் மாறுது..ரசனை மாறுது..

காலம் மாறிக்கொண்டேருக்கிறது..
தலைமுறைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன.
ரசனையும் மாறிக்கொண்டே இருக்கிறது.
பாலசந்தரை அன்று ரசித்த தலைமுறை..இன்றுள்ள இயக்குநர்களை ரசிக்கமுடியவில்லை.
இன்றுள்ள தலைமுறை பாலசந்தரையும்..பாரதிராஜாவையும்..பாலு மகேந்திராவையும் ரசிப்பதில்லை.
அதனால்தான் சமீப காலங்களில் இவர்கள் படங்களால் வெற்றி கிடைப்பதில்லை.
இதுதான் யதார்த்தம்..இதை ஒப்புக்கொள்ள முடியாதவர்கள்..ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள்.
அந்த நாளில் 30..35..பாட்டுக்களுடன் தியாகராஜ பாகவதரை ரசித்தார்கள்..
அடுத்த தலைமுறை..சிவாஜியையும்..எம்.ஜி.ஆரையும் ரசித்தார்கள்
பின் வந்த தலைமுறை ரஜினியும் ,கமலையும் ரசித்தார்கள்
இப்போது கில்லியும்,சாமியும் ரசிக்கப்படுகின்றன.
சுதர்சனம்,எஸ்.எம்.எஸ்.,ஜி.ராமநாதன் ரசிக்கப்பட்டனர்.
விஸ்வனாதன்-ராமமூர்த்தி,கே.வி.மஹாதேவன் பின்னர் வந்தனர்.
இளையராஜா..ரஹ்மான்..பரத்வாஜ்..வித்யாசாகர்..யுவன்..ரசனைகள் மாறிக்கோண்டே இருக்கின்றன.
பீம்சிங்,கோபாலகிருஷ்ணன்,ஸ்ரீதர்,பாலச்ந்தர்,பாரதிராஜா.மகேந்திரன்,பாலுமஹேந்திரா..இப்போது..ஹரி,கௌதம்,அமீர் இப்படி
இதை அனைவரையும் புரிந்துக் கொள்ள வேண்டும்.
கடைசியாக..நடிகர்கள் சிலர் மட்டும்..இரண்டு..மூன்று தலைமுறைக்கும் நிற்கிறார்கள்.
அவர்கள்..சிவாஜி,எம்.ஜி.ஆர்., ரஜினி,கமல் ஆகியோர்தான்.

Sunday, October 12, 2008

வாய் விட்டு சிரியுங்க..

1.மாப்பிள்ளை வீட்டோட இருக்கிறார்னு வருத்தப் படுவியே..இப்ப எப்படி இருக்கிறார்
வீட்டோட அப்பாவா மாறிட்டார்

2ஜோசியர்-உங்க ஜாதகப்படி ..சன்னதி தெருவில இருக்கிற 54ம் நம்பர் வீட்டுல இருக்கிற பொண்ணு மனைவியா இருக்க வாய்ப்பிருக்கு
கேட்பவர்-அது எப்படி உங்களால விலாசத்தைக்கூட கரக்டா சொல்ல முடியுது
ஜோசியர்-என் வீட்டு விலாசம் எனக்குத் தெரியாதா?

3.நேற்று ராத்திரி 12 மணிவரைக்கும் தூக்கம் வரல்லே கடைசில ஆவி வந்ததும்தான் தூக்கம் வந்தது
என்ன சொல்ற
கொட்டாவியைச் சொன்னேன்

4பெண்ணுக்கு லேடின்னு ஏன் இங்கிலீஷ்ல சொல்றோம் தெரியுமா?
ஏன்?
லேடி யை திருப்பிப்படி.அவங்க எல்லாவற்றிலும் டிலேயா இருக்கறதால

5.அவன் அண்டப்புளுகன்னு எப்படி சொல்ற
அவன் ஊர்ல கரண்ட் கட்டே இல்லைன்னு சொல்றான்.

6.டாக்டர் நான் டூட்டில இருக்கறப்போ தூங்கிடறேன்
அதனால தப்பு இல்ல..ஆமாம் என்ன வேலை செய்யறீங்க?
பஸ் டிரைவராயிருக்கேன்

Saturday, October 11, 2008

பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

நம் எண்ணங்களையும்...செய்திகளையும் ..நிகழ்வுகளையும் பதித்து வைக்க நமக்கு இப்போது blogsம்..இன்டெர்நெட் உள்ளன.
நல்ல எழுத்துத் திறமை இருந்தும்..நம் எழுத்துக்கள் அச்சேறாததை ..நமது தாகத்தை.. ஓரளவுக்கு தணித்துக்கொண்டிருக்கின்றன இணைய இதழ்களும்...வலைப்பூக்களும்.
அதை நல்லமுறையில் பயன் படுத்திக்கொள்ள வேண்டியது நமது கடமை.
ஆனால் அப்படியா நடந்துக் கொண்டிருக்கின்றது இன்று?
ஒரு கணினி கையில் கிடைத்து விட்டது..ஒரு blog ஆரம்பித்துவிட்டோம் என்பதற்காக எதை வேண்டுமானாலும் எழுதுவதா?
சமீப காலமாக இந்த அநாகரிக போக்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
பார்ப்பன ஜாதி என ஜாதியத்தை தூற்றுவதை விட்டு விட்டு..பார்ப்பனியத்தை தூற்றுங்கள்..இது சமுதாயத்தை திருத்தும் வழியாகக்கூட அமையலாம்.
ஒரு அரசியல்வாதி..நேர்மையாக செயல் படவில்லையானால்..அதை எழுதுங்கள்.
அவன் ஊழலை எழுதுங்கள்.அவனுக்கு கோடி கோடியாக பணம் எப்படி வந்தது என வினா எழுப்புங்கள்.
அவனது தனிப்பட்ட அவன் வாழ்வை விமரிசிக்காதீர்கள்.
ஒரு நடிகனின் நடிப்பை விமரிசியுங்கள்..அவன் நடிக்கும் போது..தண்ணி அடித்தான்..சிகரட் பிடித்தான் என சொல்லாதீர்கள்.அப்படி செய்தது அவன் ஏற்றுக்கொண்டுள்ள பாத்திரம்.
அவன் கோடியாக சம்பாதிக்கிறான் என்றால்..அது அவன் உழைப்புக்கு கொடுக்கப்படும் கூலி..அதை விமரிசிக்க நமக்கு உரிமை இல்லை.
உங்கள் மேலதிகாரி..சாதாரணமாக ..குரலை உயர்த்தி பேசினாலே..மனம் வருந்தும் நாம்...
நடிப்புத் தொழில் செய்பவனை..செருப்பால் அடிப்பேன்..என்றெல்லாம் சொல்வது..பண்பாடற்ற செயல்.
ஒரு சிறு நிகழ்ச்சி ஒன்றை கூற ஆசைப்படுகிறேன்..
ஒரு சமயம் தேர்தலில் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக.என்.எஸ்.கே.பேசினார்..அவர் பேசும்போது எதிர்க்கட்சி வேட்பாளரை புகழ்ந்தாராம்..
அவர் சிறந்த மருத்துவர்,ஏழைகளிடம் பணம் வாங்காதவர்,இறக்கும் நிலையில் உள்ள பலரை காப்பாற்றி இருக்கிறார்..என்றெல்லாம்.
அனைவருக்கும் குழப்பம்...கடைசியில் சொன்னார்..'அப்படிப்பட்ட மனிதரை நீங்கள் உங்களிடமே வைத்துக்கொள்ளுங்கள்..ஏன்..பாராளுமன்றத்திற்கு அனுப்புகிறீர்கள்'என்று .
அவருக்கு ஓட்டுப் போட வேண்டாம் என்பதையும் எவ்வளவு பண்போடு சொன்னார் பாருங்கள்.
ஆகவே ..தயவு செய்து..அநாகரிகமாக எழுதுவதை தவிர்ப்போம்..
நம் காலத்தில் நமக்குக் கிடைத்துள்ள இந்த வசதியை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்வோம்.

Friday, October 10, 2008

இலங்கை தமிழர் பிரச்னை பற்றி அதி புத்திசாலி அண்ணாசாமி

அதி புத்திசாலி அண்ணாசாமிக்கு வருத்தம் அதிகமாயிடுச்சாம்.,காரணம் கேட்டா சொல்றார்...
இப்ப தமிழ்நாட்டிலே அத்தனைக் கட்சியும் இலங்கை தமிழர் பிரச்னை பத்தித்தான் பேசறாங்க..உண்மையிலேயே தமிழர்கள் மீது இவர்களுக்கு இவ்வளவு பற்று இருக்கே என்று நினைத்து முடிக்கும் முன்னரே பிரச்னைகளும் ஆரம்பம் ஆயிடுச்சு.
தமிழர் பிரச்னைன்னதுமே எல்லாக் கட்சிகளும் குரல் கொடுக்கின்றன.அப்போது அனைத்துக் கட்சிக்கூட்டத்தை முதல்வர் கூட்டினால் மட்டும் நான் கலந்துக்க மாட்டேன்னா என்ன அர்த்தம்.ஒரு அரசை முன்னின்று ந்டத்துபவர் இன்று..கலைஞர்..பிரச்னையோ பொதுவானது..அப்போ எல்லாக் கட்சியும் கலந்துக்கொண்டு தங்கள் கருத்தை கூறட்டும்.முடிவுகளை எடுக்கட்டுக்..அதை விட்டு விட்டு...
ஆமாம்...இவங்களுக்குள்ள ஒற்றுமை இருந்தா..என்னிக்கோ காவேரி பிரச்னை தீர்ந்திருக்கும்...முல்லை பெரியார் பிரச்னை தீர்ந்திருக்கும்..ஓகேனக்கல் பிரச்னை தீர்ந்திருக்கும்.,
அரசியல் ஆதாயத்தைத் தேடும் கட்சிகளும்..ஈகோ பிரச்னையும்..பகை உணர்ச்சியும் இருக்கிறவரை நாம உருப்படமுடியாது.,
தமிழா..இதுதான் உன் தலை எழுத்துன்னா...யார் வந்து அதை மாற்றமுடியும்?

Thursday, October 9, 2008

விஜய்காந்த்திற்கு ஒரு கடிதம்

விஜய்காந்த் அவர்களுக்கு
வணக்கம்.,
நீங்களும் ஒரு கட்சி ஆரம்பித்து...எம்.எல்.ஏ.,ஆகவும் ஆகிவிட்டீர்கள்.அதை பாராட்டும் அதே நேரத்தில்..இப்போதெல்லாம் உங்கள் பேச்சில் ஆணவம் தொனிக்க ஆரம்பித்து விட்டது.,
அதற்கேற்றாற்போல லாயோலா கல்லூரியினர் எடுத்த கருத்துக்கணிப்பில் உங்கள் கட்சிக்கு மக்கள் ஆதரவு 3ம் இடத்தில் இருக்கிறது என்றதும்..உங்களுக்கு சனி உச்சத்தில் வந்துவிட்டது.,கருத்துக்கணிப்பெல்லாம் தவறாக ஆகி விடுவதுண்டு.கோடிக்கணக்கான வாக்காளர்களில் ஒரு சில ஆயிரம் பேரிடமே வாக்கெடுப்பு நடைபெறுகிறது.அதை மறக்க வேண்டாம்.,
தேர்தலில் கட்சிகள் ஜெயிப்பது என்பது..அக்கட்சிகளுடன் வைக்கப்படும் கூட்டணி.,எந்த கட்சியும் சேராத வாக்காளர்களின்..தேர்தல் நாளன்று எடுக்கும் முடிவு ஆகியவை பொறுத்தே இருக்கிறது.,இதை உணராமல் பெரிய தலைகள் கூட தவறு செய்வதுண்டு.,2001ல்..தனது முந்தைய ஆட்சி சிறப்பாக செயல்பட்டதால்..இம்முறை ஜெயித்து விடலாம் என்ற கலைஞரின் எண்ணம் பொய்த்தது.,அ.தி.மு.க., கூட்டணி பலம் பொருந்தியதாய் இருந்ததால் வென்றது.,இதை அறிந்த கலைஞர் 2006ல் பலமான கூட்டணி அமைத்தார்.தி.மு.க.ஆட்சிக்கு வந்தது.,இதை ஏன் சொல்கிறேன் என்றால்..உங்களுக்கு யானை பலம் இருப்பதாக கனவு கண்டால் அது தவறு.,மக்களிடம் தான் பலம் இருக்கிறது. அவர்கள் ஆதரவு பெற அவர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும்.,

கலைஞருடன் பலருக்கு கருத்து வேறுபாடு உண்டு.,அவரால் தூற்றப்படும் பார்ப்பனர்கள் வாக்குகள் கூட தி.மு.க.விற்கு பெருமளவில் விழுகிறது.,இது நான் முன்னமே சொன்னபடி...தேர்தல் அன்று..மக்கள் தேர்ந்தெடுக்கும் முடிவு.,கலைஞரின் நிர்வாகத் திறமை.,கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் திறன் இவைகளுக்கு விழும் வாக்குகள்.அவர் ஒரு ராஜதந்திரி.,70 வருஷங்கள் பொது வாழ்வில் இருந்தவர்.,பல தில்லி தலைவர்களையும்..மாநில தலைவர்களையும் பார்த்தவர்.,

அப்படிப்பட்டவர்..நேற்று முளைத்த உங்களை அழிக்க வடிவேலு போன்றவர்களை உபயோகப்படுத்திக் கொள்கிறார்..என்று நீங்கள் சொல்வதைப்பார்த்து..சிரிப்புத்தான் வருகிறது.,இது உங்கள் அனுபவக் குறைவையே காட்டுகிறது.
தமிழுக்காக தண்டவாளத்திலே தலை வைக்கிறேன் என்று ரயில் நிற்கும் போது த்லையை நீட்டறதெல்லாம் பெரிய விஷயமா?என்று எள்ளி நகையாடுகிறீர்கள்.
தமிழன்னை அக்கலைஞனுக்கு..கவிதை எழும் திறன்,கதை,வசனம்,எழுதும் திறன்,பிறமொழி காவியத்தை தமிழ் படுத்தும் திறன்,பேச்சுத் திறன் என வாரி வழங்கியிருக்கிறார்.ஒரு சிலரிப்போல 'ழ"க்கூட உச்சரிக்கத் தெரியாதவர் அல்ல இவர்.
தி.மு.க.,இரண்டுமுறை பிளவுப்பட்டும்..(முதல்முறை அ.தி.மு.க.உருவானது அடுத்த முறை ம.தி.மு.க.) அதற்கான தொண்டர்களை இழக்கவில்லை.,
கலைஞரின் நள்ளிரவு கைதுக்கூட கேலி செய்யப்பட்டாலும்(ஐயயோ..கொலை பண்றாங்கப்பா)..அதிலிருந்தது கலைஞரின் ராஜதந்திரம்.அவர் கைதைப் பார்த்த அனைத்து மக்களும் கட்சி வேறுபாடின்றி இதைக் கண்டனம் செய்து...தங்கள் ஆதரவை கலைஞருக்கு காட்டினர்.
அப்படிப்பட்ட ஒரு தலைவனை..வயதிற்குக்கூட மரியாதைத் தராமல்...இனி கலைஞர் இல்லை கருணாநிதின்னு தான் கூப்பிடப்போறேன் என்கிறீர்கள் ஆணவத்தோடு.
நீங்கள் எப்படி வேண்டுமானாலும் சொல்லுங்கள்....
கடைசியாக ஒன்று சொல்ல விழைகிறேன்..
'பெருக்கத்து வேண்டும் பணிவு"

இப்படிக்கு
அப்பாவி தமிழன்

Wednesday, October 8, 2008

M.G.R., ன் உண்மையான வாரிசு யார்?

M.G.R.,
தமிழர்களால் மறக்க முடியாத..பிறப்பால் ஒரு மலையாளியானவர்.
வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில்..வந்து..தமிழ் மக்களின் தலைவர்களில் ஒருவராகி..ஓரளவு திறம்பட ஆட்சி புரிந்து மறைந்த நடிகர்..அரசியல்வாதி.
பல நடிகர்களுக்கு முதல்வர் பதவி கனவு இவரால் ஏற்பட்டது..ஆனால் இவர் கடந்து வந்த பாதை கரடுமுரடானது என்பதை இவர்கள் ஏன் நினைப்பதில்லை.
அடிப்படையில் காங்க்கிரஸ்காரரான் இவர்..அண்ணாவின் கொள்கைகளால் கவரப்பட்டு தி.மு.க.வில் இணைந்தார்.அதற்குபின்..அண்ணாவாலேயே எம்.ஜி.ஆர். வந்து முகத்தைக் காட்டினாலே ஒட்டு கிடைக்கும் என பாராட்டப் பட்டார்.
எம்.ஆர்.ராதாவால் தனிப்பட்ட சில காரணங்களால் சுடப்பட்ட இவரது புகைப்படத்தைப் போட்டு தி.மு.க. தேர்தலில் ஓட்டுக் கேட்டது.
இவர் வேறு..கட்சி வேறு என ரசிகர்கள் நினைக்கவில்லை.
ஒரு சமயம் இவரே..'காமராஜர் என் தலைவர்..அண்ணா என் வழிகாட்டி'என்றபோது மக்களால் அதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
அந்த அளவு கட்சியில் ஒன்றிய இவர் கட்சியின் பொருளாளரும் ஆனார்.அண்ணாவின் மறைவுக்குப் பின் நெடுஞ்செழியன் தான் முதல்வராக ஆகியிருக்க வேண்டும்.,ஆனால் கலைஞர் முதல்வர் ஆனதற்கு இவரும் ஒரு காரணம்.ஆனால் அப்பொதெல்லாம் இவர் தனக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று எல்லாம் கேட்டதில்லை.
கட்சியின் பொருளாளர் என்ற முறையில் கட்சியின் கணக்கு கேட்ட போது..கலைஞரால் அதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.தி.மு.க. விலிருந்து விலக்கப்பட்டார்.உடன் இவர் அண்ணாதிராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பித்தார்.பின் அவர் உயிரிருந்தவரை வெற்றி முகம்.
படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்ற காமராஜரையே தோற்கடித்த மக்கள் உண்மையிலேயே படுத்துக் கொண்டு ஜெயிக்கவைத்தது இவர் ஒருவரைத்தான்.
முன்னாள் ஜனாதிபதி கிரி அவர்கள் மறைந்த போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்.,மயானபூமிக்கு செல்கிறார்.அங்கு வந்திருந்த எதிர்க்கட்சி தலைவரான கலைஞர் கடைசியில் நின்றுக்கொண்டிருந்தார்..அவரைக்கூப்பிட்டு தன் பக்கத்தில் நிற்க வைத்துக்கொண்டார்.அந்த பண்பு இன்று திராவிட கட்சியினரிடையே இல்லையே ஏன்?
இவர் மறைவுக்குப் பின்..கட்சி இரண்டாக உடைந்தது..இவர் மனைவி ஜானகி அணி,ஜெயலலிதா அணி..
எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்ட கட்சி உடைந்ததை அவர்கள் தொண்டர்களால் ஏற்க முடியவில்லை.இரண்டு அணியும் மீண்டும் ஒன்றானதுமே மக்கள் கட்சியை மீண்டும் அங்கீகரித்தனர்.
இன்றும் பல கிராம மக்களிடையே எம்.ஜி.ஆர்.கட்சிதான்..இரட்டை இலை எம்.ஜி.ஆர்.சின்னம் இதுதான் அ.து.மு.க.
சரி விஷயத்திற்கு வருவோம்..அவர் போல வரலாம் என பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்தனர்..ஆரம்பிக்கின்றனர்..
பாக்யராஜ்..தான் தான் அவர் வாரிசு என ஒரு கட்சி ஆரம்பித்தார்..நிலை?
டி.ராஜேந்திரன் கட்சி பெயரளவில் இருக்கிறது
சரத்குமார் கட்சி
விஜய்காந்த் கட்சி
கார்த்திக் கட்சி
ரஜினியை ரசிகர்கள் எதிப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
விஜய்க்கும் ஆசை வந்திருக்கிறது.
இவர்களெல்லாம்..நடிப்பு சக்ரவர்த்தி சிவாஜி அவர்களே ஒரு கட்சி ஆரம்பித்து தோல்வி கண்டதை மறந்துவிடக்கூடாது.

ஆமாம்..இன்றைய நிலையில் எம்.ஜி.ஆர்.வாரிசு யார்...என் முன் பதிவு ஒன்றை மீண்டும் கீழே கொடுத்துள்ளேன்.

எம்.ஜி.ஆர். ..உண்மையான வாரிசு யார்?

அண்ணாவின் மறைவிற்குப்பின் சில ஆண்டுகள் கழிந்து தி.மு.க. உடைந்து தோன்றிய கட்சி அண்ண திராவிட முன்னேற்ற கழகம்.அந்த சமயத்தில் பல திராவிட கட்சிகள் அண்ணாவை சொந்தம் கொண்டாடின.(அண்ணாவின் மனைவியையும்,குடும்பத்தையும் யாரும் கண்டுக்கொள்ளவில்லை என்பது வேறு விஷயம்).எம்.ஜி.ஆர்.தனிப்புகழ்ப் பெற்று ஆட்சியைப் பிடித்ததும் ..நான் தான் அவர் வாரிசு..என அவரே சொல்லி விட்டார் என்றார் பாக்கியராஜ்.(வசதியாக சினிமாவில் தன் வாரிசு என்று சொன்னதை மறைத்து விட்டார்).பின்,சத்யராஜ் சில படங்களில் எம்.ஜி.ஆர்.அணிவதுபோல உடைகளை அணிந்து அவரது பாணியில் நடித்தார்.திருனவுக்கரசர் எம்.ஜி.ஆர்.அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பித்தார்.ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆர்.கழகம் ஆரம்பித்தார்.
இது எல்லாம் பழங்கதை.தமிழக கட்சிகளின் தற்போதைய நிலை.....
விஜயகாந்த்- தன்னைத்தானே கறுப்பு எம்.ஜி.ஆர்.எனக் கூறிக்கொண்டார்.தன்னை அவர் வாரிசு என்றார்.இப்படி சொல்வதால் மக்கள் ஏமாந்து விடுவார்கள் என்ற காலம் போயிற்று.சினிமாவில் நல்லவராக நடிப்பவர்கள் அனைவரும் நல்லவரல்ல என மக்கள் உணர்ந்துக் கொண்டார்கள்.எம்.ஜி.ஆர்.வாரிசு என்று சொல்லிக்கொள்ளும் இவர்..மதுராந்தகம் அருகே 403 ஏக்கரில் பண்ணை வீடு வைத்துள்ளார்.(நில உச்ச வரம்பு சட்டப்படி ஒருவர் 15 ஏக்கருக்கு மேல் வைத்திருக்கூடாது)அதில் 30ஏக்கர் புறம்போக்கு.இதை அரசு கையகப்படுத்தியுள்ளது இப்போது.இப்படிப்பட்டவர் அவர் வாரிசா?
சரத்குமார்- சமீபத்தில் கட்சி ஆரம்பித்த இவர் தன்னை எம்.ஜி.ஆர். என நினைக்கிறார்.இது வேண்டுமானால் அரசியல் கவர்ச்சியை உண்டாக்கலாம்.ஆனால் மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தாது.
ஜெயலலிதா-எம்.ஜி.ஆர்.ஆரம்பித்த கட்சி இவரிடம் இருக்கலாம்.அதனால் இவர் அவரது வாரிசாக முடியுமா?இவர் உண்மையிலேயே வாரிசு என்றால்..அவர் மறைந்ததும் கட்சி உடைந்த போது இவர் தலைமை வெற்றி பெற்றிருக்க வேண்டுமே..மீண்டும் கட்சி இணைந்ததும் தானே வெற்றிப் பெற்றார்.இது எம்.ஜி.ஆர்.ஆரம்பித்த கட்சி.,எம்.ஜி.ஆரின் சின்னம் இரட்டை இலை..இதுதான் இன்றுவரை அவருக்கு துணை இருக்கிறது.விஜய்காந்த் தான் வாரிசு என்றதும் தான் ஜெ விழித்துக்கொண்டார்.உடன் ராமாபுரம் சென்றார்..தான் தான் வாரிசு என்றார்.
ஆனால்..இவர்களில் யார் உண்மையான வாரிசு?
யாருமே இல்லை..
ஒரு அண்ணாதான்...
ஒரு எம்.ஜி.ஆர்.தான்
மக்கள் மட்டுமே இவர்களது வாரிசுகள்.

Tuesday, October 7, 2008

சித்ரான்னம் 7-10-08

1. ரஜினி வீட்டு கொலுவிற்கு..தயாளு அம்மாளும்,துர்காவும் சென்றார்கள்
(இது செய்தி)
விஜயதசமிக்கு ரஜினி கட்சி ஆரம்பிப்பாரா..இல்லையா என்பது தெரியும் என்றார்கள்
அதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்காது என நம்புவோம்.

2.கலைஞர் இலங்கை தமிழர் பிரச்னைப் பற்றி பிரதமருடன் தொலை பெசியில் பேசியதாகவும்..பிரதமர் நாத் தழுதபடி ஆவண செய்வதாக கூறியதாக கலைஞர் பொதுக்கூட்டத்தில் பேச்சு.,
(எப்பவும் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டிருக்கும் பிரதமர்..இப்பொழுது பேசக்கூட முடியாத நிலையில் இருக்கிறார் போல இருக்கிறது )

3.சிரஞ்சீவி கட்சியில் இப்பவே பாராளுமன்ற தேர்தலுக்கு நிற்க இரண்டு லட்சம் பேர் மனு கொடுத்துள்ளனர்
(மொத்த தொண்டர்களும் மனு கொடுத்துவிட்டனர் போல இருக்கிறது)

4.தமிழகத்தில் இன்னும் 6 மாதங்களுக்கு மின் வெட்டு தொடரும் என மத்திய மின் துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூறினார்
(அதற்குப் பின்....மக்களுக்கு அதுவே பழகிவிடும் என்கிறாரோ)

5.அரசுப்பணியில் இருக்கும் மகளிரின் பேறுகால விடுமுறையை 6 மாதங்களாக உயர்த்தியது மத்திய அரசு
(பார்லிமெண்டில் பெண்கள் இட ஒதுக்கிடு 33% என்ன ஆயிற்று என யாரும் கேட்கக்கூடாது இப்போதயக்கு)

6.கேப்டனின் விருதகிரி படத்தில் சிலரை மறைமுகமாக டபாய்க்கும் பெயர்கள் கொண்ட பாத்திரங்கள் இருக்குமாம்
(வடிவேலுவை வெடிவேலு என ஒரு கேரக்டர் ஆக்கிடுவாங்களோ)

பொருளாதார சீர்குலைவுக்கு ரஜினி போன்றோரே காரணம்- புஷ்

சில மாதங்க்களுக்கு முன்..இந்தியர்கள் சத்தான உணவு சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள்..அதுதான் விலைவாசி ஏற்றத்திற்கு காரணம் என்று சொன்ன புஷ்..நேற்று நம் பத்திரிகைக்கு பேட்டி அளித்த போது நிருபர் கேட்ட கேள்வியும் ..அதற்கான புஷ் அளித்த பதில்க்ளும்..

நிருபர்-அமெரிக்க பொருளாதார சீர்குலைவுக்கு காரணம் என்ன?

புஷ்-அதற்கான முழு காரணமும் இந்தியர்களே

நிருபர்-எப்படி சொல்கிறீர்கள் ..அதற்கான ஆதாரம் ஏதேனும் உள்ளதா?

புஷ்-நான் ஒரு விஷயத்தைச் சொன்னாலே நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள்

நிருபர்-சொல்லுங்கள்

புஷ்-தமிழக சூப்ப்ர் ஸ்டார் ரஜினி ..நடித்த சிவாஜி படம் பார்த்தேன்..அதில் அவர் 20வருஷங்கள் இங்கு வேலைப்பார்த்து 200கோடி சம்பாதித்து இந்தியா எடுத்துச் சென்றுள்ளார்.அதாவதுகிட்டத்தட்ட
5 கோடி அமெரிக்கன் டாலர்ஸ்.இது ஒருவர் கணக்கு.இதுபோல எவ்வளவு இந்தியர்கள் எவ்வளவு பணங்களை இங்கிருந்து எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.இப்போது உங்களுக்கு புரிந்ததா? என்றார்.

நம் சரடு நிருபர் விடை பெற்றார்.

Monday, October 6, 2008

சத்தியம் தவறிய ராமதாஸ்

தமிழக மக்களிடையே இருக்கும் கட்சி வெறி ஒழிய வேண்டும்..
இரண்டாவதாக..இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் அவரவர் ஜாதியை மறந்து விட வேண்டும்
என கடவுள் தன் முன் தோன்றினால் தான் கேட்கும் வரமாயிருக்கும் என்ற ராமதாஸிடம்...
உங்களுக்கு வாழ்க்கை முடிய 24 மணி நேரமே உள்ளது என வைத்துக் கொள்ளுங்கள்,
அந்த கடைசி நிமிடங்களில் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு
'என் மனைவியைக் கூப்பிட்டு..'நான் நம் இன மக்களுக்கு மூன்று சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன்.
உப சத்தியமாக,என் வாரிசுகளும் அரசியலில் ஈடுபட மாட்டார்கள் என்று கூறியிருக்கிறேன்.இனி அந்த
சத்தியத்தை நீ தான் காப்பாற்ற வேண்டும் 'என்று கூறுவேன். என்று 1989ல் ஆனந்த விகடனுக்கு
பேட்டி கொடுத்துள்ளார்.அவர் உயிருடன் உள்ளபோதே அவர் சத்தியத்தை அவரால் காப்பாற்ற இயலவில்லை.

Sunday, October 5, 2008

தமிழன் என்றால் இளிச்சவாயனா..? கோவியின் பதிவின் தாக்கம்

நான் ஓட்டுப்போட ஆரம்பித்த நாள் முதலாய் தி.மு.க. விற்கே ஓட்டளித்து வந்திருக்கிறேன்.பலர் இது சம்பந்தமாக என்னை கேலியும் செய்திருக்கிறார்கள்.கலைஞர் எது சொன்னாலும்..செய்தாலும் அவரை ஆதரித்து நண்பர்களிடையே பேசிவந்தவன் நான்.,நான் தி.மு.க.உறுப்பினன் அல்ல...ஆனால் தி.மு.க.அனுதாபி.கலைஞரின் நிர்வாகத்திறமை என்னைப்போன்றோரை அசர வைத்ததுண்டு.
ஆனால் சமீப காலமாக அவரின் நடவடிக்கைகள் எரிச்சலையே ஏற்படுத்தி வந்திருக்கின்றன.

பத்திரிகைகள்..தேர்தல் காலங்களிலோ அல்லது மற்றசமயங்களிலோ மக்கள் ஆதரவு சம்பந்தமாக அவர்களிடம் வாக்களிப்பு எடுப்பதுண்டு.சமீபத்தில் கூட லாயோலா கல்லூரியில் வழக்கம் போல
வாக்களிப்பு நடந்தது.அதில் தனக்கு சாதகமாக இல்லை என யாராவது கண்டனம் தெரிவித்தார்களா? கலைஞரே கூட...இப்படிப்பட்ட முடிவுகளில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று ஒருமுறை சொல்லி இருக்கிறார்.

ஆனால் தினகரன் பத்திரிகை 'முதல்வராக வர யாருக்கு ஆதரவு' என மக்களிடம் வாக்களிப்பு நடத்தியதில் ஸ்டாலினிக்கு பெரும் ஆதரவு இருந்தது..ஆனால் அழகிரிக்கோ...ஒற்றை இலக்க ஆதரவு.இதைப்படித்த அஞ்சாநெஞ்சன் கோபம் அடைந்தார்..அந்த கோபத்தின் விலை..
மதுரை தினகரன் அலுவலகம் கொளுத்தப்பட்டது..
3 ஊழியர் மரணமடைந்தனர்.(தர்மபுரி பஸ் எரிப்பும் இதற்கும் என்ன வித்தியாசம்)
திறம்பட செயல்பட்டு வந்த தயாநிதி மாறன் பதவி பறி போனது.
ஆனால் சமீிப காலங்களில் கலைஞரும் ஸ்டாலினுக்கு ஆதரவாகத்தானே பேசிவருகிறார்.

அடுத்து...கனிமொழிக்கு எம்.பி.பதவி..இதில் பெரும்பாலோருக்கு இணக்கம் இல்லை.

பூங்கோதை லஞ்ச வழக்கு ஒன்றில் தனக்கு வேண்டியவருக்கு உதவப்போனதால் பதவி பறிக்கப்பட்டது.அதுவே டி.ஆர்.பாலு மீது பல குற்றச்சாட்டுக்கள்...அவரை ஒரு வார்த்தைக்கூட கேட்கவில்லை. இன்னும் சொல்லப்போனால்..இப்போது தி.மு.க.விற்கும் மத்திய அரசுக்கும் டில்லி பாலம் அவர்.

எஸ்.சி.வி.க்கு தொந்தரவு கொடுத்து வந்ததுடன் நில்லாது..ராயல் கேபிள் விஷன் ஆரம்பித்தது...காதலில்வீழ்ந்தேன் படம் வெளிவராமல் தடுத்தது..இப்படி..மதுரையில் தனி ராஜ்ஜியமே நடந்து வருவதை இவரால் இன்றுவரை தட்டிக் கேட்கமுடியவில்லை.

இலங்கையிலிருந்து IPKF திரும்பிய போது..அது தமிழர்கள் பலரை அழித்தது..ஆதரவாக செயல்படவில்லை என ..அவர்களை வரவேற்க செல்லாத கலைஞரை அன்று பாராட்டினோம்..அந்த பற்று இன்று குறைந்து விட்டதே ஏன் கலைஞரே?

நம் இஸ்லாமிய சகோதரர்களுக்காக (எல்லோருமே அவர்கள்) பாகிஸ்தானுடன் போரிட்டு பங்களாதேஷ் உருக்கியவர்கள் நம் ராணுவத்தினர்.ஆனால் இலங்கை பிரச்னையில் அவதிப்படுவது தமிழன் தானே என ஒரு எண்ணம் வேண்டாம்.
நம் ராணுவம் நினைத்தால்..இலங்கையில் தமிழர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்.

கலைஞரே..இன்று நீங்கள்சொல்வதை கேட்கும் நிலையில் மத்திய அரசு உள்ளது..இச்சமயத்தில் இப்பிரச்னை சம்பந்தமாக உறுதியான முடிவெடுக்க வையுங்கள்.

அதைவிட்டிவிட்டு எப்போதும் போல மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.என்று சொல்லாதீர்கள்.,மக்களை தந்தி அனுப்பச்சொல்லாதீர்கள்.

இதுவரை எங்கள் எண்ணத்தில் உள்ள தமிழினத் தலைவராக இருங்கள்.,

இல்லையேல்..

உங்களை கோபாலபுர வீட்டிற்கும்,சி,ஐ.டி.நகர் வீட்டிற்கும்,கிரீன்வேஸ்சாலை வீட்டிற்கும்,மதுரை வீட்டிற்குமே அக்கறை ஊள்ளவர் நீங்கள் என்ற எண்ணத்தை தோற்றுவீக்காதீர்கள்.

வாய் விட்டு சிரியுங்க...

கணவன்_(திருமணம் ஒன்றில்) நாடு எப்படிப்போகுது பாரு..மணமேடையில் தலையை விரிச்சுப் போட்டுக்கிட்டு ஜாக்கெட் கூட போடாம பொண்ணு உட்கார்ந்து கிட்டு இருக்கு
மனைவி- நல்லா கண்ணடியை போட்டுக்கிட்டுப் பாருங்க..அது பொண்ணு இல்ல..புரோகிதர்

2.உன் உடம்புலே எல்லாம்..திட்டுத் திட்டா படைபோல இருக்கு.,அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லாம இருக்கே
எனக்குத்தான் ஒரு தம்பி இருக்கானே! தம்பி உடையான் படைக்கு அஞ்சான்..கேள்விபட்டதில்லையா?

3.தொண்டர்களே...உஷாராய் இருங்கள்..எதிக்கட்சியினர் 'புதியதோர் உலகம் செய்வோம்'என்கிறார்கள்..பழைய இந்த உலகத்தை எடுத்து சென்றிட அவர்கள் போடும் திட்டம் இது.

4.டாகடர்(நோயாளியிடம்)உங்க உடம்பு நல்லா ஆகணும்னா..ஆஃபீஸூக்கு லீவ் போடாம போங்க..அங்கபோய் நல்ல தூக்கம் போட்டா சரியாயிடும்.

5.என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி ஒரே தொந்தரவு
யாரு..உன் காதலனா?
இல்லை...என் அம்மாவும்..அப்பாவும்

6.உனக்கும் உன் மனைவிக்கும் கருத்து வேறுபாடே வராதா?
வரும்..ஆனால் நான் ஒரு வார்த்தை சொன்னதும் அவ சரியாயிடுவா
என்ன சொல்வே
நீ சொல்றதுதான் சரின்னு சொல்லிடுவேன்

Saturday, October 4, 2008

கிரீமி லேயரும்..இட ஒதுக்கீடும்..

எந்த பிரச்னைகளுக்கும்..முடிவு என்று ஒன்று உண்டு.,ஆனால் இந்த இடஒதுக்கீடு பிரச்னைக்கு..இந்தியாவில் முடிவே இல்லை எனலாம்.
பிற்படுத்தப்பட்டோருக்கு I.I.T.,I.I.M., இவற்றில் 27சதவிகிதம் இட ஒதுக்கீடு அமுல் செய்வதில் பிரச்னை வளர்கிறது.
அவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்வதால் வருஷம் ஒன்றிற்கு 9 சதவிகிதம் என மூன்றாண்டுகளுக்கு இடங்கள் அதிகரிக்கும் என ஒரு தேவையில்லாத ஒன்றும் உள்ளே நுழைந்து விட்டது.

அடுத்து...பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்கள் காலியாக இருப்பவை..பொதுவில் சேர்ந்துவிடும்..ஆகவே..பொருளாதாரத்தை வைத்துப் பார்க்காது அனைத்து பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு வேண்டும்..என்கின்றனர்.இது எனக்கு சரியாகவே படுகிறது.இதில் எதற்கு ஒரு கிரீமி லேயர்..வருஷம் 4.5 லட்சத்திற்குள் வருமானம் வருபவர்கள் இதில் வரவேண்டுமாம்.அப்பா..சாமி..அவனுக்குள்ள 27%ல் அவனைச் சார்ந்த யார் வந்தால் உனக்கென்ன..அதில் நீ ஏன் மூக்கை நுழைக்கிறாய்.

அடுத்து ஒரு குற்றச்சாட்டு..கல்வியின் தரம் குறைந்து விடுமாம்...

ஆடு நனைகிறது என்கிறது ஓநாய்

இன்று மாணவர்கள் வாங்கும் மதிப்பெண்களைப்பாருங்கள்..O.C.மாணவர்கள் வாங்கும் மதிப்பெண்களைவிட இவர்கள் அதிகம் வாங்குகிறார்கள்.

அவர்களுக்கும்..இவர்களுக்கும்..கட் ஆஃப் மதிப்பெண்களில் பெரும் வித்தியாசம் இருப்பதில்லை.1 அல்லது 2 மதிப்பெண்கள்தான் வித்தியாசம்.

கடைசியாக..பொதுவாக..ஒன்று..

படிக்கும் மாணவன் எந்த இடத்தில் இருந்தாலும் படிப்பான்...ஆகவே கூப்பாடு போடுவதை நிறுத்துங்கள்

Friday, October 3, 2008

கலைஞர் ஆட்சியும்...மின் வெட்டும்..

"மின்சாரத் தாக்குதல்"
தமிழக அரசு மக்கள் மீது ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளது.'இப்படிப் போடப்போகிறோம்,போட வேண்டியிருக்கலாம்'என்றெல்லாம் முன் எச்சரிக்கை கொடுத்துவிட்டதனால் மட்டும், தாக்குதலின் அதிர்ச்சி குறைந்துவிட முடியாது.
அக்டோபர் முதல் தேதியிலிருந்து தமிழ்நாடெங்கும் 15 சதவிகித மின்சார வெட்டு அமுலுக்கு வந்துள்ளது.இதை குறித்துத் தொழில் வர்த்தகத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களும் பொது மக்களும் அதிர்ச்சியும் பெரும் கவலையும் அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு, முதலில் 25 சதவிகிதம்,பிறகு 50சதவிகிதம்,அதன் பின்னர் ஃபெப்ரவரியில் 75 சதவிகிதம் என்று மின்வெட்டை அமுலுக்கு கொண்டுவந்த போது,'தென்மேற்குப் பருவ மழை ஏமாற்றிவிட்டது; நீர்த்தேக்கங்களில் தண்ணீர் இல்லாததால் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுவிட்டது.'என்று இயற்கையின் மேல் பாரத்தைப் போட்டார்கள்.மக்களோ,அந்த எட்டு மாதங்கள் சொல்லொணா அவதிக்கு இலக்காகி,இருளில் கிடந்து திண்டாடினார்கள்.தமிழகத்தில் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது.பல தொழிற்சாலைகள் குறைந்த நேரம் இயங்கி, வேலையில்லாத் திண்டாட்டத்தை ஏற்படுத்தின. பம்பு செட்டை நம்பிய பயிர்கள் வாடி உலர்ந்து பதராகிவிட்டன.
இத்தனைக்கும் தென்மேற்குப் பருவ மழை இவ்வாண்டு ஏமாற்றவில்லை.நீர்த்தேக்கங்கள் பல நிறைந்துள்ளன.மேட்டுர் அணையில் இதுவரை ஏற்பட்டிராத அளவு நீர் தேங்கியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.இந்த நிலையில் வெட்டு எதற்கு?
ஒன்று மட்டும் நிச்சயம்.இப்படி அடிக்கடி வெட்டு ஏற்படுமென்ற அச்சம் தோன்றினால், புதுத் தொழில்களைத் துவக்கவோ, ஏற்கனவே உள்ள தொழில்களைப் பெருக்கவோ அத்துறைகளில் ஈடுபடுபவர்கள் பயப்படுவார்கள்.தடையில்லாமல் வசதியாக மின்சாரம் கிடைக்கும் மாநிலங்களைத் தேடிப் போவார்கள்.தமிழகம் பின்தங்க வேண்டிய நிலை ஏற்படும்.
எப்படியாகிலும் தொழில் வளர்ச்சிக்கும் இதர துறைகளுக்கும் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்தே தீருவது என்ற உறுதியோடு, தற்போதைய மின்சார நெருக்கடியை ஓர்'அவசர நிலையா'கக் கருதி, தமிழக அரசு செயலாற்ற வேண்டும்.,

(இது ஆனந்த விகடன் தலையங்கம்..வெளியான தேதி..7-10-73)..இன்றைக்கும் பொருந்தியுள்ளது அல்லவா?

நன்றி- ஆனந்தவிகடன்

அதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்..

அண்ணாசாமி வேலை செய்யும் கம்பேனியில் 6 மாதமாக வேலைநிறுத்தம்.அங்கு தொழிலாளர் யூனியனுக்கு அண்ணாசாமிதான் காரியதரிசி.அவரை நிர்வாகம் பேச்சு வார்த்தைக்கு அழைத்தது.நடந்த பேச்சு வார்த்தை.

அதிகாரி - ஒரு வருஷத்திற்கு எத்தனை நாட்கள்

அண்ணாசாமி-365 நாட்கள்

அதிகாரி-நாம லீப் வருஷத்தையே எடுத்துப்போம்.366 நாட்கள்.அதுல ஒரு நாளுக்கு 8 மணி நேரம் வேலைப் பார்க்கறீங்கன்னு வைச்சுப்போம்.அதாவது ஒரு நாளைக்கு 1/3பாகம் வேலை செய்யறீங்க.அதாவது வருஷத்திற்கு 122நாள் .அதில் வருஷத்திற்கு 52ஞாயிற்றுக்கிழமையும்,சனிக்கிழமை 1/2 நாளா இருக்கறதால 26 நாளும்..ஆக மொத்தம் 78 நாட்கள் நீங்க வேலை
செய்யறதில்லை.122 வேலை நாட்கள்லே விடுமுறை 78 நாைள் கழிச்சா மீதி 44 நாட்கள்.இதுதான் உண்மையிலேயே நீங்க வேலை செய்யற நாட்கள்.அந்த 44 நாட்கள்ல வருஷத்திற்கு
30நாள் earn leave,12நாட்கள் casual leave போச்சுன்னாமீதி 2 நாள்.இந்த 2 நாள் தான் நீங்க வேலை செய்யறீங்க.அதுக்கு சம்பள உயர்வு தேவையா?

அண்ணாசாமி யோசனை செய்தார்.அதிகாரி கூறுவது உண்மைதான் போலிருக்கு என்ற முடிவுக்கு வந்தார்.2 நாட்கள் வேலை செய்ய சம்பள உயர்வு கேட்பது அநியாயம் என்று வேலை நிறுத்ததை வாபஸ் வாங்கினார்.

Thursday, October 2, 2008

M.G.R. படப் பாடல்களும்..அறிவுரைகளும் - பாகம் 3

விவசாயி பாட்டில் விவசாயி பற்றி..

முன்னேற்ற பாதையிலே மனசை வைச்சு
முழு மூச்சா அதற்காக தினம் உழைச்சு
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ வழங்கும்
குணமுடையோன் விவசாயி
(இதன் பாடலாசிரியர்-மருதகாசி)

ஆனந்தஜோதியில்...

ஒருதாய் மக்கள் நாமென்போம்
ஒன்றே எங்கள் இனமென்போம்
இறைவன் ஒருவன் தானென்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்.

ரிக் ஷாக்காரன் படத்தில்

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
அது ஆணவ சிரிப்பு-ஆணவ சிரிப்பு
வயிறு வலிக்க சிரிப்பவர்கள் மனித ஜாதி-பிறர்
வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி

கணவன் படத்தில்..காங்கிரஸ் ஆட்சி முடிந்து தி.மு.க.ஆட்சிக்கு வந்த நேரம்
ஒருபாட்டில் இந்த வரிகள் வரும்

அதிகாரம் செய்தவரோ
ஆட்சியை முடித்தார்
இங்கே அன்பு வழி நடந்தவரோ
ஆட்சியைப் பிடித்தார்

தி.மு.க.ஆட்சிக்கு வர.M.G.R.பாடல்கள் பல உறுதுணையாய் இருந்திருக்கின்றன.

மீண்டும் மேலே சொன்ன ஆனந்தஜோதி படப்பாடலிலேயே மேலும் சில வரிகள்

அன்று மனிதன் காட்டை அழித்து
நாட்டைக் காட்டினான்

இன்று மனிதன் வெண்ணிலாவில்
இடத்தை தேடினான்-நாளை
மனிதன் ஏழு உலகம் ஆளப்போகிறான்

(தொடரும்)

வாய் விட்டு சிரியுங்க..

1.தலைவர்..பொருளாதாரம் பலமாக இருக்கிறது...பலஹீனமாக இருக்கிறது என இரண்டு தலைப்பிலும் பேச்சை தயாரிக்கச் சொல்லி இருக்கார்..ஆளும் கூட்டணியில் சேர்ந்தாலும் சரி..எதிர்க் கட்சி கூட்டணியில் சேர்ந்தாலும் சரி..அதற்கேற்ப பேசிடலாம்னு.

2.என் மனைவியை கண் கலங்காம வைச்ச்க்கணும்னு பார்த்தேன்..முடியலை
ஏன்?என்ன ஆச்சு
அவ மெகா சீரியல் நடிகையா இருக்கறதாலே..வீட்ல எது பேசினாலும்..கண்ணீரோடத்தான் பேசறா

3.கடைக்காரர்-இலவச இணைப்பை 'கேட்'டு வாங்குங்கன்னு சொல்றது..இந்த சின்னப் புத்தகத்தாங்க..வீட்டு 'கேட்"டு இல்லைன்னு சொன்னா புரிஞ்சுக்க மாட்டேன்னு சொல்றீங்களே

4.உங்கம்மாவோட நான் சண்டை போடறதால எனக்கு சாபம் கொடுத்துட்டாங்க
என்னன்னு
காலத்துக்கும் சுமங்கலியா இருன்னு

5.டி.வி.ல நிகழ்ச்சி கொடுக்க ஏன் உங்க நாயை இழுத்துக் கிட்டு வர்றீங்க
இது டாக் ஷோன்னு சொன்னாங்களே

6.நீதிபதி-(குற்றவாளியிடம்)உனக்குத் தேவையானால் அரசாங்கமே வக்கீல் ஏற்பாடு செய்யும்
குற்றவாளி-வேண்டாங்க...எனக்கே நல்லா பொய் பேசத் தெரியும்.

Wednesday, October 1, 2008

M.G.R.,படப்பாடல்களும்..அறிவுரைகளும்.. பாகம்-2

மேலும் சிலப் பாடல்களை இப்பதிவில் பார்க்கலாம்.,

கொடுத்தெதெல்லாம் கொடுத்தான் - அவன்
யாருக்காக கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்-இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்

மண்குடிசை வாசலென்றால்
தெய்வம் வர மறுத்திடுமா

சிலர் வாழ வாழ
பலர் வாட வாட
ஒருபோதும் தெய்வம் கொடுக்கவில்லை

ஆனந்த ஜோதி படப் பாடலில்

ஒன்று எங்கள்ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே

வெள்ளை மனிதன் வேர்வையும்
கருப்பு மனிதன் கண்ணீரும்
உப்பு நீரின் வடிவிலே
ஒன்று சேரும் கடலிலே

எங்கவீட்டுப் பிள்ளைபடத்தில் நான் ஆணையிட்டால் பாடலில்

ஒரு தவறு செய்தால்
அதை தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்
உடல் உழைக்க சொல்வேன்-அதில்
பிழைக்கச் செய்வேன்-அவர்
உரிமைப் பொருள்களைத் தொடமாட்டேன்

விவசாயி படப்பாடலில்

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடுபடு வயக்காட்டில்
உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்

(தொடரும்)

சக பதிவர்களுக்கு நன்றி

கோவி..சில நாட்களுக்கு முன் என் பயோடேட்டாவை பதிவிட்டு இருந்தார்.அதில் என் வலைப்பக்கம் பற்றியும்..என் மனைவியின் வலைப்பக்கம் பற்றியும் எழுதி இருந்தார்.

அதைப் படித்து எங்களை வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எங்கள் மனங்கனிந்த நன்றி.

குறிப்பாக..கோவி, விக்னேஸ்வரன்,சுபாஷ்,விஜய் ஆனந்த்,வடகரை வேலன்,ச்சின்னப்பையன்,தமிழ்சினிமா,பரிசல்காரன்,நசரேயன் ஆகியவர்களுக்கு

ஸ்பெஷல் தேங்க்ஸ்.,

உங்களை சந்திக்கும் தினம் கண்டிப்பாக ,ஒரு பார்ட்டி உண்டு.

உடனே பயம் வேண்டாம்....என் செலவில்தான்.