தலைவி கூற்று
(தலைவன் மணமுடிக்க பொருளிட்ட தலைவியைப் பிரிந்த காலத்தில் அவனது பிரிவை தாங்கமாட்டாள் எனக் கவலையுற்ற தோழிக்கு, “தலைவனது நட்புக் கெடாதென்பதை நான் அறிந்துள்ளேன்; . அதனால் நான் உறுதி நீங்கேன்” என்று தலைவி கூறியது.)
குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் கருவூர் கிழார்
பலருங் கூறுகவஃ தறியா தோரே
அருவி தந்த நாட்குர லெருவை
கயநா டியானை கவள மாந்தும்
மலைகெழு நாடன் கேண்மை
தலைபோ காமைநற் கறிந்தனென் யானே.
-கருவூர் கிழார்.
உரை-
தோழி, நான், அருவியால் தரப்பட்ட, காலத்தில் விளைந்த கொத்தையுடைய -ஆழமான நீர்நிலையை ஆராய்கின்ற யானையானது, கவளமாக உண்ணும், மலைகள் பொருந்திய நாட்டையுடைய தலைவனது நட்பு, கெடாமையை, நன்றாக, அறிந்துள்ளேன். அதனை, அறியாதோர் பலரும் தமக்குத் தோன்றியவற்றைக் கூறுக.
(கருத்து)தலைவன் என்னை மணமுடிப்பான் என துணிவுடன் உள்ளேன்.
No comments:
Post a Comment