கீழே கொடுத்துள்ள குறளில் இல்வாழ்வானின் ஐந்து கடமைகளைப் பற்றிச் சொல்கிறார்.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தா றோம்பல் தலை (943)
அவை என்ன
தென்திசையில் உள்ளவர்கள்,தெய்வம்,விருந்தினர்,சுற்றத்தார்,தான் என்று ஆகிய ஐந்து வகையிலும் காப்பது தலையாய கடமை
என்று பொருள் தருகிறது இக்குறள்.
இன்னும் சரியாக புரியவில்லை அல்லவா..
கொஞ்சம் விரிவாகவேப் பார்ப்போம்..
தென் புலத்தார் என்றால் பித்ரு தேவதைகள்.பித்ரு தேவதைகள் என்று சில தேவதைகள் இருக்கின்றன. இவர்களின் வேலை, முன்னோருக்கு நாம் செய்யும் சிரார்த்தம் போன்ற பூஜைகளின் பலனை நம் முன்னோரிடம் கொண்டு சேர்ப்பது,என்று இந்து மதம் சொல்கிறது.இவர்கள் தென்திசையில் இருப்பார்கள் என்றும் ஒரு நம்பிக்கை.இல்வாழ்வான், இந்த பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை முறையாக செய்ய வேண்டும்.
அடுத்தது, "தெய்வம்".
குல தெய்வத்துக்கு செய்ய வேண்டிய கடன்களை செய்ய வேண்டும்.
அதனால் பல நன்மைகள் வந்து சேரும் என்கிறார்கள்.இதுவும் நம்பிக்கை.
அடுத்தது "விருந்தினர்".
அடுத்தது, "சுற்றம்". அது பற்றி ரொம்ப சொல்ல வேண்டாம்.
கடைசியில்
"தான்" என்கிறார்.
நம்மை நாம் தான் காத்துக் கொள்ள வேண்டும்.
அதையும் இல் வாழ்வான் கடமையுள் ஒன்று என்கிறார் வள்ளுவர்.
இந்த ஐந்து கடமைகள் தவிர்த்து"இல்வாழ்க்கை" அதிகாரத்தில் மேலும் ஆறு கடமைகளை இரு குறள்கள் மூலம் சொல்கிறார்.அவை அடுத்த பதிவில்.
No comments:
Post a Comment