அவன் பெரிய செல்வந்தன்
பெரிய வீடு.
வீடெல்லாம் செல்வச் செழிப்பு மின்னுகிறது.
அவன் இறந்துவிடுகின்றான்.
வீட்டில் அவனது உடல் கிடத்தி வைக்கப் பட்டு இருக்கிறது. அவனால் அவனிடம் உள்ளவற்றையெல்லாம் உடன் எடுத்து செல்ல முடியுமா? அனுபவிக்க முடியுமா ?
அவனை விடுங்கள்..நம்மை எடுத்துக் கொள்ளுங்கள்
வாழ்நாளில் அனுபவிக்க வேண்டியவையெல்லாம் மறந்து, எந்நேரமும் "பணம்..பணம்"என அலைந்து பணம் சேர்க்கிறோம்.திடீரென மரணம் நம்மைத் தழுவும்போது.. ஈட்டிய பொருளா நம்முடன் வரும்..அதனால் என்ன பயன் நமக்கு, .
நாம் வாழ் நாள் எல்லாம் ஓடி ஆடி பொருள் சேர்க்கிறோம். எல்லா பொருள்களையும் நாம் அன்புபவிக்கப் போகிறோமா ? நாம் அனுபவிக்கப் போவது இல்லை என்றால், எதற்காக வாழ் நாள் எல்லாம் செலவழித்து அவற்றை சேர்க்க வேண்டும் ?
இதையே வள்ளுவர்
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்த தில் (1001)
அடங்காத ஆசையினால்வீடு கொள்ளாத அளவுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைத்து அதனை அனுபவிக்காமல்செத்துப்போகின்றவனுக்கு, அப்படிச் சேர்க்கப்பட்ட செலவத்தினால் என்ன பயன்?
என்கிறார்.
அப்போது..வாழ்க்கையில் செல்வமே தேவையில்லை என் கிறீர்களா? என்று கேட்டால்..
தேவை..கண்டிப்பாகத் தேவை..ஆனால்
செல்வத்தை சம்பாதிப்பதும், சேர்ப்பதும் மட்டும் அல்ல வாழ்க்கை. சேர்த்த செல்வத்தை சிறந்த முறையில் செலவழிக்கவும் தெரிய வேண்டும்.
....
நல்ல வழிகளில் பணத்தை அனுபவிக்கப் படிக்க வேண்டும்.
இதையே ஔவையார் "நல்வழி" யில் சொல்கிறார்..
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக் கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்;-கூடுவிட்டு இங்கு ஆவிதான் போயின பின்பு யாரே அனுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம்? | 22 |
பணத்துக்காகப் பாடுபட்டுகின்றனர். பணத்தைத் தேடிக்கொள்கின்றனர். தேடிய பணத்தை யாருக்கும் தெரியாமல் புதைத்து வைக்கின்றனர். அனுபவிக்காமல் மறைத்து வைக்கின்றனர். இவர்கள் கேடு கெட்ட மனிதர்கள். இப்படிக் கேடுகெட்ட மனிதரே! ஒன்று சொல்கிறேன் கேளுங்கள். உங்கள் உடம்புக் கூட்டை விட்டுவிட்டு உங்கள் ஆவி போன பின்பு அந்தப் பணத்தை யார்தான் அனுபவிக்கப் போகிறார்கள்? பாவிகளே! சொல்லுங்கள்.
No comments:
Post a Comment