நாம் எதாவது ஒரு காரியத்தை செய்யத் தொடங்க நினைத்தால், அக்காரியத்தை உடனே செய்து முடிக்க வேண்டும்..அதை தள்ளிப் போடக்கூடாது என்பார்கள்.
ஆனால்..வள்ளுவர் அதை வேறு விதமாகக் கூறுகிறார் இக்குறளில்.
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
ஆனால்..வள்ளுவர் அதை வேறு விதமாகக் கூறுகிறார் இக்குறளில்.
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.(672)
தூங்கிச் செய்ய வேண்டிய செயல்களை தூங்கிச் செய்ய வேண்டும்.தூங்காமல் செய்யும் வேலைகளை தூங்காமல் செய்ய வேண்டும்.
தூங்கிச் செய்ய வேண்டிய செயல்களை தூங்கிச் செய்ய வேண்டும்.தூங்காமல் செய்யும் வேலைகளை தூங்காமல் செய்ய வேண்டும்.
இது என்ன..இப்படிச் சொல்கிறார்...புரிந்த மாதிரியும் இருக்கிறது..புரியாதது மாதிரியும் இருக்கிறது என்கிறிர்களா?
அது என்ன தூங்கிச் செய்வது, தூங்காமால் செய்வது ?
வேலைகளை நாம இரண்டு விதமாக பிரிக்கலாம் - நல்லவை, கெட்டவை என்று.
கெட்ட காரியம் மனதில் தோன்றினால் , அதை உடனே செய்து விடக் கூடாது. கோபம் வந்தவுடன் ஏதாவது எழுதுவது, பட்ப்பது.என மனதை திசைத் திருப்ப வேண்டும்/
சிறிது நேரம் கழித்து நம் கோபமும் தணிந்துவிடும்..செய்ய நினைத்த கெட்ட காரியத்தையும் செய்திருக்க மாட்டோம்.
சிறிது நேரம் கழித்து நம் கோபமும் தணிந்துவிடும்..செய்ய நினைத்த கெட்ட காரியத்தையும் செய்திருக்க மாட்டோம்.
அதேப் போல நல்ல எண்ணம், காரியம் தோன்றினால் உடனே செய்து விட வேண்டும். தள்ளிப் போடக் கூடாது. இதைத்தள்ளிப் போட்டால்..அந்த நல்ல செயலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மாறினாலும் மாறிவிடுமாம்
எந்த வேலையும் செய்வதற்கு ஏற்ற நேரத்தில் செய்ய வேண்டும் என்பதையே இக்குறள் மூலம் வள்ளுவர் நமக்குச் சொல்கிறார்.
No comments:
Post a Comment