பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவில் சிறந்து விளங்கினால்,அது பெற்றோருக்கு மட்டுமேயின்றி உலகில் வாழும் அனைவருக்கும் மனம் மகிழ்ச்சியைத் தருவதாகும் எனும் வள்ளுவர்
சொல்லுகிறார் ஒரு குறளில்..
"பெரிதுவக்கும் சான்றோன் என கேட்ட தாய் " என..
ஏன் ?
மகன் சான்றோன் தெரியாதா ? தெரியும். இருந்தாலும், அதை நாலு பேர் சொல்ல வேண்டும். அப்போதுதான் அவளுக்கு மகிழ்ச்சியாம்.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய் (69).
நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்.
இக்குறள் மூலம் வள்ளுவர் சிறந்த மனோதத்துவ நிபுணர் என்பது தெளிவாகிறது.
சாதாரணமாகவே..நாம் செய்யும் காரியம் குறித்து, நமக்குள்ளே ஒரு பெருமிதம் இருக்கும்...எனெனும் ..அதை மற்ற ஒருவர் புகழும்போது நம் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்..இதுவே மனித இயல்பு.
இது பெண்களுக்கு சற்று அதிகம் உண்டு.அதும் தன் மகவுகள் குறித்து என்றால்..அதை மீண்டும்..மீண்டும் சொல்ல்க் கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.
இதையே, வள்ளுவர் "கேட்ட" தாய் என்கிறார்.
அது சரி,,"ஏன் ஈன்ற பொழுதின்" என்கிறார்.? "பெற்ற"பொழுதின் என சாதாரணமாக சொல்லியிருக்கலாமே!
அதிலும் விஷயம் இருக்கின்றது.
ஈன்ற எனில் ஈதல்...வழங்குவது ..ஒருதாய் உடல் முழுதும் உண்டாகும் வேதனையுடன்..இப்பூமிக்கு ஒரு உயரைத் தருகிறாள்.அவளது குடும்பம் பெறுகிறது.ஆகவே..பெறுவதை விட..ஈதல் சிறப்பு..அதனால்தான் "ஈன்ற" பொழுதின் என்றுள்ளார்.
வள்ளுவருக்கு இணை இல்லை...
வள்ளுவரைப் பெற்றமையைவிட தமிழ்த்தாய் ,,பிறர் அவரைச் சான்றோன் எனக்கூறுகையில் பெரிதுவக்கிறாள்.

No comments:
Post a Comment