Tuesday, February 11, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் -41

நம் வாழ்வில், நாம் ஈடுபட்டுள்ள துறையைத் தவிர வேறு ஒரு துறையில் ஈடுபட்டு அவர்களது தனித் திறமையினால் பிரகாசிக்கும் சிலரைப் பார்த்து, நாமும் அவரைப் போல ஆக வேன்டும் என்ற ஆசை நம்மில் பலருக்கு அவ்வப்போது ஏற்படுவது இயற்கை .

உதாரணத்திற்கு, நடிகன் ஒருவனின் நடிப்பைப் பார்ப்பவர் புகழ்ந்தால், நாமும் ஒரு நடிகனாக வர வேண்டும் என்ற ஆசை.

ஒருவன் மருத்துவம் படித்தால், தானும் அவனைப் போல மருத்துவம் படிக்க வேண்டும் எனும் ஆவல்.

சுருங்கச் சொன்னால், நம்மிடம் அதற்கான திறமை இருக்கின்றதோ இல்லையோ..ஆனால் நாமும் அப்படி ஆக வேண்டும் எனும் அதீத ஆசை இது அறிவீனம் என்பதை நாம் உணர்வதில்லை.

நம்மால் என்ன செய்ய முடியும், நமக்கு என்ன வலிமை இருக்கிறது..என்ன திறமை இருக்கிறது, என்றெல்லாம் நாம் யோசிப்பது கிடையாது.

அப்படி, தன் வலிமை என்ன என்று அறியாமல், நம்ம்குத் தெரியாத, நம்மால் முடியாதத் துறையில் ஈடுபட்டு பாதியிலேயே அதை விட்டவர்கள் பலர் உண்டு.

அதைத்தான் வள்ளுவர்..

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர் (473)

(தம்முடைய வலிமையின் அளவினை அறியாமல் உணர்ச்சிவசப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு.).

இதைச் சொன்ன வள்ளுவர் கீழே கொடுத்துள்ள குறளில் வேறு விதமாகச் சொல்கிறாரே..என நீங்கள் கேட்பது காதுகளில் விழுகிறது.

வள்ளுவருக்கும் அது தெரியும்..அதனால்தான் மேல் சொன்ன குறளில் , அனைவரும் கெட்டுப்போவார்கள் என்று சொல்லாமல் "பலர்" என் கிறார்.

ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாத தில் (472)

இக்குறளில் சொல்கிறார்..

ஒரு செயலில் ஈடுபடும் போது அச்செயலைப் பற்றிய அனைத்தும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது எதுவுமில்லை என.

(அனைத்தும் ஆராய்ந்தறியும் போதே..அச் செயல் நம்மால் முடியுமா/முடியாதா என தெரிந்து கொண்டு விடுவோம்)


.

இரண்டாவதாக,, வள்ளுவர் அப்படி காரியம் செய்யத் தொடங்கியவர்கள் எல்லோரும் தோல்வி அடைவார்கள் என்று சொல்லவில்லை. அப்படி தோற்றவர்கள் "பலர்"  என்கிறார். ஆர்வத்தை மட்டுமே கொண்டு சிலர் வெற்றி அடைந்திருக்கலாம்... ஆனால் பெரும்பாலும் அது தோல்வியில் தான் முடியும்.

No comments: