துணையோடு அல்லது நெடுவழி போகேல்...
அதாவது துணையாக யாரும் இல்லாமல் நீண்ட தூரம் பயணம் செல்லக் கூடாது.
தனியாக நெடும் பயணம் செய்யக்கூடாது..
வாழ்க்கை என்பதும் ஒருவருக்கு பெரும் பயணம்ணத்தை தொடர துணை வேண்டாமா? அத்துணையே மனைவி ஆகும்
வள்ளுவரும்,வாழ்க்கைத் துணை நலம் என்று மனைவியைக் குறிப்பிடுகிறார்
நாம் பயணம் செய்யும் போது யாரைத் துணையாகக் கொள்வோம்?
நம்மை விட பலசாலியையா அல்லது நம்மை விட பலவீனமானவனையா ?
பலசாலியைத்தானே..
துணை என்பது நம்மை விட சிறந்ததாக இருக்க வேண்டும்.
இப்படி , துணை என்பது நம்மை விட மிக மிக உயர்ந்தது.
துணை என்பது தாழ்ந்தது அல்ல.
மனைவி எப்போது வாழ்க்கைத் துணையாவாள் என்றும் வள்ளுவர் சொல்கிறார்.
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை (51)
என்கிறார்.
இல்லறத்துக்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள்.
குடும்பத்தின் நல்ல பெயருக்கு களங்கம் வராமல், வருமானத்திற்கு அதிகமாக செலவு செய்யாமல், அதிகமாக கடன் வாங்காமல்...வளத்துக்கு தக்க வாழ்பவள் வாழ்க்கைத் துணை.
No comments:
Post a Comment