செல்வம் , ஓரிடத்தில் நிற்காது சென்று கொண்டே இருக்கும்
ஒரே இரவில் பெரும் பணம் படைத்தவனை கையேந்த வைக்கும்.
கையேந்துபவனை உச்சிக்குக் கொண்டு செல்லும்.
ஆனால்..அதையும் கட்டி வைக்க முடியும் என்கிறார் வள்ளுவர்.
உங்களிடம் வந்த செல்வம் , உங்களை விட்டு போகாமல் எப்போதும் உங்களுடனேயே இருக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?..
ஒன்றே ஒன்று தான்,
காலத்தோடு சேர்ந்து வாழ வேண்டும். அவ்வளவுதான்.
ஆத்திச்சூடியில் ஔவை சொல்கிறார்.
பருவத்தே பயிர் செய்
அதாவது, பருவநிலை மாற்றங்களை அறிந்து,எந்த பருவத்தில் எதை பயிர் செய்தால் விளைச்சல் உழைப்பிற்கு கூடிவரும் என அறிந்து பயிர் செய்ய வேண்டும் என்கிறார். இது விவசாயிகளுக்கு..
அதே போல..அந்தந்தத் துறையினர், அதற்கேற்ப அவ்வப்போது செயல்பட வேண்டும்
இதைத்தான் வள்ளுவர்
பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு (482)
காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல்,அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக மையும்.
அதாவது காலத்துக்கு ஏற்ப செயலாற்ற வேண்டும்.
பகல் வேளையில் கோட்டானை காகம் வென்று விடும்.. ஆகவே காகம் வெல்ல பகல் நேரத்திற்குக் காத்திருக்க வேண்டும்..அதுபோல.எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
என
"பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது"(481)
குறளிலும்
உரிய காலத்திற்காகப் பொறுமையாகக் காத்திருப்பவர்கள் இந்த உலகத்தையே வெல்வார்கள் என..
ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின் (483)
குறளிலும் சொல்கிறார்.
இன்று என்ன செய்வது, நாளை என்ன செய்வது, இந்த வாரம், இந்த மாதம், இந்த வருடம் என்ன செய்ய வேண்டும் என்று சிந்தியுங்கள்.
அப்படி சிந்தித்து செயல் பட்டால், உங்களிடம் செல்வம் நிலைத்து நிற்கும்.
காலம் கைகூடுகையில், பொறுமையாகக் காத்திருந்து கொக்கு மீனை கொத்துவது போல காரியம் செய்து முடிக்க வேண்டும்
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடது (490)
No comments:
Post a Comment