ஒரு வேலையை செய்து முடிக்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்..
எதைப் பற்றி நாம் சொல்லவோ, எழுதவோ நினைத்தாலும், அதைப் பற்றி எல்லாம் வள்ளுவர் சொல்லி இருக்கிறார்.
அதுவும் எப்படி..ஒன்றே முக்கால் அடியில்..
சரி...இப்போது ஒரு வேலையை எப்படி செய்து முடிக்க வேண்டும் என் கிறார் தெரியுமா?
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள் (662)
இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்கிட முனைவது, மீறி வந்து விமேயானால் மனம் தளராது இருப்பது ஆகிய இரண்டு வழிகளுமே அறிவுடையோர் கொள்கையாகும்.
விரிவாகப் பார்ப்போம்..
ஒரு வேலையை எடுத்துக் கொண்டால், அதை எப்படி முடிக்க வேண்டும் என திட்டமிட வேண்டும்
.
.அதாவது, இதனால் ஏதேனும் தடைகள் வருமா? சிக்கல்கள் வருமா? என்றெல்லாம் முதலில் யோசிக்க வேண்டும்.,அதை முதலிலேயே நீக்கிட வேண்டும்.
அப்படியே அதையும் மீறி ஒரு தடை வந்தால் அதை எப்படி சரி செய்வது என யோசிக்க வேண்டும்.
மனம் தளரக்கூடாது.போராட வேண்டும் இதுவே அறிவுடையோர் ஆராய்ந்து அறிந்த வழியாகும்
அவர் மேலும் ஒரு குறளில் சொல்கிறார்..
மற்றவை எல்லாம் இருந்தும், ஒருவர் மனதில் மட்டும் உறுதி இல்லாவிட்டால் அவரது செயலிலும் உறுதி இராது என,
வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற (661).
No comments:
Post a Comment