Saturday, February 15, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 45

மருந்து அதிகாரத்திலிருந்து மேலும் குறள்கள்

947) தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
      நோயள வின்றிப் படும்

பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டால் நோய்களும் அளவின்றி வரும்

948) நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
        வாய்நாடி வாய்ப்பச் செயல்

      நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும்.

949)
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்

நோயாளியின் வயது,நோயின் தன்மை, மருத்துவம் செய்வதற்குரிய நேரம், என்பனவற்றை எல்லாம் மருத்துவம் கற்றோர் எண்ணிப் பார்த்தே செயல்பட வேண்டும்

950) உற்றான் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்
        றப்பானாற் கூற்றே மருந்து
நோயாளி, மருத்துவர்,மருந்து அருகிருந்து துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது

இந்த அதிகாரம் முழுதும், உண்ண வேண்டிய உணவு, செரிமானம்,மருத்துவர் கடமை என வாழ வேண்டிய முறை முழுதும் சொல்லியுள்ள வள்ளுவர்..செரிமானத்தைப் பற்றி இன்பத்துப்பாலில் கூட ஒரு குறளில் சொல்லியுள்ளார்.

அது என்ன எனப் பார்ப்போமா?

உணவு அருந்துவதைவிட அருந்திய உணவு செரிப்பதிலே ஒரு சுகம் உண்டாம்..அது எப்படியெனில் உடலுறவைவிட ஊடல் கொள்வதிலே காதலர்க்கு உள்ள சுக போலவாம்..

உணர்வினும் உண்ட தறலினிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது (1326)



No comments: