Sunday, February 9, 2020

வள்ளுவத்திலிருந்து தினசரி ஒரு தகவல் - 39



செல்வம் நிலையானது அல்ல. அது வரும், இருக்கும், போகும்.


அது பற்றி ரொம்பவும் கவலைப் படக் கூடாது.




மேலும், செல்வம் இருக்கும் போது அதை நல்ல வழிகளில் செலவிட வேண்டும்.

நம்மிடமுள்ள செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக் கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈடுபட வேண்டும் என்று சொல்லும் வள்ளுவர்..நம்மை விட்டு செல்வம் எப்படிப் போகும் என்பதை இக்குறளில் சொல்கிறார் பார்ப்போம்.

கூத்தாட் டவைகுழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளித் தற்று(332)



கூத்தாட்டும் அவையில் (நாடகக் கொட்டகை) உள்ள கூட்டம் போல பெருஞ்செல்வம்.அது போவதும் கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கை விட்டு செல்வதைப் போன்றதாகும்.

இக்குறளில் உள்ள நயத்தைப் பாருங்கள்..


கூத்தாட்ட அவைக்கு வரும் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக  வரும்.கூத்து ஆரம்பிக்கும் வேலையில் கொட்டகை நிரம்பி இருக்கும்.அதுபோல செல்வம் ஒருவரிடம் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகுமாம்..

ஆனால் நம்மைவிட்டுப் போகும் போது..கூட்டம் முடிந்ததும் அரங்கு முழுதும் உடனே காலி ஆவது போல உடன் நம்மை விட்டு நீங்கிவிடுமாம்

ஏழே ஏழு வார்த்தையில் செல்வம் நிலையற்றது என்பதை எவ்வளவு அழகாக சொல்லியுள்ளார் பொய்யாமொழியார்.

No comments: