அடிக்கடி நம் வீட்டுப் பெரியவர்கள், "வேளா வேலைக்கு சாப்பிடணும்..இல்லைனா வயிறு கெட்டுடும்" என சொல்வதை நாம் கெட்டிருக்கிறோம்.
அது சரியா..
அது சரியான ஒன்றா , அதற்கு வள்ளுவர் என்ன சொல்கிறார்என்று பார்ப்போம்.
நம் உடம்பு, உணவு கிடைக்கும் போது அதை பக்குவமான வழியில் சேமித்து வைத்துக் கொள்ளும். பின் தேவைப் படும் போது சேமிப்பில் இருந்து எடுத்துக் கொள்ளும்.இதுவே இயற்கை
அது என்ன சேமிப்பு..உடம்பு..என்றெல்லாம் சொல்கிறேனே எனப் பார்க்கிறீர்களா?
கொழுப்பு என்று சொல்கிறோமே, அது நமது உடம்பு சேமித்து வைத்த சக்தி.
நாம் சாப்பிடாவிட்டால் ஒன்றும் ஆகி விடாது. நம் உடம்பு, அந்த சேமித்து வைத்த கொழுப்பில் இருந்து தனக்கு வேண்டிய சக்தியை எடுத்துக் கொள்ளும். எடை குறையும்.
நாம் உணவு உண்ணுகையில், அது உள்ளே சென்று செரிமானம் ஆகி, உணவில் உள்ள சக்தியை உடம்பு எடுத்துக் கொள்ளும்.தேவைக்கு அதிகமானதை கொழுப்பாக மாற்றிக் கொள்ளும். உடல் பெருக்கும்
முன்பு உண்ட உணவு சீரணம் ஆகி முடியவில்லை. அதற்குள் மேலும் உணவை ப் போடுகிறோம். உடம்பு என்ன செய்யும்? முன்பு உண்ட உணவு அறை குறையாக சீரணம் செய்யாமல் இருப்பதை அப்படியே விட்டு விட்டு, புதிதாக வரும் உணவை கவனிக்கப் போய் விடும். சரி, இரண்டாவது உணவை சீரணம் செய்து கொண்டு இருக்கும் போது, மூன்றாவது உணவு.
இப்படி தள்ளிக் கொண்டே இருந்தால், நம் உடலில் நடக்கும் செயல் பாடுகள் பழுதாகும் தானே?
இதையே வள்லுவர் சொல்கிறார்.
முதலில் உண்ட உணவு முற்றிலுமாக சீரணம் ஆன பின், அடுத்த உணவை அறிந்து உண்க.அப்படிச் செய்தால், அது உடம்பைப் பெற்றவன் நீண்டநாள் வாழ வழி வகுக்கும்.இதையே இந்துக் குறள் சொல்கிறது.
அற்றால் அளவறுந் துண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுக்கும் ஆறு (943)
(உண்ட உணவு செரித்ததையும்,உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்டநாள் வாழ்வதற்கு வழியாகும்)
பசித்துத் தான் சாப்பிட வேண்டும்.
மேலும் இது குறித்து வள்ளுவன் சொல்லியுள்ளதை அடுத்து வரும் பகுதிகளிலும் காணலாம்.
No comments:
Post a Comment