மேன்மேலும் வாழ்வில் உயர்ந்திட வேண்டும் என எண்ணுபவர்கள், தமது செயல்களால் தமது புகழ் கெடாமல் கவனமாக இருக்க வேண்டும்..எனவும், தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்களெனவும் கீழ் கண்ட இரு குறள்களில் சொல்கிறார்.
ஓஒதல் வேண்டும் ஒளியாழ்குஞ் செய்வினை
ஆஅது மென்னு மவர் (653)
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர் (654)
எல்லாம் சரி..ஒருவேளை"ஐயோ..என்ன தவறு செய்து விட்டோம்"என்று நினைக்கும் படியான செயலைச் செய்து விட்டால் என்ன செய்வது?
எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று (655)
'என்ன தவறு செய்துவிட்டோம்" என நினைத்துக் கவலைப்படுவதற்குரிய காரியங்களைச் செய்யக்கூடாது.ஒருவேளை அப்படிச் செய்து விட்டாலும் அச்செயலை மீண்டும் தொடராதிருப்பதே நன்று.
அதாவது, தவறு செய்வது மனித இயல்பு.அப்படி செய்த தவறை உணர்ந்து , மீண்டும் அது போன்ற தவறினை செய்யக் கூடாது
ஒரேவரியில் சொல்வதானால்..மீண்டும் மீண்டும் வருந்தத் தக்க தவறுகளை செய்யக் கூடாது
No comments:
Post a Comment