Sunday, February 16, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் -46

அறம்...

அறம் செய விரும்பு...என்றார் ஔவையார்..

அறம் எனும் அற்புத சொல்லுக்கு எவ்வளவு அர்த்தம் பாருங்கள்..

அன்பாய் இருப்பது 
இனிமையாய் பேசுவது 
கடுஞ்சொறகளை தவிர்ப்பது
நல்லதையே நாடுவது
மனதில் குற்றமற்று இருப்பது
பொய்யைத் தவிர்ப்பது
சினத்தைத் தவிர்ப்பது
பொறாமை உணர்வை தவிர்ப்பது
பிறருக்குக் கெடுதல் செய்யாமை
பிறருடன் பகிர்ந்து உண்ணுவது
பிற உயிர்களைக் கொல்லாமை
தீமையில்லா வழியில் பொருளீட்டுவது
இல்லற வாழ்வில் ஈடுபடுவது
தூய துறவியரைப் பேணுவது
மானத்துடன் வாழ்வது
உயிருக்கு ஊக்கம் தருவது
இவை எல்லாமே அறம் எனப்படும்.

அறவழியைவிட, சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய வழி வேறொன்றும் இல்லை எனும் வள்ளுவருக்கு..

மனதில் குற்றமற்று இருந்தாலே போதும் என்ற எண்ணமும் தலையானதாய் இருந்திருக்கிறது.எல்லா அறத்தினையும் விட சிறந்ததாக அது தெரிகிறது.

அறன் வலியுறுத்தல் அதிகாரத்தில், பல குறள்களில் மேலே சொன்ன அறங்களைச் சொன்னவர் சொல்கிறார்..

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற (34)

மனம் தூய்மையாக இருப்பதே அறம்.,மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை

என்கிறார்.

அதாவது..ஒருவர் தன் மனசாட்சிக்கு எதிராக செய்பவை அறமாகாதாம்..

No comments: