சென்ற பதிவில் உண்ட உணவு செரித்ததையும்,உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்டநாள் வாழ்வதற்கு வழியாகும்என்று சொன்ன குறளைப் பார்த்தோம்.
நம் உடல் நலனுக்காக தேவையானவற்றை "மருந்து" எனும் அதிகாரத்தில் சொல்லியுள்ளார்.ஒவ்வொரு குறளும் மணியானவை.போற்றத்தக்கவை.அக்குறள்களும்..அவற்றின் பொருளும் இனி...
941) மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று
வாதம், பித்தம்,சிலேத்துவம் என்று மருத்துவ நூலோர் கனித்துள்ள மூன்றில் ஒன்று அளவிற்கு அதிகமானாலும், குறைந்தாலும் நோய் உண்டாகும்
942) மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி உணின்
உண்ட உணவு செரிப்பதற்கான இடைவெவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை.
944) அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து
உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து நங்கு பசியெடுத்த பிறகு உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்
945) மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபா டில்லை உயிர்க்கு
உடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவைக்கூட அதிகமாகும்போது மறுத்து அளவுடன் உண்டால் ,உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவுமில்லை
946) இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்
அளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும், அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதும் இயற்கை
(மீதி குறள்கள் அடுத்த பதிவில்)
No comments:
Post a Comment